For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!

புத்தாண்டை கொண்டாடும் விதம் ஒவ்வொரு கலாச்சாரத்தை சேர்ந்த மக்களுக்கும் வேறுபடுகிறது.மற்ற நாட்டு மக்கள் புத்தாண்டை பல வித்தியாசமான வழிகளில் கொண்டாடுகிறார்கள்.

|

புத்தாண்டு நெருங்க இன்னும் சில நாட்களே இருக்கிறது, புத்தாண்டு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. விஷயங்களை புதிதாக தொடங்கவும், வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் புத்தாண்டு நமக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நாளாக இருக்கிறது. புத்தாண்டை கொண்டாடும் விதம் ஒவ்வொரு கலாச்சாரத்தை சேர்ந்த மக்களுக்கும் வேறுபடுகிறது.

new year traditions from around the world

நம் நாட்டு மக்களை பொறுத்தவரை புத்தாண்டு அன்று புதிய ஆடைகளை உடுத்துவது, கோவிலுக்குச் செல்வது, நண்பர்களை பார்த்து வாழ்த்துக்கள் சொல்வது இதுதான் புத்தாண்டு. ஆனால் மற்ற நாட்டு மக்கள் புத்தாண்டை பல வித்தியாசமான வழிகளில் கொண்டாடுகிறார்கள். இந்த பதிவில் உலகம் முழுவதும் புத்தாண்டை கொண்டாடும் விசித்திர முறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தென் அமெரிக்கா

தென் அமெரிக்கா

ஆடை அணிவது என்பது புத்தாண்டு தினத்தின் ஒரு பெரிய பகுதியாகும், இது இரவு உணவுத் திட்டங்கள் மற்றும் நடனம் என அனைத்தையும் உள்ளடக்கியது. தென் அமெரிக்காவை பொறுத்தவரை அங்கு புத்தாண்டிற்கு இரண்டே உடைகள்தான். புதிய ஆண்டில் அன்பை விரும்புகிறவர்கள் சிவப்பு நிற உடையையும், பணத்தை விரும்புகிறவர்கள் மஞ்சள் நிற ஆடையையும் அணிவார்கள்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவை பொறுத்தவரை புத்தாண்டு மிகவும் ஆடம்பரமாகவும், ஆர்வமாகவும் கொண்டாடப்படுகிறது. வீதிகளில் அணிவகுப்பில் பங்கேற்கும் மக்கள் பட்டாசுகள் வெடிப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.

ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து

மோசமான ஆவிகள் நம்மைத் தூய்மைப்படுத்த நெருப்பு பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டின் தீமைகளை எரிக்க நெருப்பு பந்துகள் எறியப்படுகிறது. இவ்வாறுதான் ஸ்காட்லாந்து மக்கள் புத்தாண்டடை கொண்டாடுகிறார்கள். இந்த பாரம்பரியம் ஹொக்மனே பண்டிகையில் ஆழமாக வேரூன்றியுள்ளது, அதாவது ஆண்டின் கடைசி நாள்.

MOST READ: இந்த ராசிக்காரங்க மாதிரி ஸ்ட்ராங்கா காதலிக்க யாராலும் முடியாதாம் தெரியுமா?

பனாமா

பனாமா

அரசியல்வாதிகள் எல்லா நாடுகளிலும் வெறுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே பனாமாவில், புத்தாண்டு பாரம்பரியம் என்னவென்றால், அரசியல் நபர்கள் மற்றும் பிரபலமான பிரபலங்களின் உருவங்களை முனெகோஸ் என்னும் நெருப்பில் எரிப்பதுதான்.

கொலம்பியா

கொலம்பியா

ஒவ்வொருவரின் பட்டியலிலும் பயணம் உயர்ந்த இடத்தில் உள்ளது, எனவே புத்தாண்டில் நல்ல பயண அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதற்காக, உள்ளூர்வாசிகள் பயண வாய்ப்புகளுடன் ஆசீர்வதிக்கப்படுவதற்காக வீட்டின் வாசலில் வெற்று சூட்கேஸ்களை வைக்கிறார்கள்.

