Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
வெறும் பூண்டை கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் தீயசக்திகளை எப்படி விரட்டலாம் தெரியுமா?
நமது வீடானது எதிர்மறை ஆற்றலால் நிறைந்திருக்கும்போது வீட்டில் குழப்பங்களும், பிரச்சினைகளும், துரதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும்.
நமது வீட்டில் மகிழ்ச்சி நிலைபெற்றிருக்க நம் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் இருக்க வேண்டியது அவசியம். நேர்மறை ஆற்றல் அதிகமிருக்கும் இடத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும். அதேசமயம் நமது வீடானது எதிர்மறை ஆற்றலால் நிறைந்திருக்கும்போது வீட்டில் குழப்பங்களும், பிரச்சினைகளும், துரதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும்.

நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்க நமது சில செயல்கள்தான் காரணம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் வாஸ்து சாஸ்திரத்தின் படி நமது வீட்டில் துரதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

அசுத்தமான வீடு
வீட்டை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதற்கான நிச்சயமான வழியாகும். ஒரு வீடு எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் இருக்க வேண்டும். துர்நாற்றம் உள்ள வீடு எதிர்மறை ஆற்றலின் பிறப்பிடமாகும்.

கையில் இனிப்புகளை வைத்திருப்பது
உங்கள் வீட்டில் யாராவது உங்களுக்கு இனிப்புகளை வழங்கினால், உடனடியாக அதனை சாப்பிட்டு விடுங்கள், அதனை இங்கேயும் அங்கேயும் வைக்க வேண்டாம். உங்கள் கையில் ஒரு இனிப்புடன் சுற்றித் திரிவது ஈக்களை ஈர்ப்பது மட்டுமல்லாமல் எதிர்மறை ஆற்றலையும் ஈர்க்கிறது.

அழுக்கு உடைகளை அணிவது
அழுக்கு ஆடைகளை அணிவது கிருமிகளின் பிறப்பிடம் என்பது வெளிப்படையானது என்று நாம் அறிவோம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி அழுக்கு உடைகளை அணிவது என்பது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

வீட்டில் தெய்வங்கள்
வீட்டில் சாமி படங்களை ஒன்றுக்கொன்று எதிர் திசையில் இருக்கும்படி வைப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும். தெய்வங்கள் எப்பொழுதும் தனித்தனியாக வைக்கப்பட வேண்டும். அவர்களின் முகம் ஒருபோதும் ஒன்றுக்கொன்று எதிர்கொள்ளக்கூடாது. உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதுஎன்பதை சில அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

விமர்சனங்கள்
உங்கள் வீட்டில் எதிர்மறை சக்திகள் அதிகமிருக்கும் போது வீட்டில் அதிக விமர்சனங்கள் நிறைந்திருக்கும். எதிர்மறை ஆற்றல் அதிகமிருந்தால் உங்கள் மீது குடும்பத்தினர் எப்பொழுதும் விமர்சனங்களை வைப்பார்கள், நீங்கள் குடும்பத்தினர் மீது கூச்சலிடடு கோபப்படுவார்கள்.

தவறாக உணருவது
வீட்டில் ஏதாவது தவறாக நடப்பது போன்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். நீங்கள் ஏதவாது தவறாக செய்வீர்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் ஏதாவது குழப்பங்களை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை எப்படி நீக்குவது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

உப்பை பயன்படுத்துங்கள்
உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வாஸ்து சாஸ்திரத்தின் படி சிறந்த வழி உப்பை பயன்படுத்துவதாகும். உப்பை நீரில் கலந்து உங்கள் வீடு முழுவதும் தேய்க்கவும், மேலும் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஒரு கிண்ணத்தில் உப்பை வைக்கவும்.

வீட்டை சுத்தம் செய்யவும்
தினமும் வீட்டை சுத்தம் செய்ய இயலாவிட்டாலும் வாரம் ஒருமுறையாவது உங்கள் வீட்டை சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக அதிக அழுக்கு சேரும் இடங்களான திரைச்சீலைகள், பெட்ஷீட்டுகள் மற்றும் தரைவிரிப்புகளை அடிக்கடி தூய்மைப்படுத்தவும்.

சத்தங்கள்
அறை அமைதியாக இருப்பதைத்தான் அனைவரும் விரும்புவார்கள், அது நல்லதாகவே இருந்தாலும் அறை எப்பொழுதும் அமைதியாக இருப்பது நல்லதல்ல. அதிக சத்தம் வீட்டிலுள்ள ஆற்றல் வடிவங்களை உடைத்து அவற்றை சிதறடிக்கும். அவ்வப்பொழுது அறையில் இசையை ஒலிக்க விடுங்கள்.

ஜன்னல்
வானிலை அனுமதிக்காவிட்டாலும் அவ்வப்போது ஜன்னல்களை திறந்து வைக்கவும். புதிய காற்று வீட்டில் நல்ல மற்றும் நேர்மறை ஆற்றலை ஊக்குவிக்கிறது. நீங்கள் பின்னர் ஜன்னல்களை மூடலாம்.

பர்னிச்சர்கள்
ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் உங்கள் வீட்டின் பர்னிச்சர்களின் இடத்தை மாற்றியமைக்கவும். சோபாவை அங்கும் இங்கும் நகர்த்தி பழைய சோபா அட்டைகளை புதியவற்றால் மாற்றவும். பர்னிச்சர்களை மாற்றியமைக்கும் முன் அந்த இடத்தை நன்கு சுத்தம் செய்யவும்.

பூண்டு
பருத்தித் துணியில் சில பூண்டு பற்களை கட்டி எதிர்மறை ஆற்றல் இருப்பதாக நீங்கள் நினைக்கும் இடத்தில்தொங்க விடுங்கள். இதனை வீட்டின் நுழைவாயிலில் கட்டி விடுவது மிகவும் நல்லது. இது வீட்டிற்குள் பேயை நுழைய விடாமல் தடுப்பதாக நம்பப்படுகிறது. அடிக்கடி இதனை புதிய பூண்டுகளைக் கொண்டு மாற்றவும்.



Click it and Unblock the Notifications