Latest Updates
-
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க..
இந்த வடிவ பற்களை உடையவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் இருக்குமாம் தெரியுமா?
பற்கள் என்பது நமது உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். நாம் போற்றி பாதுகாக்க வேண்டிய முக்கியமான நம் உடலின் முக்கியமான பாகம் பற்களாகும்.
பற்கள் என்பது நமது உடலின் மிகவும் முக்கியமான பாகங்களில் ஒன்றாகும். நாம் போற்றி பாதுகாக்க வேண்டிய முக்கியமான நம் உடலின் முக்கியமான பாகம் பற்களாகும். நமது முகத்திற்கு அழகை வழங்குவதில் பற்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். பற்கள் உங்களின் அழகை மட்டும் பிறருக்கு காட்டுவதில்லை, உங்களின் ஆளுமையையும் காட்டுகிறது.

நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் நமது அகத்தின் அழகை பிறருக்கு காட்டும் அதற்கு நமது பற்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்த பதிவில் உங்கள் பற்களின் வடிவம் உங்களின் ஆளுமையைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

குவிந்த பற்கள்
குவிந்த பற்கள் உடையவர்கள் அதிகம் பேசக்கூடியவர்களாகவும், விவாதத்தில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பார்கள். மற்றவர்கள் எப்பொழுதும் தனது பேச்சுக்கு ஆம் என்று சொல்ல வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்ப்பார்கள். இவர்களால் ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ள முடியாது. மற்றவர்களை சொற்களால் காயப்படுத்த இவர்கள் தயங்கமாட்டார்கள் என்பதால் இத்தகைய நபர்களுடன் எச்சரிக்கையுடன் நடப்பது நல்லது.

குழி போன்ற பற்கள்
குழி போன்ற பற்களை உடையவர்கள் குவிந்த பற்கள் கொண்டவர்களுக்கு நேர்மாறாக இருப்பார்கள். பொதுவாக இந்த பற்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கூறப்படுகிறது, இந்த வகையான பற்கள் இருந்தால் அதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து விடுவது நல்லது. பொதுவாக குழி போன்ற பற்களை கொண்டவர்களுக்கு மரபணு நோய் இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

கூர்மையான பற்கள்
கூர்மையான பற்கள் கொண்டவர்கள் அதிக சுட்டித்தனத்துடன் இருப்பார்கள். இந்த வகையான பற்களை கொண்டவர்கள் திறமை வாய்ந்தவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் திறமையானவர்கள் என்பதை நிரூபிக்கும் புத்திசாலிகளாக இருப்பார்கள், கணிதத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் முயற்சிக்கும் எந்தவொரு விஷயத்திலும் பெரும்பாலும் நல்ல தொடக்கத்தைக் கண்டாலும், அவர்கள் வழியில் பல தடைகளை எதிர்கொள்வார்கள்.

குவிந்த மற்றும் குழிவான பற்கள்
இந்த வகை நபர்களில், அவர்களின் பற்களின் கீழ் பகுதி குவிந்திருக்கும், மேல் பகுதி குழிவானதாக இருக்கும். பற்களில் இந்த வகையான உடற்கூறியல் தலைகீழான பற்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இவர்கள் சிறந்த சொற்பொழிவார்களாக இருப்பார்கள், இவர்கள் தங்கள் கருத்துக்களை மற்றவர்களை ஒப்புக்கொள்ள வற்புறுத்துவார்கள். மற்றவர்கள் விரும்பியதை செய்ய அவர்களை ஊக்குவிப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் அதிர்ஷ்டமில்லாதவர்களாக இருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் இவர்கள் வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.

சீரற்ற பற்கள்
இந்த வகையான பற்கள் உள்ளவர்களுக்கு பெரிய மற்றும் சிறிய பற்களின் கலவையும் கூர்மையான மற்றும் மழுங்கிய பற்களும் இருக்கும். அதிக அளவு கிரகிக்கும் சக்தியைக் கொண்டிருப்பதால் அவர்கள் பொதுவாக பேராசைக் கொண்டவர்களாக இருப்பார்கள். எப்பொழுதாவதுதான் மற்றவர்களைப் பற்றி இவர்கள் சிந்திப்பார்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை கொடுமைப்படுத்துவார்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்படாத நடத்தையை வெளிப்படுத்துகிறார்கள்.

பற்களை விட ஈறுகள் அதிகமிருப்பது
பற்களை விட ஈறுகள் அதிகமிருப்பவர்கள் குடும்ப உறவுகளில் அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு பிரிந்து விடுவார்கள். குடும்ப உறுப்பினர்களைக் காட்டிலும் நண்பர்கள் மீது இவர்கள் அதிக பாசத்துடன் இருப்பார்கள். பொதுவாக சீரற்ற வாய்வழி அமைப்பு உள்ளவர்கள் நம்பகமானவர்கள் அல்ல என்பதால் இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

கும்பலான பற்கள்
கும்பலான பற்கள் கொண்டவர்கள் அதிக செயல்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் கற்பனைத் திறனும், ஆக்கபூர்வமான சிந்தனையும் கொண்டவர்களாக இருப்பதால் புதுமையான யோசனைகளை கொண்டு வருபவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் நேர்மையுடன் இருக்கும் இவர்கள், மற்றவர்களுடன் ஒரு உணர்ச்சிபூர்வமான உறவை வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் மிகவும் நேசமானவர்கள் மற்றும் நண்பர்களை எளிதாக உருவாக்குவார்கள். புதிய சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் மற்ற மக்களுடன் எளிதாக பழக முடியும்.



Click it and Unblock the Notifications