Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
இதுல உங்க பெருவிரல் எப்படி-ன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின சுவாரஸ்யமான விஷயத்தை சொல்றோம்...
மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களின் வடிவம் மற்றும் அளவுகளும் ஒருவரைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்தும். அதுவும் நமது கை விரல்கள், குறிப்பாக கை பெருவிரல் ஒருவரது குணாதியங்களைப் பற்றி துல்லியமாக கூறும் தெரியுமா?
எப்படி கைரேகைகளைக் கொண்டு ஒருவரின் எதிர்காலம் மற்றும் குணாதிசயங்களை கூற முடிகிறதோ, அதேப் போல் மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களின் வடிவம் மற்றும் அளவுகளும் ஒருவரைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்தும். அதுவும் நமது கை விரல்கள், குறிப்பாக கை பெருவிரல் ஒருவரது குணாதியங்களைப் பற்றி துல்லியமாக கூறும் என்பது தெரியுமா?

மற்ற விரல்களைப் போலன்றி, நமது பெருவிரல் இரண்டு பகுதிகளைக் கொண்டது மற்றும் அது மற்ற உயிரினங்களிடம் இருந்து மனிதனை தனித்துவமாக்குகின்றன. இது தவிர, பெருவிரலின் வெவ்வேறு வடிவங்கள் ஒருவரிடமிருந்து நம்மை வேறுபடுத்தி காட்டுவதோடு, வெவ்வேறு குணாதியங்களையும் வெளிப்படுத்துகின்றன. இப்போது பெருவிரலின் அளவு மற்றும் வடிவங்களையும், அவை ஒருவரைப் பற்றி கூறும் விஷயங்களையும் காண்போம்.

வகை 1
படத்தில் காட்டப்பட்டவாறு உங்கள் பெருவிரலின் மேல் பகுதி பெரிதாகவும், கீழ் பகுதி சிறியதாகவும் இருந்தால், நீங்கள் மற்றவர்களை விட பெரிய கனவுகளைக் கொண்டவராக இருப்பீர்கள். அனைத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புவீர்கள். ஓய்வு நேரத்தில் கூட, வாழ்க்கையை மேம்படுத்த அடுத்து என்ன செய்வது என்று எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். வெற்றி பெற வேண்டும் என்ற உங்களின் உறுதி தான் உங்களின் பலம். மேலும் இவர்கள் பெரும்பாலும் அதிகம் உணர்ச்சிவசப்படமாட்டார்கள். வாழ்க்கை சிறப்பாக இருக்க இந்த மாதிரி பெருவிரலைக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையை சமநிலையில் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது.

வகை 2
படத்தில் காட்டப்பட்டவாறு உங்கள் பெருவிரலின் மேல் பகுதி சிறியதாகவும், கீழ் பகுதி பெரியதாகவும் இருந்தால், அவர்கள் பணிவானவர் மற்றும் கனிவானவர். அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ்வார்கள். வாழ்வில் எப்போதும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் காண முனைவார்கள். மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். சிறு விஷயங்களில் கூட அதிக மகிழ்ச்சி அடைவார்கள். வாழ்க்கையில் முக்கியமான விஷயம் பொருளோ, நிதியோ அல்ல, மற்றவர்கள் மனதை வென்று, சுற்றியிருப்பவர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வது தான் என்று நினைப்பவர்கள்.

வகை 3
படத்தில் காட்டப்பட்டவாறு பெருவிரலின் இரண்டு பகுதிகளும் ஒரே அளவில் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் சமநிலையைப் பராமரிக்க முயற்சிப்பார்கள். வாழ்வில் எவ்வளவு தடைகளை சந்தித்தாலும், நேர்மறையான எண்ணம் மற்றும் நம்பிக்கையால் தங்களின் திறமையைக் கொண்டே சிறந்த முடிவைப் பெறுவார்கள். எப்போதும் திட்டமிட்டு செயல்படுவார்கள் மற்றும் அளவுக்கு அதிகமாக சிந்திக்கமாட்டார்கள்.

வகை 4
உங்களின் பெருவிரல் படத்தில் காட்டப்பட்டவாறு வளையக்கூடியவாறு இருந்தால், அத்தகையவர்கள் திறந்த மனதுள்ளவர்களாக கருதப்படுகிறார்கள். எதையும் வேகமாக கற்றுக் கொள்பவராக இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் திறனைக் கொண்டிருப்பார்கள். மனதில் ஒரு விஷயத்தை நம்பிக் கொண்டிருந்து, மற்றொருவர் வேறொரு கருத்தைக் கூறினால், அதை ஏற்றுக் கொள்ளக்கூடியவராக இருப்பார்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்டிருப்பார்கள். இதனால் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் இதயம் சொல்வதை கெட்டு நடப்பார்கள்.

வகை 5
பெருவிரலானது படத்தில் காட்டப்பட்டவாறு நேராக இருந்தால், அவர்கள் எதையும் வெளிப்படையாக பேசுவார்கள். வலுவான ஆளுமை உடையவராக இருப்பார்கள். தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பார்கள் மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து அந்த தன்னம்பிக்கை பிடிவாதமாக மாறும். இத்தகையவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும். ஏனெனில் மாற்றமானது வாழ்க்கை சிறப்பாக மேம்படுத்தும். முக்கியமாக நேர்மை இவர்களுக்கு மிகவும் முக்கியமானது.



Click it and Unblock the Notifications