Latest Updates
-
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
கர்ப்பிணி மனைவிக்கு நாற்காலியாக மாறிய கணவர்… நெகிழ்ச்சியான சம்பவம் எங்கு நடந்தது தெரியுமா?
தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதை கவனித்த அவரது கணவர், உடனே தரையில் அமர்ந்து தன் முதுகில் மனைவியை அமர வைத்து மனித நாற்காலியாக மாறினார்.
மனிதர்களில் பலர் தங்களின் மனித தன்மையை இழந்து வருகின்றனர். ஐந்து அறிவு படைத்த விலங்குகளுக்குள் இருக்கும் ஒற்றுமையும், அன்புமும், உதவும் குணமும் மனிதர்களிடத்தில் மறுத்துபோய் இருக்கின்றன. அதற்கு சான்றாக சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தன் கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற கணவர், அவர் அமர யாரும் இடம் தராததால், தானே மனித நாற்காலியாக மாறி, தன் மனைவியை சுமந்துள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சி காண்பர் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது. அதேசமயம் மனித தன்மையற்ற செயலற்ற அங்கிருந்த மனிதர்களையும் பலர் வசைபாடி வருகிறார்கள்.

மருத்துவமனை
சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கேஹாங் நகரை சேர்ந்த ஒருவர், தன் கர்ப்பிணி மனைவியை பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அனைத்து நாற்காலிகளும் நிரம்பியிருந்தன. இதனால் கணவன், மனைவி இருவரும் மருத்துவரின் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.

யாரும் இடம் தரவில்லை
நீண்ட நேரமாக கர்ப்பிணிப்பெண் நின்று கொண்டிருந்ததால், அவருக்கு கால் வலிக்க தொடங்கியது. எனினும் கர்ப்பிணி பெண்ணுக்கு எழுந்து இடம்தர யாரும் முன்வரவில்லை. அனைவரும் செல்போனை பார்த்துக்கொண்டு அவரவர் வேலையை செய்துகொண்டிருந்தனர்.

மனித நாற்காலியாக மாறிய கணவர்
தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதை கவனித்த அவரது கணவர், உடனே தரையில் அமர்ந்து தன் முதுகில் மனைவியை அமர வைத்து மனித நாற்காலியாக மாறினார். அப்போதுகூட, நாற்காலியில் அமர்ந்திருந்தவர்கள் யாரும் எழுந்து இடம் தரவில்லை. அங்கு நடந்து சென்றவர்களும் இந்த காட்சியை பார்த்தவாறு செல்வதை அந்த் வீடியோ காட்சியில் காணலாம்.

வைரல் வீடியோ
கணவனின் இந்த பாசத்தையும், அங்கிருந்தவர்களின் மனித தன்மையற்ற செயலையும் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ குறுகிய நேரத்தில் 70 லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்'குகளை குவித்தது. மேலும், கர்ப்பிணியின் கணவரை பலரும் பாராட்டி வரும் நிலையில், அந்த கர்ப்பிணி பெண்ணுக்காக எழுந்து இடம் தராதவர்களை சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.

உண்மையான அன்பு
காதல் கதைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம். அதில் ஒரு ஜோடி தங்கள் காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள். ஆனால், சில நேரங்களில், மனிதர்கள் தங்கள் சொந்த தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துவதால், பொருள்சார்ந்த மகிழ்ச்சியை விரும்புவதால் உண்மையான காதல் போன்ற எதுவும் இல்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இன்னும், சிலர் தங்களின் துணைக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சியையும் ஆறுதலையும் உறுதிப்படுத்த எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பின் அத்தகைய ஒரு உதாரணம் இந்த ஜோடி.

வலுவான எடுத்துக்காட்டு
இந்த உலகத்திற்கு ஒரு புதிய உயிரை கொண்டுவருவதற்கு பெண்கள் ஏராளமான சிரமங்களையும் சவால்களையும் சந்திக்கிறார்கள். ஆனால் இந்த வீடியோ காட்டுகிறது, ஒரு தந்தையும் கூட தனது குழந்தையும் மனைவியும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க நிறைய செய்கிறார். ஒரு நபர் ஒருவரை உண்மையாக நேசிக்கும்போது என்ன நடக்கும் என்பதற்கு வீடியோ ஒரு வலுவான எடுத்துக்காட்டு. கர்ப்பிணி மனைவியிடம் அவரது கணவனின் இனிமையான மற்றும் அக்கறையுள்ள நடவடிக்கைகளை பார்த்தபின், அவரால் பலர் மிகவும் ஈர்க்கப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
