For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாத்தா-அப்பா-அண்ணன் என அனைவரையும் மாற்றி மாற்றி திருமணம் செய்து இளவரசி... வரலாற்றின் சோக ராணி...!

|

பண்டைய கால எகிப்தை தவிர்த்து நம்மால் உலகத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு பண்டைய எகிப்து பல நூற்றாண்டுகளாக நம் கற்பனைகளை கவர்ந்துள்ளது. எகிப்தியலாளர்கள் பல ஆண்டுகளாக பல கண்கவர் கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளனர், ஆனால் இந்த பண்டைய கலாச்சாரத்தைச் சுற்றியுள்ள பல மர்மங்கள் இன்றும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

எகிப்தின் தீர்க்க முடியாத மர்மங்களில் ஒன்று அங்கேசேனமுனின் கதையாகும். அவரது வாழ்க்கையின் சில பகுதிகளை சித்தரிக்கும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டாலும் அவரைப் பற்றி தெரிந்த விவரங்கள் குறைவுதான். 18 ஆம் வம்சத்தின் கடைசி பாரோவான ஹோரெம்ஹெப் தனது தந்தையின் அனைத்து தடயங்களையும் அழிக்க முயன்றதன் காரணமாக இது நடந்தது. அவர் இறந்த தேதி மற்றும் அவரது கல்லறையின் இருப்பிடம் எகிப்தின் திறக்கப்படாத ரகசியங்களில் ஒன்றாக உள்ளது. அதனைவிட மர்மங்களும், சோகங்களும் நிறைந்தது அவரின் வாழ்க்கையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முறையற்ற கட்டாயத் திருமணம்

முறையற்ற கட்டாயத் திருமணம்

இளவரசி அங்கேசேனமுன் தனது சகோதரர் முறையில் இருந்த துட்டன்காமூனின் மனைவியாக இருந்தார். இந்த திருமணத்திற்கு முன்பு அவர் தனது தந்தையை திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது. துட்டன்காமூன் இறந்த பிறகு அவர் தன்னுடைய தாத்தாவை திருமணம் செய்து கொள்ள கட்டயாப்படுத்த பட்டதாக கூறப்படுகிறது. இல்லையெனில் அவர் எகிப்தின் எதிரிகளான ஹிட்டியர்களுடன் கூட்டு வைத்ததற்காக கொல்லப்பட்டிருப்பார்.

அங்கேசேனமுன் பிறப்பு

அங்கேசேனமுன் பிறப்பு

அங்கேசேனமுன் 1350 பி.சி. யில் பாரோ அகெனாடென் மற்றும் ராணி நெஃபெர்டிட்டி ஆகியோரின் ஆறு மகள்களில் மூன்றாவது மகளாக பிறந்தார். அவரது ஆட்சியின் போது, அக்னாடென் ஏற்கனவே இருந்த மதத்தை அடக்கினார், குறிப்பாக பிரபலமான கடவுளான அமுனை வழிபட்ட மதத்தை அடக்கினார். அதற்குப் பதிலாக "ஒரு உண்மையான கடவுள்" ஏட்டனைச் சுற்றியுள்ள ஒரு ஏகத்துவ மதத்தை அறிமுகப்படுத்தினார். அவரது நோக்கங்கள் அரசியல் என்று சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். ஆனால் அமுனின் மதகுருக்கள் வைத்திருந்த செல்வம் மற்றும் அதிகாரத்தால் தனது பதவி அச்சுறுத்தப்பட்டதாக பாரோ உணர்ந்திருக்கலாம்.

அங்கேசேனமுன் இளமைக்காலம்

அங்கேசேனமுன் இளமைக்காலம்

அங்கேசேனமுன் தனது இளமை பருவத்தில் அங்கெசன்பேடன் என்று அழைக்கப்பட்டார். அவரும் துட்டன்காமூன் அல்லது கிங் டட் இருவரும் பாரோவின் குழந்தைகளாக வெவ்வேறு அம்மாக்கள் மூலம் பிறந்தனர். 1336 பி.சி.யில் அகெனாடென் இறந்ததைத் தொடர்ந்து, அங்கேசேனமுனும் ஒரு குறுகிய காலத்திற்கு ஸ்மென்காரேவின் மனைவியாக இருந்திருக்கலாம். அகெனாடனின் குழந்தைகளில் இன்னொருவரான ஸ்மென்கரே இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு மேலாக பாரோவாக ஆட்சி செய்தார்.

செக்ஸ் குறித்து இளைஞர்களுக்கு அதிகம் தோன்றும் பயங்கள் என்னென்ன தெரியுமா? எப்படி அதை சரிசெய்வது?

குடும்பத்திற்குள் திருமணம்

குடும்பத்திற்குள் திருமணம்

அரச குடும்பத்தினுள் திருமணம் என்பது பண்டைய எகிப்திய பாரோக்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாக இருந்தது. பல மம்மிகளில் காணப்படும் குறைபாடுகள், இரத்த ஓட்டத்தை "தூய்மையாக" வைத்திருப்பதற்கான இந்த தூண்டுதலற்ற வழிமுறையானது பல்வேறு மரபணு குறைபாடுகளுக்கு வழிவகுத்தது என்பதைக் குறிக்கிறது. துட்டன்காமூனுக்கு ஒரு பிளந்த மேல் அன்னம் மற்றும் உருக்குலைந்த பாதமும் இருந்தது, அவரால் உதவி இன்றி நிற்க முடியாது.

துட்டன்காமூனின் கல்லறை

துட்டன்காமூனின் கல்லறை

துட்டன்காமூனின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு வளர்ச்சியடையாத குழந்தைகளின் மம்மியிடப்பட்ட எச்சங்கள் அவருக்கும் அவரது ராணியின் பிறக்கும் குழந்தைகள் என்று கருதப்படுகிறது. அன்கேசேனமுன் முன்பு மற்றொரு குழந்தையைப் பெற்றிருக்கலாம், அவர் தனது குழந்தை பருவத்தில் தந்தையை மணந்த போது தனது சொந்த தந்தையால் பிறந்தார். துட்டன்காமூனுடனான அவரது திருமணம் அவரது வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான காலகட்டமாக இருந்தது, இந்த ஜோடியின் ஓவியங்களால் தெளிவாகிறது.

மீண்டும் திருமணம்

மீண்டும் திருமணம்

1327 பி.சி.யில் மன்னர் இறந்தபோது அங்கேசேனமுனுக்கு என்ன நடந்தது? அடக்கச் சடங்கின் ஒரு பகுதியாக பார்வோனின் விதவை அவரது வாரிசுக்கு சடங்கு முறையில் திருமணம் செய்து கொள்ளப்பட்டிருப்பார் என்று எகிப்தின் சடங்குகள் சொல்கிறது. துட்டன்காமூனின் நெருங்கிய ஆலோசகரும், அங்கசேனமுனின் தாத்தாவுமான அய் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டாலும், அவர்கள் முறையாக திருமணம் செய்து கொண்டார்களா என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

வரலாற்றில் ம(றை)றக்கப்பட்ட உலகின் வித்தியாசமான கலாச்சாரங்கள்... ஆச்சரியப்படுத்தும் பண்டைய வரலாறு...!

அங்கேசேனமுனின் கடிதம்

அங்கேசேனமுனின் கடிதம்

மன்னர் இறந்த பின் எகிப்தியர்களின் எதிரிகளான ஹிட்டியர்களின் அரசருக்கு அவர் கடிதமொன்று எழுதினார். அதில் அவர் கூறியிருந்தது, " என் கணவர் இறந்துவிட்டார், எனக்கு மகன் இல்லை. உங்களுக்கு பல மகன்கள் இருப்பதாக அவர்கள் உங்களைப் பற்றி கூறுகிறார்கள். என் கணவராக ஆக உங்கள் மகன்களில் ஒருவரை நீங்கள் எனக்குக் கொடுக்கலாம். நான் ஒருபோதும் என் ஊழியனைத் தேர்ந்தெடுத்து என் கணவனாக்க மாட்டேன்!... .நான் பயப்படுகிறேன்! " இந்த கடிதத்தில் ஊழியன் என்ற சொல் அவரது தாத்தாவான அய்-யை குறிக்கும் இழிவான சொல்லாகும். ஹிட்டியர்களின் அரசர் இந்த கடிதம் குறித்து சந்தேகமடைந்தாலும் தூதுவரை அனுப்பி சோதனை செய்ததற்கு பிறகு தனது மகன்களில் ஒருவரை அனுப்பி வைத்தார். ஆனால் ஹிட்டியர்களின் அரசர் சன்ஸா எகிப்தை அடையவில்லை. எல்லையிலேயே அய் -ன் தளபதி அவரைத் தடுத்து கொன்றுவிட்டார்.

அங்கேசேனமுன் மறைவு

அங்கேசேனமுன் மறைவு

இந்த சம்பவத்திற்குப் பிறகு அங்கேசேனமுன் வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்டிருக்கிறார். அதன்பின் அய் பாரோ ஆனார், ஆனால் அவரின் அங்கேசேனமுன் அவரின் ராணி ஆனதற்கு எந்த பதிவும் கிடைக்கவில்லை. மோதிரம் அவர்களின் திருமணத்திற்கு ஆதாரம் என்று வாதிடப்படுகிறது, ஆனால் இது துட்டன்காமூனின் இறுதிச் சடங்கின் ஒரு கலைப்பொருளாக இருக்கலாம். அய்-ன் கல்லறையில் நிச்சயமாக அங்கேசேனமுன் குறித்த எந்த ஆதாரமும் இல்லை.

இந்த ராசிக்காரங்க முதுகில் குத்தும் குணம் உள்ளவர்களாம்... இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க...!

அங்கேசேனமுன் கல்லறை மர்மம்

அங்கேசேனமுன் கல்லறை மர்மம்

கிங் துட்டன்காமூனின் மனைவியின் கல்லறையை கண்டுபிடிப்பது எகிப்தியலில் ஆர்வமுள்ள அனைவரையும் ஈர்க்கும் ஒரு விஷயமாகும். இந்த கண்டுபிடிப்பு எகிப்தின் 18 வது வம்சத்தில் புதிய வெளிச்சத்தை வெளிப்படுத்தக்கூடும், இது பண்டைய எகிப்தை அதன் புதிய இராஜ்ஜிய காலத்தில் ஆட்சி செய்த முதல் வம்சமாகும். அங்கசேனமுனின் கல்லறையைத் தேடி குரங்குகளின் பள்ளத்தாக்கில் தேடல் தொடங்கப்பட்டுள்ளது. அங்கேசேனமுன் கல்லறை கிடைத்தால் எகிப்தின் வரலாற்றில் இருக்கும் பல மர்மங்களுக்கு விடை கிடைக்க வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unknown Facts About Tragedy Queen Ankhesenamun

Read to know the unknown facts about tragedy queen Ankhesenamun.
Story first published: Friday, October 30, 2020, 17:05 [IST]