Just In
- 4 hrs ago
கோதுமை ரவை பாயாசம்
- 5 hrs ago
இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும் தெரியுமா?
- 6 hrs ago
இந்த மாதிரியான ரேகை கையில் இருப்பவர்கள் பிறக்கும்போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் தெரியுமா?
- 7 hrs ago
2021 கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு சூட்டைக் கிளப்பும் போஸ்களைக் கொடுத்த மாடல்கள்!
Don't Miss
- Automobiles
2021 ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.31.99 லட்சம்
- News
விறுவிறு ஏற்பாடுகள்.. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- சென்னையில் எங்கெங்கு?
- Movies
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இறந்த உடலின் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கும் வினோத பழக்கம் கொண்ட பழங்குடியினர்... ஏன் தெரியுமா?
உலகம் முழுவதும் இருக்கும் நரமாமிசங்களை சாப்பிடும் பழங்குடியினர்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பொதுவாக பழங்குடியினர்கள் என்றாலே நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறான ஒன்றாகும். ஏனெனில் முற்றிலும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் பழங்குடியினர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நரமாமிசம் மட்டுமின்றி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் பல சடங்குகள் பழங்குடியினரிடம் உள்ளது. அந்த வகையில் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஒரு பழங்குடியினர் இனம்தான் அமேசான் மழைக்காடுகளில் வசிக்கும் யனொமாமி பழங்குடியினர். இந்த பழங்குடியினர் அவர்களின் வினோதமான செயல்களுக்கும், சடங்குகளுக்கும் புகழ்பெற்றவர்கள். இவர்களின் சில சுவாரஸ்யமான மற்றும் அதிர்ச்சியான வாழ்க்கை முறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

வினோத சடங்கு
தங்கள் இனத்தவர்களின் இறந்த உடலை எரித்து அவர்களின் சாம்பலை சாப்பிடும் வினோத பழக்கம் இவர்களிடம் உள்ளது. இவர்கள் இனத்தில் ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் நிர்வாணமாகத்தான் சுற்றித் திரிகிறார்கள். மேலும் திறந்தவெளி கூடாரத்தில் வசிக்கிறார்கள்.

யார் இவர்கள்?
இவர்கள் யனோமாமி பழங்குடியின மக்கள், இந்த பழங்குடி அமேசான் மழைக்காடு பிராந்தியத்தில் 200-250 கிராமங்களில் பரவியுள்ளது. மனித சாம்பலால் செய்யப்பட்ட சூப்பை குடிக்கும் பாரம்பரிய மரண சடங்கை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். அது அவர்களின் உறவினராக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை, அது அவர்களின் குலத்தைச் சேர்ந்த யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
MOST READ: கள்ள உறவில் இருக்கும் மனைவியை சமாளிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் வழிகள் என்ன தெரியுமா?

இவர்களின் நம்பிக்கை
இந்த பழங்குடியினர்களுக்கு மரணத்தின் மீது நம்பிக்கையில்லை. அதற்கு மாறாக இவர்களின் எதிர் பழங்குடியினரான ஷாமன் இனத்தை சேர்ந்தவர்கள் தங்களை தாக்க தீய சக்திகளை அனுப்புவதாக இவர்கள் நம்புகிறார்கள். இதற்கான தீர்வாக அவர்கள் நினைப்பது இறந்த உடலை அகற்றுவதும், தகனம் செய்வதும் ஆகும்.

ஏன் சாம்பலை சாப்பிடுகிறார்கள்?
இறந்தவர்களின் அஸ்தியை உட்கொள்வது தங்கள் அன்பான பழங்குடி உறுப்பினரின் ஆவிக்கு உயிரூட்ட ஒரு வழியாக அமையும், இது வருங்கால சந்ததியினருக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதன் மூலம் அவர்கள் இறந்தவர்களின் ஆன்மாவிற்கு அமைதி அளிப்பதுடன் அவர்கள் மீண்டும் பிறக்கவும் வழிவகுப்பதாக இவர்கள் நம்புகிறார்கள்.

சாம்பல் சூப் எப்படி தயாரிக்கப்படுகிறது?
இறந்த உடல் இலைகளின் மூலம் மூடப்பட்டு ஆட்கள் யாரும் இல்லாத காட்டில் வைக்கப்படுகிறது. 30 முதல் 45 நாட்களுக்குப் பிறகு அவர்கள் சிதைந்த உடலில் இருந்து எலும்புகளை சேகரித்து தகனம் செய்யும் வழிமுறைகளை தொடர்கின்றனர். இந்த எலும்புகள் எரிக்கப்பட்டு அவை புளிப்பான வாழைப்பழங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சூப்புடன் கலக்கப்படுகிறது.

அனைவரும் குடிக்க வேண்டும்
ஒருவர் இறந்து விட்டால் அவரின் சாம்பல் மூலம் தயாரிக்கப்படும் சூப்பை கிராமத்தில் இருக்கும் அனைவரும் குடிக்க வேண்டும். இதனை நிறைவேற்ற இந்த பிரிவு மக்கள் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் இந்த சூப் அனுப்பப்படுகிறது. இதனை ஒரே மூச்சில் குடிக்க வேண்டும் என்பது கட்டாயமான நடைமுறையாகும். இந்த காலக்கட்டத்திலும் இந்த நடைமுறைகள் வழக்கத்தில் உள்ளது உலக மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.