Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்!
ராகு-சுக்கிரன் சேர்க்கையால் மார்ச் 12 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும்..
மேஷ ராசியில் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த கிரகங்களின் சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் ராகு சுக்கிர சேர்க்கையால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Venus Rahu Conjunction In Aries On March 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது, சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதுண்டு. நவகிரகங்களில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களுமே பின்னோக்கி நகரும். அந்த வகையில் நிழல் கிரகமாக ராகு 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரிஷப ராசியில் இருந்து செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு நுழைந்தார். இந்நிலையில் 2023 மார்ச் 12 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார்.

இதனால் மேஷ ராசியில் ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த கிரகங்களின் சேர்க்கையின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த ராகு சுக்கிர சேர்க்கையால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் எதிரிகளை உங்களை தொந்தரவு செய்வார்கள் என்பதால் சற்று உஷாராக இருக்க வேண்டும். உறவுக்காரர்கள் உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. காதல் விஷயத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம். திருமண வாழ்விலும் சில பிரச்சனைகள் ஏற்படலாம். முக்கியமாக உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மோசமடையக்கூடும் என்பதால் அவர்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இது தவிர வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கோபமாக நடந்து கொள்ளாதீர்கள் மற்றும் அவர்களுடன் எந்த ஒரு வாக்குவாதத்திலும் ஈடுபடாதீர்கள். இல்லாவிட்டால், உறவில் விரிசல் ஏற்படக்கூடும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ராகு-சுக்கிர சேர்க்கையானது மோசமாக இருக்கும். குறிப்பாக பண வரவில் பிரச்சனைகளை சந்திக்கலாம். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள் இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது. இக்காலத்தில் உங்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்காது. தம்பதியர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