ஜப்பான்

ஜப்பான்

கடவுள் நம்பிக்கை உள்ள ஜப்பானியர்கள் புத்தாண்டு மாலையில் விலங்கு உருவ உடைகளை அணிகிறார்கள், அதாவது அவர்களின் அடுத்த ஆண்டிற்கான ராசி விலங்கின் ஆடைகளை அணிவார்கள். இந்த ஆடையை அணிந்து கொண்டு கோவிலில் மணியை 108 முறை ஒலிப்பது புனிதமானதாக கருதப்படுகிறது.

MOST READ: வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!

டென்மார்க்

டென்மார்க்

டென்மார்க் மக்கள் மிகவும் வித்தியாசமான முறையில் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டுக் கதவில் கண்ணாடிகள், கிண்ணங்கள் மற்றும் தட்டுகளை எறிந்து அதை உடைத்து புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்.

பின்லாந்து

பின்லாந்து

பின்லாந்து மக்களின் கொண்டாட்டமும் வித்தியாசமானதுதான். உருகிய தகரத்தை குளிர்ந்த நீரில் போடுவதன் மூலம் ஒருவரின் எதிர்காலத்தை கணிக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இப்போது அந்த உலோகம் என்ன வடிவம் எடுக்கிறதோ அதுதான் அவர்களுக்கு எதிர்காலத்தில் காத்திருக்கிறது. ஒரு மோதிரம் அல்லது இதயம் அன்பையும் திருமணத்தையும் குறிக்கும், அதே நேரத்தில் ஒரு கப்பல் பயணத்தைக் குறிக்கிறது, அது ஒரு பன்றியாக இருந்தால், அது இயற்கையாகவே நிறைய உணவைக் குறிக்கிறது.

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் மக்கள் புத்தாண்டில் செழிப்பைக் குறிக்கும் ‘சுற்று' வடிவத்தை விரும்புகிறார்கள். புத்தாண்டை வரவேற்க, பிலிப்பினோக்கள் வட்ட வடிவ பழங்களை இரவு உணவு மேசையில் குவிக்கிறார்கள், சிலர் கடிகாரம் 12 மணி ஆகும்போது சரியாக 12 பழங்களைக் சாப்பிடுகிறார்கள்.

MOST READ: அதீத காதலால் ஆண்கள் செய்யுற இந்த முட்டாள்தனங்கள் பெண்களுக்கு வெறுப்பைத்தான் தருகிறதாம்...

எஸ்தானியா

எஸ்தானியா

எஸ்தானியர்களுக்கு உணவுதான் முன்னுரிமை, அவர்களின் புத்தாண்டு பாரம்பரியம் என்பது புத்தாண்டு தினத்தில் ஏழு முறை சாப்பிடும் நடைமுறையைப் பின்பற்றுவதாகும். இதனால் அவர்கள் அனைவரும் வரும் ஆண்டில் ஏராளமான உணவை ஆசீர்வாதமாக பெறுவார்கள்.

சிலி

சிலி

புத்தாண்டில் யாருக்குத்தான் பணத்தின் மீதும், நல்ல நேரத்தின் மீதும் ஆசையில்லாமல் இருக்கும். எனவே சிலி நாட்டை சேர்ந்த மக்கள் புத்தாண்டு அன்று அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஸ்பூன் பருப்பை சாப்பிடுகிறார்கள்.

பொலிவியா

பொலிவியா

அதிர்ஷ்ட பிஸ்கட்களில் உள்ள அதிர்ஷ்டத்தைப் போலவே, பொலிவிய உள்ளூர்வாசிகளும் நாணயங்களை கேக்குகளுக்குள் வைத்து சமைக்கிறார்கள். இப்போது யார் இந்த நாணயங்களை தங்கள் துண்டுகளில் கண்டாலும் அவர்கள் அடுத்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.

MOST READ: நாம படத்துல பார்த்த டைனோசர் எல்லாமே பொய்யா? உண்மையான டைனோசர்கள் எப்படி இருந்துச்சு தெரியுமா?

அயர்லாந்து

அயர்லாந்து

அயர்லாந்தில் திருமணம் ஆகாத பெண்கள் புத்தாண்டு அன்று இரவு தூங்கும்போது தலையணைக்கு அடியில் மைல்கற்களை வைத்துக்கொண்டு தூங்குவார்கள். இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அடுத்த ஆண்டில் திருமணம் நடக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird New Year Traditions From Around The World

Here is the list of some weird new year traditions from around the world
Story first published: Thursday, December 12, 2019, 10:43 [IST]
Desktop Bottom Promotion