Shukra Rashi Parivartan 2022: சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள்!

நவகிரகங்களில் மகிழ்ச்சியையும், சிறப்பையும் தருபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு 2022 பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 10.13 மணிக்கு இடம் பெயர்கிறார்.

நவகிரகங்களில் மகிழ்ச்சியையும், சிறப்பையும் தருபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு 2022 பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 10.13 மணிக்கு இடம் பெயர்கிறார். இந்த ராசியில் 2022 மார்ச் 31 ஆம் தேதி காலை 8.37 மணி வரை இருந்து பின் கும்ப ராசிக்கு மாறுவார். மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் யோகம் என்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியால் நல்ல யோகம் அடிக்கப் போகிறது.

Shukra Rashi Parivartan: Venus Transit in Capricorn on 27th February 2022 Effects on Zodiac Signs in tamil

ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன், பொதுவாக கன்னி ராசியில் வலுவிழந்தவராகவும், மீன ராசியில் உச்சம் பெற்றவராகவும் கருதப்படுகிறார். எனவே மகரம் செல்லும் சுக்கினால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பெரிய வெற்றி கிடைக்கும். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். நீண்ட நாட்களுக்கு முன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மத்திய, மாநில அரசுத் துறைகளின் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் தீரும். நீங்கள் வீடு அல்லது வாகனம் வாங்க விரும்பினால், கிரகத்தின் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் முடிவுகளும், செயல்களும் பாராட்டப்படும். வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வெளியூர் சென்று படிக்கும் எண்ணம் கொண்ட மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் எதிர்பாராத பல ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். அதனால்தான் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் போதும் அல்லது நிதி பரிவர்த்தனையின் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் சொந்தக்காரர்கள் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். குழந்தைகள் தொடர்பான கவலைகள் கூட தொந்தரவு செய்யலாம். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமணம் தொடர்பான பேச்சுக்களில் இருந்த தடைகள் நீங்கும். எந்த வகையான அரசாங்க டெண்டருக்கும் விண்ணப்பிக்க விரும்பினால், இக்காலம் சாதகமாக இருக்கும். அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வீடு, வாகனம் வாங்குவதற்கு அற்புதமான காலம்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத பல ஏற்ற தாழ்வுகளை சந்திப்பீர்கள். இரகசிய எதிரிகள் பெருகுவார்கள். ஆனால் நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகளும் வெற்றி பெறும். மதம் மற்றும் ஆன்மீகத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மேலும் சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபடுவீர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிலும் வெற்றி கிடைக்கும். போட்டியில் கலந்து கொள்ளும் இந்த ராசிக்கார மாணவர்கள் வெற்றி காண்பார்கள். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு யோகம் உண்டு. காதல் திருமணம் செய்து கொள்ள நினைத்தால் இக்காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் நல்ல பலன் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வாகனம் வாங்க நினைத்தால் இக்காலம் சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் நல்ல செய்தி கிடைக்கும். பயணத்தின் போது கவனமாக இருங்கள். நீங்கள் எந்த வகையான புதிய ஒப்பந்தத்திலும் கையெழுத்திட விரும்பினாலும், இக்காலம் சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சுக்கிரன் உங்கள் இயல்பில் மென்மையைக் கொண்டுவருவார். கடினமான சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள். குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வளர அனுமதிக்காதீர்கள். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்திருங்கள். பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் எதிர்பாராத பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிரிவினை ஏற்பட அனுமதிக்காதீர்கள். மூதாதையர் சொத்து சம்பந்தமாக தொடர்ந்து தகராறு இருந்தால், அது முடிவுக்கு வரும். ரியல் எஸ்டேட் தொடர்பான மற்ற விஷயங்களும் முடிவடையும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த பெரிய வேலையையும் தொடங்க விரும்பினால் தாமதிக்க வேண்டாம். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் கிடைக்கும். மாமியார் தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் விஷயங்களில் தீவிரம் இருக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் அதிக செலவுகள் மற்றும் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிக செலவாகும். கண் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருங்கள். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் சற்று தாமதம் ஏற்படலாம். பயணங்களால் நற்பலன் கிடைக்கும். உங்கள் உத்திகள் மற்றும் திட்டங்களை ரகசியமாக வைத்து வேலை செய்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் எல்லா வகையிலும் வெற்றியைப் பெறுவீர்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காதல் திருமணம் செய்து கொள்ள நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அரசின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். சமூகத்தில் கௌரவம், மரியாதை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, February 26, 2022, 15:18 [IST]
Desktop Bottom Promotion