For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரர்கள் எல்லாம் காதல் வலையில் விழப்போகிறார்கள்...!

வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது. வரப்போகிற ஏழு நாட்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் தீருமா? அல்லது புதிய பிரச்சினைகள் வருமா? இந்த வாரம் எப்படி இருக்கும்.

|

வாழ்க்கை என்பது ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது. வரப்போகிற ஏழு நாட்களில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் தீருமா? அல்லது புதிய பிரச்சினைகள் வருமா? இந்த வாரம் எப்படி இருக்கும். 2020 ஆம் ஆண்டின் 2 வது மாதமான பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும். 12 ராசிக்காரர்களும் ராசி பலனை படிங்க. சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்திருக்கும். சிலருக்கு இந்த ராசிகள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும். இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் இருக்கும் என்பதை இந்த வார ராசி பலன்களில் கூறியுள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் ரொம்ப கஷ்டமான காலம்னு தான் சொல்லனும். வேலைப்பளு இருக்குறதுனால வீட்டு பிரச்சனையை சமாளிக்க முடியாம திணறுவீங்க. அது உங்க மனசையும் உடம்பையும் பலவீனப்படுத்திடும். வாழ்க்கைன்னா ஏத்த இறக்கம் சகஜம்கிறதை நீங்க புரிஞ்சி நடந்துக்கோங்க, இதுவும் கடந்துபோகும்னு நினைச்சி நிலைமையை புரிஞ்சி நடந்துக்கிட்டா ரொம்பவே நல்லது. இந்த சமயத்துல உங்க ஒய்ஃபும் உங்களுக்கு சப்போர்ட்டா இருப்பாங்க. பண வரவு இந்த வாரம் நார்மலாவே இருக்கும். அதனால எதையும் நிதானிச்சி செலவழிக்கிறது நல்லது. ஹெல்த் கண்டிஷனும் இந்த வாரம் கொஞ்சம் டல்லாவே இருக்கும். கவனமா நடந்துக்கோங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 24

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

ரிஷபம்

ரிஷபம்

இந்த வாரம் வேலைப்பளுவால ரொம்பவே கடுப்பாவீங்க. என்னதான் மாஞ்சி மாஞ்சி வேலை பார்த்தாலும் அதுக்குண்டான மரியாதையை யாரும் கொடுக்கமாட்டேங்குறாங்கன்னு மனசு வெறுத்துடுவீங்க. உங்க மன கஷ்டத்தை ஆஃபீஸ்ல சீனியர் கிட்ட சொல்லி சரிபண்ணுங்க. மூடி மறைச்சி கமுக்கமா இருந்தா பின்னாடி வருத்தப்பட வேண்டியதிருக்கும். லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் அமோகமா இருக்கும். மேரேஜ் ஆனவங்களுக்கு இந்த வாரம் சந்தோஷமா நகரும். எதிர்காலத்தை பத்தி திங்க் பண்ணி நல்ல முடிவெடுப்பீங்க. இந்த வாரம் பண வரவும் நார்மலா இருக்கும். ஹெல்த் கண்டிஷனம் இந்த வாரம் நார்மலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

மிதுனம்

மிதுனம்

இந்த வாரம் அமோகமான வாரம். எந்த முயற்சி எடுத்தாலும் அதுல ஜெயிச்சி காட்டுவீங்க. அது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். எதிர்பாராத பணவரவு வர்றதுக்கு வாய்ப்பிருக்குது. அதனால நல்லதொரு இன்வெஸ்ட்மெண்ட் பண்றதுக்கு வழி பிறக்கும். உங்களுக்கு வேண்டாதவங்க உங்களை கவுக்குறதுக்கு டைம் பாத்துக்கிட்டு இருக்காங்க, கவனமா நடந்துக்கோங்க. இந்த சந்தர்ப்பத்துல உங்க ஒய்ஃப் கூட சண்டை வர்றதுக்கு வாய்ப்பிருக்கு, அதனால வீட்டு சூழ்நிலையும் அமைதியில்லாம இருக்கும். இருந்தாலும் உங்களை பெத்தவங்களோட சப்போர்ட் உங்களுக்கு பக்க பலமா இருக்கும். கல்யாணம் ஆகாதவங்களா இருந்தா, அதைப் பத்தி பேச்சுவார்த்தை வீட்டுல நடக்கலாம். ஆஃபீஸ் வேலையை கஷ்டப்பட்டு முடிப்பீங்க. அதனால உங்க சீனியரோட சப்போர்ட்டும் உங்களுக்கு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நாள் : திங்கள்கிழமை

