Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
சில வைரல் வீடியோக்கள் மனிதர்களை அச்சுறுத்தும் விதமாக இருக்கும்.
சமூக வலைதளங்களில் பல வைரல் வீடியோக்கல் பகிரப்பட்டு வருகின்றன. சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சில வீடியோக்கள் சாகசமாகவும் இருக்கும். இதை பார்க்கும் மக்களுக்கு மகிழ்ச்சியும், வியப்பும் இருக்கும். ஆனால், சில வைரல் வீடியோக்கள் மனிதர்களை அச்சுறுத்தும் விதமாக இருக்கும்.

விபத்து சம்பவங்கள் வைரலாக வரும்போது, அது பார்ப்பவர்களின் மனதை மிகவும் பாதிக்கும். சில சமயங்களில் காமெடியாக செய்யும் சில விஷயங்கள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். புனேவிலும் அதேபோன்ற ஒரு சம்பவம்தான் நடந்துள்ளது.

சாலையில் ஓடிய குதிரை
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான புனேவில் உள்ள பண்ட் கார்டன் பிரிட்ஜ் சாலையில் வண்டியில் பூட்டப்பட்ட இரண்டு குதிரைகள் கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டிருந்தது. தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து ஓடும் குதிரையைச் சாலையில் இருபுறமும் இருந்த மக்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். குதிரை வண்டிக்குப் பின்னாள் வந்த வாகனங்கள் இதை வீடியோ பதிவு செய்தனர்.

பைக்கில் துரத்திய இளைஞர்
அந்த வீடியோ பதிவில், கட்டுக்கடங்காமல் சாலையில் ஓடிக்கொண்டிருந்த குதிரையைப் பிடிக்க முயன்றனர் மூன்று இளைஞர்கள். பைக்கில் மூன்று பேரும் குதிரை வண்டியை துரத்திக்கொடு வந்தனர். இதில், ஒரு இளைஞர் பைக்கில் சென்றுகொண்டே குதிரையைப் பிடிக்க முயன்றார்.அப்போது, குதிரை நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அந்த இளைஞரையும் இழுத்தது.

இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்
கீழே விழுந்த இளைஞர் எதிர்பாராத விதமாகக் குதிரை வண்டியின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டார். வண்டியின் இரண்டு சக்கரங்களும் அவர் மீது ஏறியதுடன் இந்த வீடியோ காட்சி முடிந்தது. இதில், அவர் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. சில நேரங்களில் நால் விளையாட்டாக செய்யும் சில விஷயங்கள் கூட நமக்கு விபரீதமாக முடிந்துவிடும் என்பதை இந்த வீடியோ காட்சி நிரூபித்துள்ளது.

வைரல் வீடியோ
இந்த வீடியோவை பார்க்கும் அனைவர் மனதிலும் அச்சம் உண்டாகும். இதேபோல வேறு யாரும் செய்ய வேண்டாம் என்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நிறைய பேர் இதற்கு கருத்து தெரிவித்து வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால் இந்த வீடியோ வைராலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications