வீட்டில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப மஞ்சளை இப்படியெல்லாம் யூஸ் பண்ணுங்க சரியாயிடும்...

ஜோதிட சாஸ்திரத்தில் மஞ்சள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் மஞ்சளானது வாழ்வில் உள்ள தடைகளைப் போக்க, நல்ல அதிர்ஷ்டத்தை தருகிறது. மஞ்சளைக் கொண்டு வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் தான் மஞ்சள். மருத்துவ குணம் வாய்ந்த மஞ்சள் சமையலில் மட்டுமின்றி, அழகு பராமரிப்பிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில் மஞ்சள் மங்களகரமான பொருள் என்பதால் கடவுள் வழிபாட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Turmeric Remedies For Happy Life In Tamil

ஜோதிட சாஸ்திரத்தில் மஞ்சள் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் மஞ்சளானது வாழ்வில் உள்ள தடைகளைப் போக்க, நல்ல அதிர்ஷ்டத்தை தருகிறது. மஞ்சளைக் கொண்டு வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இப்போது வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்க மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் பரிகாரம் #1

மஞ்சள் பரிகாரம் #1

உங்கள் வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகள் அடிக்கடி வருகிறதா? அப்படியானால் அதற்கு காரணம் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருப்பது தான். வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றவும், வீட்டினுள் எதிர்மறை சக்திகள் நுழையாமல் இருக்கவும், வீட்டின் பிரதான நுழைவு வாயிலின் சுவற்றில் மஞ்சள் கோடு போடுங்கள். இதனால் வீட்டில் அடிக்கடி வரும் சண்டைகள் நீங்கி, அமைதி நிலவும்.

மஞ்சள் பரிகாரம் #2

மஞ்சள் பரிகாரம் #2

உங்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றத்தைக் காண விரும்பினால், புதன்கிழமைகளில் மஞ்சள் துணியில் 5 மஞ்சள் கிழங்கு மற்றும் 1 ரூபாய் நாணயம் ஒன்றை வைத்து கட்டி, வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். பின் குலதெய்வத்தை நினைத்து வீட்டில் நெய் தீபம் ஏற்றுங்கள். தீபம் தானாக அணைந்த பின்னர், அந்த மஞ்சள் மூட்டையை பணம் வைக்கும் பெட்டியில் வையுங்கள். இப்படி செய்வதன் மூலம் நிச்சயம் நற்பலன் கிடைக்கும்.

மஞ்சள் பரிகாரம் #3

மஞ்சள் பரிகாரம் #3

நீங்கள் ஒரு முக்கியமான வேலையாக செல்லும் போது, அந்த வேலை வெற்றிகரமாக முடிய அல்லது உங்களுக்கு சாதகமான முடிவை பெற வேண்டுமென விரும்பினால், நெற்றியில் மஞ்சளை தடவிக் கொண்டு செல்லுங்கள். இதனால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் பரிகாரம் #4

மஞ்சள் பரிகாரம் #4

சிலரது வேலை செய்து கொண்டிருக்கும் போதே கெட்டுவிடும் அல்லது எந்த வேலை செய்தாலும் அதில் தடைகள் ஏற்படும். அந்த மாதிரி உங்களுக்கும் நடக்கிறதா? அப்படியானால் வியாழக்கிழமைகளில் வாழைமரத்தில் மஞ்சள் தூளை தூவுங்கள். இப்படி செய்வதன் மூலம் நற்பலன் கிடைக்கும்.

மஞ்சள் பரிகாரம் #5

மஞ்சள் பரிகாரம் #5

வியாழக்கிழமைகளில் மஞ்சளை தானம் செய்வது நல்லதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் ஜாதகத்தில் பலவீனமான நிலையில் உள்ள குரு வலுவடைவார். உங்கள் மனதிற்கு பிடித்த வரன் கிடைக்க வேண்டுமானல், சூரிய பகவானுக்கு நீரை அர்ப்பணிக்கும் போது, அந்நீரில் சிறிது மஞ்சள் தூளை கலந்து கொள்ளுங்கள். இதனால் நினைத்தது நிறைவேறும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, December 10, 2022, 19:35 [IST]
Desktop Bottom Promotion