கடகம்

கடகம்

இந்த வாரம் உங்க நிதி நிலைமை நார்மலா இருக்கும். இருந்தாலும் கன்னாபின்னான்னு செலவழிக்கிறதை கம்மி பண்றது நல்லது. அதனால நகை நட்டு வாங்குறதா இருந்தா கையை கொஞ்சம் கட்டிக்கோங்க. பிசினஸ் பண்றவரா இருந்தா புதுசா ஏதாச்சும் பண்றதை தள்ளிப் போடுறது நல்லது. கூடவே கூட்டு சேர்ந்து பிசினஸ் பண்றதையும் அவாய்ட் பண்ணிடுங்க. மேரேஜ் லைஃப் சந்தோஷமாவும் அமைதியாவும் நகரும். லவ் பண்றவங்களா இருந்தா, உங்களோட ரிலேஷன்சிப்பை கொஞ்சம் நெருக்கமா வச்சிக்கிறது நல்லது. இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் டல்லாவே இருக்கும். அதனால அலட்சியமா இருக்காம எதுக்கும் உங்க டாக்டரை போய் கண்ஷல்ட் பண்ணிக்கிறது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் :ப்ரவுன்

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நாள் : வியாழக் கிழமை

சிம்மம்

சிம்மம்

இதுவரைக்கும் பெர்சனல் லைஃபை பத்தி கண்டுக்காம இருந்தீங்க. இந்த வாரம் அதுக்கு டைம் கிடைக்கும். உங்க ஃபேமிலி மெம்பர்ஸோட சப்போர்ட்டும் உங்களுக்கு கிடைக்கும். இந்த வாரம் பண வரவும் இந்த வாரம் அமோகமா இருக்கும். இருந்தாலும் செலவுங்களை கண்ட்ரோல் பண்ணிக்கிறது நல்லது. இல்லேன்னா வாரக் கடைசியில செலவுக்கு திண்டாடிடுவீங்க. ஏதாச்சம் இண்வெஸ்ட் பண்ற ஐடியா இருந்தா அதுக்கு இது சரியான டைம் கிடையாது. வேலை பாக்குற இடத்துல நிலைமை உங்களுக்கு சாதகமாவே இருக்கும். உங்களை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைப்பாங்க. அதை நீங்க முழுசா பயன்படுத்திக்கிட்டா எதிர்காலத்துக்கு பயன்படும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 09

அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்றுக்கிழமை

கன்னி

கன்னி

கலைத்துறை சம்பந்தப்பட்டவங்களுக்கு இந்த வாரம் சில முன்னேற்றங்கள் ஏற்படலாம். உங்களைப் பத்தி எல்லோரும் பெருமையா பேசுவாங்க. வேலை விசயமா வெளியூர் பிரயாணம் பண்றதுக்கு வாய்ப்பிருக்கும். அதை சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிக் காட்டி முதலாளிகிட்ட நல்ல பேர் எடுப்பீங்க. பார்ட்னர்ஷிப் பிசினஸ் பண்றவங்களா இருந்தா, உங்க பார்ட்னரோட வார்த்தைக்கு மதிப்பு கொடுங்க. இந்த வாரம் உங்க பெர்ஷனல் லைஃப்ல சந்தோஷம் பொங்கும். கல்யாணம் ஆனவரா இருந்தா ஒய்ஃப் கூட ரொம்ப அந்நியோன்யமா இருப்பீங்க. லவ் பண்றவரா இருந்தா கல்யாணத்துக்கு தேதி குறிக்கிறது நல்லது. இந்த வாரம் உங்க ஹெல்த் கண்டிஷன் நார்மலா இருந்தாலும், ரொம்ப டென்ஷனா இருப்பீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

