For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…

|

நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலைகளின் படி எப்படி இருக்க போகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது ஜனவரி 17, 2021 முதல் ஜனவரி 23, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது ராசிக்கான பலன் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கும். வாரத்தின் ஆரம்பமே சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், எந்தவொரு பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கக்கூடும். கூடுதல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டால், அவற்றை புறக்கணிக்கக்கூடாது. கடினமாக உழைத்தால், வரும் நாட்களில் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். வியாபாரிகள் இந்த வாரம் நல்ல நிதி நன்மைகளைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நிலையைப் பொறுத்தவரை, இந்த வாரம் பலவீனமா உணருவீர்கள். உண்ணும் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

ரிஷபம்

ரிஷபம்

நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இந்த வாரம் உங்கள் படிப்பில் ஏற்படக்கூடிய சில தடைகளால் கவலையடையக்கூடும். பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனையை பெற்றி நடப்பது நல்லது. வேலை முன்னணியில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும். அதனை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதிக மன அழுத்தம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். வணிகர்களுக்கு இந்த வாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரும் வெற்றியைப் பெறுவதன் மூலம் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் போது கோபத்தை தவிர்க்கவும். உடல்நலம் பற்றி பேசுகையில், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நரம்புகளில் நீட்சி போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

மிதுனம்

மிதுனம்

இந்த வாரம் பணத்தின் அடிப்படையில் உங்களுக்கு கலவையான முடிவுகளை வழங்கும். வாரத்தின் தொடக்கத்தில், திடீரென்று வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், வாரத்தின் இறுதியில் சில பெரிய செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கும். வேலை முன்னணியில் நல்ல முடிவுகளைப் பெறலாம். அலுவலகத்தில் சில காரணங்களால் தடைப்பட்ட பதவி உயர்வு குறித்து நற்செய்தியை பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் எதிர்கொண்ட சட்ட சிக்கல்கள் வார இறுதியில் தீர்க்கப்படும். இந்த வாரம் சிறு பயணம் மேற்கொள்ளக்கூடும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். இந்த வாரம் உங்கள் திருமணம் குறித்து வீட்டில் விவாதிக்கப்படலாம். நல்ல வரன் தேடி வரப்போகிறது. உடல்நலத்தை பேண லேசான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை

 கடகம்

கடகம்

வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு அவ்வளவு நல்லதாக இருக்காது. சில முக்கியமான பணிகளில் தடைகளை சந்திக்கலாம். இருப்பினும், நீங்கள் பொறுமையுடன் பணியாற்ற வேண்டும். நேரம் வரும்போது பிரச்சனைகள் தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நல்ல ஒருங்கிணைப்பை வைக்க முயற்சிக்கவும். இந்த வாரம் மாணவர்கள் தங்கள் நேரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர், தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். குடும்பத்துடனான உறவு நன்றாக இருக்கும். வீட்டின் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உடல்நலம் பற்றி பேசுகையில், உயர் இரத்த அழுத்தம் இருப்போர், இந்த காலகட்டத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 23

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

சிம்மம்

சிம்மம்

இந்த வாரம் வேலை முன்னணியில் உங்களுக்கு மிகவும் புனிதமாக இருக்கும். உங்கள் திறனைக் கண்டு நீங்களே மகிழ்ச்சியடைவீர்கள். அரசு வேலையில் இருப்போர், விரும்பிய இடமாற்றத்தையோ அல்லது பதவி உயர்வையோ பெற வலுவான வாய்ப்புள்ளது. கடின உழைப்பிற்கான சரியான முடிவுகளைப் பெறலாம். பண நிலைமை வலுவாக இருக்கும். இந்த காலகட்டத்தில் பழைய கடன்களை திருப்பிச் செலுத்த முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவில் தூரம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அன்புக்குரியவர்களுடன் நேரம் ஒதுக்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் அவர்களின் அதிருப்தியை சுலபமாக சமாளிக்க முடியும். உடல்நலம் பற்றி பேசும்போது, உங்களுக்கு ஒவ்வாமை தொற்று ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

கன்னி

கன்னி

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். எந்தவொரு வேலையையும் திட்டமிட்டு செய்வது நல்லது. இந்த வாரத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். பல முக்கிய வேலைகளை முடிக்க வேண்டியிருக்கும். வர்த்தகர்கள், இந்த காலகட்டத்தில் பாதகமான சூழல்களை சந்திக்க நேரிடும். மேலும், ஊழியர்களுடனான நல்லுறவை மேம்படுத்த முயற்சிக்கவும். இல்லையெனில், பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். வீட்டு பெரியவர்கள் வழங்கும் ஆலோசனையை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். அவர்களின் மனம் புண்படும்படி எதையும் செய்ய வேண்டாம். உடல்நலம் பற்றி பேசும்போது, அஜீரணக்கோளாறு, வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம். வெளியில் காரமான உணவு அல்லது வறுத்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

