Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிர பெயர்ச்சியால் மார்ச் 12 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
மேஷம் செல்லும் சுக்கிரனின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள்.
Venus Transit In Aries On March 2023: வேத ஜோதிடத்தில், செல்வம், ஆடம்பரம், காதல், அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் நல்ல பொருள் செல்வத்துடன், ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார் மற்றும் அவர்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இப்படிப்பட்ட சுக்கிரன் ஒரு ராசியில் 23 -60 நாட்கள் வரை பயணிப்பார். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 மார்ச் 12 ஆம் தேதி சுக்கிரன் செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு செல்லவிருக்கிறார்.

மேஷம் செல்லும் சுக்கிரனின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக தொழிலில் நல்ல லாபத்தையும், நிறைய செல்வத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது மேஷ ராசிக்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வேலையில் நல்ல புரிதல் மற்றும் செயல்திறனால் தங்களின் இலக்குகளை வெற்றிகரமாக அடைவார்கள். முக்கியமாக வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இக்காலத்தில் முயற்சித்தால் உங்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த சுக்கிர பெயர்ச்சி காலமானது சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உங்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான பயணங்கள் நல்ல பலனைத் தரும். ஆனால் இக்காலத்தில் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது மட்டும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் மீன ராசிக்காரர்கள் அற்புதமான பலனைப் பெறவுள்ளார்கள். குறிப்பாக இக்காலத்தில் நிறைய பணத்தைப் பெறுவார்கள். சிக்கிய பணம் இந்த காலகட்டத்தில் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தை மேம்படுத்த நினைப்பவர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். வணிகத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் பேச்சால் மற்றவர்கள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். மீடியா, மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் அற்புதமான காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