துலாம்

துலாம்

இந்த வாரம் ரொம்ப பிஸியாவே இருப்பீங்க. ஒரே சமயத்துல ரெண்டு மூணு வேலையை சேர்த்து பார்க்க வேண்டியதிருக்கும். இருந்தாலும் எதையும் ப்ளான் பண்ணி வேலை செஞ்சா எல்லா வேலையையும் ரொம்ப ஈசியா முடிச்சிடலாம். அதனால உதவிக்கு யாரையும் எதிர்பார்க்காம தன் கையே தனக்கு உதவின்னு நினைச்சிக்கிட்டு வேலையை செஞ்சி முடிச்சிடுறது நல்லது. இந்த வாரம் ரொம்பவே டென்ஷனா இருக்குறதுனால நாக்கை கொஞ்சம் அடக்கி வச்சிக்கிடறது நல்லது. யாராச்சும் உங்களை சீண்டுறது மாதிரி பேசுனா கண்டுக்காம போயிடறது நல்லது. இந்த வாரம் பண வரவும் மந்தமாவே இருக்கும். அது உங்களை ரொம்பவே கவலைப் பட வைச்சிடும். அதனால செலவுங்களை ப்ளான் பண்ணி செய்றது நல்லது. இந்த வாரம் ஃபேமிலி மெம்பர்ஸுங்க கூட ரிலேஷன்சிப் நார்மலா இருக்கும். இருந்தாலும் ஒய்ஃப் கூட சின்னதா மனக்கசப்பு உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த வாரம் உங்க ஃபேமிலி மெம்பர்ஸுங்க கூட மனசு விட்டு பேசுவீங்க. எதிர்கால திட்டத்தைப் பத்தி அவங்ககிட்ட பேசி அவங்களோட சம்மதத்தையும் வாங்குவீங்க. அதனால நீங்க எடுக்குற முடிவுக்கு உங்க அப்பாவும் சப்போர்ட்டிவா நடந்துக்குவார். கூடவே நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலியா ஃபீல் பண்ணுவீங்க. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் ப்ரமோஷன் கிடைக்க வாய்ப்பிருக்குது. பிசினஸ் பண்றவங்களா இருந்தா நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பிருக்குது. புதுசா பிசினஸ் பண்றதுக்கும் இது நல்ல டைம். குடும்ப பொருளாதார சூழ்நிலையும் நார்மலா இருக்கும். பணப்பிரச்சனை இல்லாததுனால, குடும்பத்துக்கு தேவையானதை வாங்க வாய்ப்பிருக்கு. ஹெல்த் கண்டிஷனும் இந்த வாரம் நார்மலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண்: 32

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

தனுசு

தனுசு

லவ் பண்றவங்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரம். லவ் ப்ரபோசல் பண்றதா இருந்தா தைரியமா சொல்லிடலாம். அந்த பக்கத்துல இருந்து உங்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். கல்யாணம் ஆனவரா இருந்தா ஒய்ஃப் கூட மனசு விட்டு பேசிடறது நல்லது. காரணம் சமீப காலமா உங்களுக்குள்ளாற ரிலேசன்ஷிப் அவ்வளவு நார்மலா இல்லை. அதனால கவனமா நடந்துக்கோங்க. இந்த வாரம் உங்க ஃபைனான்ஸ் பொசிஷனம் நார்மலா இருக்கும். பெரிசா ஒரு பணவரவு கிடைக்க வாய்ப்பிருக்குது. இருந்தாலும் செலவை கட்டுப்படுத்திக்கிறது நல்லது. ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்க கூட வேலை பாக்குறவங்களை அனுசரிச்சி போறது நல்லது. யாரையும் பகைச்சிக்க வேண்டாம். இந்த வாரம் உங்க அம்மாவோட ஹெல்த் கண்டிஷன் நார்மலாகிடும். உங்களோட ஹெல்த் கண்டிஷனும் இந்த வாரம் நார்மலா இருக்கும். இருந்தாலும் வாரக்கடைசியில கொஞ்சம் மந்தமா ஃபீல் பண்ணுவீங்க.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

