Latest Updates
-
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா -
சிகரெட்டை நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய உண்மையில் எவ்வளவு காலம் ஆகும்? விளக்கும் நுரையீரல் நிபுணர்! -
1 முள்ளங்கியும், பாசிப்பருப்பும் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கூட்டு செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம்
மிதுனம் செல்லும் சுக்கிரனால் அடுத்த 23 நாட்கள் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமான காலமா இருக்கப் போகுது...
காதல், அழகு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரனின் பெயர்ச்சியால் பல ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்தித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் தனது நிலையை மாற்றினால், அதன் தாக்கம் மனித வாழ்க்கையில் நன்கு தெரியும். இந்த தாக்கம் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அதில் சுக்கிரன் 2022 ஜூலை 13 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறினார். சுக்கிரன் இந்த மிதுன ராசியில் 23 நாட்கள் வரை இருந்து, பின் ராசியை மாற்றுவார்.

காதல், அழகு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரனின் பெயர்ச்சியால் பல ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்தித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இப்போது மிதுனம் செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செல்லும் சுக்கிரனால், இக்காலத்தில் உங்களின் தைரியம், புரிதல் மற்றும் பொறுமை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் பணியைப் பாராட்டுவார்கள் மற்றும் உங்களின் புகழ் அதிகரிக்கும். இக்காலத்தில் பல முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் வேலையில் ஏற்படும் மாற்றங்கள் உங்களை முன்னேற்றத பாதைக்கு அழைத்துச் செல்லும். இக்காலத்தில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்கள் வாழ்வில் ஒரு புதிய உறவு வரலாம். அது திருமணமாகாதவர்களுக்கு வாழ்க்கைத் துணையாகவோ, திருமணமானவர்களுக்கு குழந்தையாகவோ இருக்கலாம்.

சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், வருமானம் அதிகரிக்கும். அதோடு பல புதிய வருமான வழிகளும் திறக்கப்படும். வியாபாரிகளுக்கு எந்த ஒரு வியாபார ஒப்பந்தமும் சாதகமாக இருக்கும். இதனால் நல்ல லாபமும் கிடைக்கும். இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புகளும் வரலாம். தொழிலில் வெற்றி கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களும் நல்ல பலனைப் பெறுவார்கள். மேலும் இக்காலத்தில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். முக்கியமான வணிக பரிவர்த்தனையிலும் பணத்தை முதலீடு செய்ய சிறந்த காலம். ஏனெனில் இக்காலத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் துணையாக இருக்கும். நீண்ட தூர பயணம் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் பல புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மேலும் உங்களின் எந்த வேலையிலும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.



Click it and Unblock the Notifications