துலாம்

துலாம்

வேலை முன்னணியில், மிகவும் முக்கியமானதாக இருக்கும். சோம்பலை விடுத்து, வேலையில் கவனத்தை செலுத்த வேண்டும். மாற்று வேலை குறித்து யோசிப்போருக்கு நல்ல நிறுவனத்திடமிருந்து நல்ல சலுகையைப் பெறலாம். அரசு வேலையில் இருப்போரின் அனைத்து முயற்சிகளிலும் பெற்றி பெறலாம். வணிகர்கள் புதிய வேலை தொடங்க இந்த வாரம் மிக சாதகமானது. புதிய முதலீடுகள் செய்ய இந்த வாரம் சிறந்த வாய்ப்பைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். இந்த வாரம் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்க வேண்டும். உடல்நிலையைப் பொறுத்தவரை, தோல் அல்லது முடி தொடர்பான பிரச்சனை இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த வாரம் எதிர்பார்த்த முடிவைப் பெறாததால் உங்கள் மன உறுதி குறையக்கூடும். இதனால் மனச்சோர்வடையாமல் முழு நேர்மறை எண்ணத்துடன் முன்னேற வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் தேடலுக்கான சிறந் பலன் கிடைக்கப்போகிறது. விரும்பும் வேலையைப் பெறலாம். வணிகர்களுக்கு லாபம் ஈட்ட பல வாய்ப்புகள் கிடைக்கும். துணி வர்த்தகர்கள், இந்த வாரம் ஒரு பெரிய முதலீட்டை செய்யலாம். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் இருக்கும். வீட்டு இளைய உறுப்பினர்களுடன் கோபத்தை விட அன்போடு நடந்து கொள்ள வேண்டும். பணத்தின் அடிப்படையில் இந்த வாரம் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். சில பெரிய செலவுகள் செய்யக்கூடும். உடல்நலம் பற்றி பேசினால், நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தில் சிறிது சரிவு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மெரூன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை

தனுசு

தனுசு

இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நிம்மதியாக, மன அமைதியாகவும் இருக்கும். சில முக்கியமான பணிகளை மனதில் கொண்டு விரைந்து செய்து முடிக்க முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள், பணியாற்றும் பெரிய திட்டத்தின் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்கள் இந்த வாரம் மிகப்பெரிய நிதி நன்மைகளைப் பெறலாம். ரியல்எஸ்டேட்டில் பணிபுரிவோர் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வீட்டு உறுப்பினர்களுடன் போதுமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் பயணம் செய்யலாம். ஒரு சமூக நிகழ்வில் பங்கேற்கலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த நேரம் பாதிக்கப்படலாம். போதுமான ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 4

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

மகரம்

மகரம்

உத்தியோகஸ்தர்கள், இந்த வாரம் தங்களது திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பைப் பெறலாம். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தினால், பதவி உயர்வு பெறலாம். வேலைக்காக வெளிநாட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பையும் கூட பெறலாம். வியாபாரிகள், இந்த வாரம் ஒரு சிறந்த வணிக சலுகையைப் பெறலாம். கூட்டு தொழில் செய்வோர் நல்ல பொருளாதார நன்மைகளைப் பெற அதிக வாய்ப்புள்ளது. வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் மறக்க முடியாத நேரமாக அமையும். வாழ்க்கைத் துணைக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கும். காதல் வளரும். குழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த நேரத்தில் குழந்தைகளின் கல்விக்காக நிறைய செலவிட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு நல்லதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வானம்

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள்: புதன்

கும்பம்

கும்பம்

வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். தனிப்பட்ட அல்லது தொழில் வாழ்க்கை எதுவாக இருந்தாலும், பொறுப்புகளின் சுமை அதிகரிக்கக்கூடும். இந்த காலகட்டத்தில், உங்கள் இயல்பிலும் சில மாற்றங்களைக் காணலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையில்லாமல் அதிகம் பேச வேண்டாம். இந்த காலகட்டத்தில் உயர் அதிகாரிகள் உங்களைக் கண்காணிப்பர். வணிகர்கள் பொருளாதார பரிவர்த்தனைகளை மிகவும் கவனமாக மேற்கொள்ளவும். புதிய திட்டத்தில் வேலையைத் தொடங்க நினைத்தால், நேரம் அதற்கு சாதகமானது. வாழ்க்கைத் துணையுடன் பெரிய சண்டை ஏற்படலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வது நல்லது. உடல்நலம் பற்றி பேசுகையில், பெண்கள் இந்த காலகட்டத்தில் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நாள்: ஞாயிற்றுக்கிழமை

மீனம்

மீனம்

குடும்ப முன்னணியில் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நல்லது. இந்த காலகட்டத்தில் குடும்பத்தினருடன் சிறப்பாக நேரத்தை செலவிடுவீர்கள். உறவினர்களின் திடீர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடனான காதல் அதிகரிக்கும். அவர்களிடமிருந்து ஒரு நல்ல ஆச்சரியத்தையும் பெறலாம். அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க கடுமையாக உழைப்பீர்கள். இது தவிர, இந்த காலகட்டத்தில் உங்கள் முன்னேற்றமும் மேம்படும். வணிகர்கள் வீண் விவாதத்திலிருந்து விலகி இருக்கவும். இல்லையெனில், நிதி இழப்பை சந்திக்க நேரிடும். பொருளாதார முன்னணியில், இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். மற்றவர்களைக் கவர அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். உடல்நலம் பற்றி பேசினால், இந்த காலகட்டத்தில் பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Weekly Horoscope: 17th January 2021 To 23rd January 2021 In Tamil

Check out the weekly horoscope for 17th January 2021 To 23rd January 2021 In Tamil In Tamil for all zodiac signs. Read on.