மகரம்

மகரம்

இந்த வாரம் பிசினஸ் பண்றவங்களுக்கு வாரத் தொடக்கத்துல கொஞ்சம் இடைஞ்சல் உண்டாகலாம். இருந்தாலும் படிப்படியா சரியாகிடும். அதனால எதையும் ரிஸ்க் எடுத்து செஞ்சி முடிப்பீங்க. இந்த வாரம் உங்க லைஃப்ல கொஞ்சம் மாற்றத்தை கொண்டு வர்றதுக்கு ட்ரை பண்ணுவீங்க. அது உங்க ஜாப் சம்பந்தமாவோ அல்லது பெர்சனல் லைஃப் சம்பந்தமாவோ இருக்கலாம். இருந்தாலும் அதுல நீங்க ஜெயிச்சி காட்டுவீங்க. இந்த வாரம் பணவரவு கொஞ்சம் மந்தமா இருக்கும்கிறதுனால, செலவை கொஞ்சம் கண்ட்ரோல்ல வச்சிக்கோங்க. இந்த வாரம் பெர்ஷனல் லைஃப் நார்மலாவே நகரும். குடும்பத்துலயும் சந்தோஷம் கூடிடும். உங்க ஒய்ஃப் கூட எங்கயாச்சும் ட்ராவல் போறதுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஹெல்த் கண்டிஷனம் இந்த வாரம் நார்மலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நாள் : வியாழக் கிழமை

கும்பம்

கும்பம்

இந்த வாரம் உங்க ஃபைனான்ஸ் பிரச்சனை சால்வ் ஆகிடும். உங்களோட உழைப்புக்கு ஏத்த பலன் கிடைக்கும். அதனால உங்க பழைய கடனை பைசல் பண்ணிடுவீங்க. பிசினஸ்ஃ பண்றவரா இருந்தா, புதுசா பிசினஸ் தொடங்க இது நல்ல சந்தர்ப்பமா அமையும். இந்த வாரம் ஹெல்த் கண்டிஷனை கவனிச்சிக்கிறது நல்லது. ரொம்ப அலட்சியமா இருந்தா ஹெல்த் மக்கர் பண்ணி இடுப்பு பிரச்சனை தலை தூக்கிடும். அதனால எக்ஸர்சைஸ், யோகா பண்றது நல்லது. ஆஃபீஸ்ல கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கிறது நல்லது. சீனியர் கூட வாக்குவாதம் பண்றதை அவாய்ட் பண்ணுங்க. சீனியர் சொல்றது உங்களுக்கு பிடிக்கலைன்னா பேசாம ஒதுங்கி போயிடுங்க. பின்னாடி அவங்களா உங்ககிட்ட வந்து பேசுவாங்க. அப்ப உங்களோட ஐடியாவை சொல்லுங்க. அது தான் நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள் : திங்கள் கிழமை

மீனம்

மீனம்

ஆஃபீஸ்ல வேலை பாக்குறவங்களுக்கு இந்த வாரம் நல்ல ரிசல்ட் கிடைக்கும். எந்த பிரச்சனையையும் ஈசியா சமாளிச்சி அதுல இருந்து வெளில வந்துடுவீங்க. அதனால உங்க டேலண்ட்டை பார்த்து உங்க சீனியரே அசந்து போயிடுவாங்க. அதனால உங்களுக்கு கூடுதலா சில பொறுப்புங்களையும் ஒப்படைக்கலாம். பிசினஸ் பண்றவங்களா இருந்தா பேங்க் லோனுக்கு ட்ரை பண்ணினா இந்த வாரம் கிடைக்க வாய்ப்பிருக்கு. லவ் பண்றவங்களா இருந்தா கொஞ்சம் விட்டு பிடிக்கிறது நல்லது. வீட்டுல உங்க லவ்வை ஒத்துக்குற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்க. கூடிய சீக்கிரம் உங்க லவ்வை வீட்டுல ஒத்துக்குவாங்க. இந்த வாரம் பண வரவும் மந்தமாவே இருக்கம். ஹெல்த் கண்டிஷனம், மென்ட்டல் கண்டிஷனும் டல்லாவே இருக்கும். அதனால டென்ஷனை அவாய்ட் பண்றது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள் : ஞாயிற்றுக் கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 9th February 2020 to 15th February 2020 In Tamil

Check out the weekly horoscope for 9th february to 15th february for all zodiac signs.
Story first published: Sunday, February 9, 2020, 11:38 [IST]
Desktop Bottom Promotion