For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க உண்மையிலேயே புத்திசாலியானு தெரிஞ்சிக்கனுமா? இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் புத்திசாலிதான்..

விதுர நீதியில் குறிப்பிட்டுள்ள படி யாரும் பிறக்கும்போதே புத்திசாலியாக பிறப்பதில்லை, அவரின் பழக்கவழக்கங்களும், அவர்கள் எடுக்கும் முடிவுகளும், வளர்ப்பு முறையும்தான் அவர்களை புத்திசாலிகளாக மாற்றுகிறது.

|

மகாபாரதத்தில் பல முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனர். அதில் போரில் ஈடுபடாத முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவர் விதுரர் ஆவார். திருதராஷ்டிரனின் இளைய சகோதரனாக இருந்த இவர் அறிவில் சிறந்து விளங்கியதால் அஸ்தினாபுரத்தின் மகா மந்திரியாக பதவி வகித்தார். மஹாபாரதத்தில் இருந்த மிகச்சிறந்த ஞானிகளில் ஒருவராக இவர் இருந்தார்.

Signs of a wise man

விதுரர் தனது ஞானத்தைக் கொண்டு எதிர்கால தலைமுறையினரின் நன்மைக்காக உருவாக்கிய நூல்தான் விதுர நீதி ஆகும். விதுர நீதியில் குறிப்பிட்டுள்ள படி யாரும் பிறக்கும்போதே புத்திசாலியாக பிறப்பதில்லை, அவரின் பழக்கவழக்கங்களும், அவர்கள் எடுக்கும் முடிவுகளும், வளர்ப்பு முறையும்தான் அவர்களை புத்திசாலிகளாக மாற்றுகிறது. ஒரு புத்திசாலி மனிதனுக்கான அறிகுறிகள் என்னென்ன என்று விதுரர் தனது விதுர நீதியில் குறிப்பிட்டள்ளார். அது என்னென்னெ என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் அறிகுறி

முதல் அறிகுறி

ஒரு புத்திசாலி நபர் தன்னை உள்ளே இருந்து அடையாளம் கண்டுகொள்கிறார்கள் அது அவர்களின் கடின உழைப்பாகும். அவர்கள் வலியை பொறுத்துக்கொள்ள கற்றுக்கொள்கிறாரார்கள்.மேலும் தர்மத்தின் பாதையில் எப்படி நேராக செல்ல வேண்டும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும்.

இரண்டாம் அறிகுறி

இரண்டாம் அறிகுறி

ஒருவரின் எதிர்கால திட்டங்கள் வெப்பம், குளிர், பாசம், மகிழ்ச்சி, பணம், பசி ஆடம்பரம் என எதுவாலும் பாதிக்கப்படவில்லை என்றால் அவர்கள் உண்மையில் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

மூன்றாம் அறிகுறி

மூன்றாம் அறிகுறி

விரைவான புரிந்து கொள்பவர்கள், மற்றவர்கள் கூறுவதை பொறுமையாக கவனிப்பவர்கள், மற்றவர்களின் வேலைகளில் தலையிடாமல் இருப்பவர்கள், எளிதில் மற்றவர்களை சரியாக எடை போடுபவர்கள் இவர்களெல்லாம் கண்டிப்பாக புத்திசாலிகளாக இருப்பார்கள்.

MOST READ: இந்த கோவில்களுக்குள் ஆண்கள் நுழையவேக் கூடாதாம்... இதில் மூன்று கோவில்கள் தென்னிந்தியாவில் உள்ளது...!

நான்காம் அறிகுறி

நான்காம் அறிகுறி

மற்றவர்கள் பாராட்டியவுடன் பெருமையை தலைக்கு எடுத்து செல்லாதவர்கள், மற்றவர்களால் அவமதிக்கப்பட்டால் வருத்தத்தை காட்டாதவர்கள், உள்ளத்தை பரந்த ஆழமாக ஒன்றாக வைத்திருப்பவர்கள் உண்மையில் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

ஐந்தாம் அறிகுறி

ஐந்தாம் அறிகுறி

ஒருவருடைய கல்வியானது அவருடைய அறிவால் நிர்வகிக்கப்பட்டால் அல்லது வழிநடத்தப்பட்டால், பெரியவர்கள்/படித்தவர்களுக்கு கீழ்படிந்து நடப்பவர்கள் நல்ல புத்திசாலிகளாக இருப்பார்கள்.

ஆறாம் அறிகுறி

ஆறாம் அறிகுறி

மகிழ்ச்சி மற்றும் சோகம், பெருமை மற்றும் அவமானம், ஆசைகள் இவைதான் ஒரு நபரின் வாழ்க்கையின் நோக்கத்திலிருந்து அவர்களை விலக்கிச் செல்லும் காரணிகளாகும். இந்த காரணங்களால் பாதிக்கப்படாதவர்களே உண்மையில் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

MOST READ: தண்ணியடிச்சாலும் ஆரோக்கியமா வாழணுமா? இந்த மாதிரி குடிக்க கத்துக்கோங்க...!

ஏழாம் அறிகுறி

ஏழாம் அறிகுறி

புத்திசாலிகள் ஒருபோதும் அடைய முடியாத பொருளை துரத்திச் செல்ல மாட்டார்கள். நடந்து முடிந்த செயல்களுக்காக ஒருபோதும் வருந்த மாட்டார்கள், கடினமான காலத்தின் வருகையை ஒருபோதும் இவர்கள் பிரதிபலிக்கமாட்டார்கள்.

எட்டாம் அறிகுறி

எட்டாம் அறிகுறி

புத்திசாலியான ஒரு நபர் தனது திறன்களுக்கேற்ற பணிகளையே செய்வார்கள். அவர்கள் ஒருபோதும் எந்த செயலையும் புறக்கணிக்க மாட்டார்கள். அதேசமயம் யாரையும் அவமதிக்கவும் மாட்டார்கள்.

ஒன்பதாம் அறிகுறி

ஒன்பதாம் அறிகுறி

கடமை மற்றும் வியாபாரம் என்று வரும்போது யாருடைய மனம் சலனங்களுக்கு உட்படாமல் நிலையாக இருக்கிறதோ, உலக ஆசைகளை காட்டிலும் கடவுள் தொடர்பான பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் கண்டிப்பாக புத்திசாலிகளாக இருப்பார்கள்.

MOST READ: சாஸ்திரங்களின் படி உங்களின் ஒவ்வொரு நாளையும் அதிர்ஷ்டமான நாளாக மாற்ற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

பத்தாம் அறிகுறி

பத்தாம் அறிகுறி

அனைத்து சூழ்நிலைகளிலும் பேசக்கூடியவர்கள், மதம் மற்றும் மதநூல்கள் தொடர்பான புரிதலை கொண்டவர்கள், விவாதங்களில் சிறப்பாக பேசக்கூடியவர்கள், குறைந்த நேரத்தில் தனது கருத்தை மற்றவர்களுக்கு புரிய வைப்பவர்கள் உண்மையில் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vidur Niti: Signs of a wise man

According to Vidur Niti a wise man should have these personality traits.
Story first published: Saturday, August 3, 2019, 13:05 [IST]
Desktop Bottom Promotion