Just In
- just now
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப வினோதமான காரணத்துக்காக காதலிப்பாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 12 min ago
உங்க எடை டக்குனு குறையவும் சீக்கிரம் தொப்பை காணமா போகவும்...இந்த உணவுகள சாப்பிட்டா போதுமாம்!
- 1 hr ago
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- 1 hr ago
மாதுளையை 'இப்படி' சாப்பிட்டா தொப்பை குறையுமாம்... அட இத்தன நாள் இது தெரியாம போச்சே...
Don't Miss
- Movies
விக்ரமன் தான் ரியல் ஹீரோ... RIP விஜய் டிவி… ட்விட்டரில் கொந்தளித்த ரசிகர்கள்!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. கமல்ஹாசனுடன் விஜய் வசந்த் சந்திப்பு.. காங்கிரஸ் கட்சிக்கு மநீம ஆதரவு?
- Technology
WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Automobiles
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
நவம்பரில் முழு சந்திர கிரகணம் எப்போது வருகிறது? அதனால் யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்படலாம் தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும் வானில் பல அதிசயங்கள் நிகழ்கின்றன. இயற்கையாக நிகழும் சில விஷயங்கள் நமக்கு ஆச்சரியங்களை கொடுக்கும். அந்த வகையில் தற்போது முழு சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. இந்தாண்டின் பகுதி நேர சூரிய கிரகணம் தீபாவளிக்கு மறுநாள் (அக்.25) அன்று உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்தது. இதைத்தொடர்ந்து இந்தாண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் வரும் நவம்பர் 8 ஆம் தேதி நிகழவுள்ளது. சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் ஒரு ரத்த நிலவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அடுத்த முழு சந்திர கிரகணம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 14, 2025 அன்று நிகழும் என்று நாசா தெரிவித்துள்ளது.
எனவே இது உங்கள் பகுதியில் தெரிகிறதா என்று பார்க்கவும். சுமார் 3 ஆண்டுகளுக்கு இதுவே கடைசி முழு சந்திர கிரகணமாக இருக்கும். இந்த அதிசயத்தை தவறாமல் எல்லாரும் பாருங்கள். ழு சந்திர கிரகணத்தை எப்போது? எங்கு? பார்க்கலாம் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

முழு சந்திர கிரகணம்
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சேரும் போது ஏற்படுவதே கிரணங்கள் என்று அழைக்கிறோம். இந்த நிகழ்வின்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால், அது சந்திர கிரகணம் என்றும், நிலவின் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. வரும் நவம்பர் 8ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. சந்திரன் பூமியின் நிழலின் அம்ப்ரா எனப்படும் இருண்ட பகுதிக்குள் விழுகிறது. இது நிகழும்போது சந்திரன் ரத்த சிவப்பு நிறமாக மாறும்.

இந்தியாவில் சந்திர கிரகணம்
கடைசியாக முழு சந்திர கிரகணம் மே 15, 2022 இல் நிகழ்ந்தது. அதேசமயம், அக்டோபர் 25, 2022 அன்று சூரிய கிரகணம் காணப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகு, சந்திர கிரகணம் நிகழ்கிறது. நவம்பர் 8 ஆம் தேதி இந்தியா மற்றும் உலகின் சில பகுதிகள் முழு சந்திர கிரகணத்தைக் காணலாம். இந்தியாவில் முழு சந்திர கிரகணம் கிழக்கு பகுதிகளிலிருந்து மட்டுமே தெரியும்.

எப்போது தெரியும்?
இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணமாக இவை இருக்கும். டில்லியில் ஒரு பகுதி சந்திர கிரகணம் தெரியும், இது மாலை 5:32 மணிக்கு சந்திர உதயத்தில் தொடங்கி மாலை 6:18 மணிக்கு முடிவடையும். டெல்லியை தவிர கொல்கத்தா, சிலிகுரி, பாட்னா, ராஞ்சி, குவஹாத்தி உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் மட்டுமே முழு சந்திர கிரகணத்தைக் காண முடியும். இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணம் மதியம் 2.30 மணியளவில் தொடங்கி மாலை 6.20 மணிக்கு முடிவடையும்.

எந்தெந்த நாடுகளில் காணலாம்?
இந்த முழு சந்திர கிரகணத்தை ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபில் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் பகுதிகளிலும் முழு சந்திர கிரகணத்தை காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மோசமான காலம்
மத நம்பிக்கைகளின்படி ஒரு மோசமான காலமாகக் கருதப்படும் கிரகண சூதக் காலத்தை மறந்துவிடாதீர்கள். பொதுவாக கிரகணங்களின்போது, வெளியில் செல்லக்கூடாது என்று கூறுவதுண்டு. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியில் வரக்கூடாது, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். மேலும், இந்த நாளில் புதிய வேலைகளை செய்வதைத் தவிர்க்கவும் பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது.

எப்போது வெளியில் வரக்கூடாது?
த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, சந்திர கிரகண சூதக் காலை 9:21 மணிக்கு தொடங்கி மாலை 6:18 மணிக்கு முடிவடையும். இதற்கிடையில், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கான சுதக் நேரம் பிற்பகல் 2:48 மணிக்கு தொடங்கி மாலை 6:18 மணிக்கு முடிவடையும். இந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்.

சந்திர கிரகணத்தை எப்படி பார்ப்பது?
சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பதால், சிறப்பு உபகரணங்கள் ஏதும் தேவையில்லை. சிறந்த பார்வைக்கு, நீங்கள் தொலைநோக்கியைப் பயன்படுத்தலாம். ஆனால் உங்களிடம் அவை இல்லையென்றால், நாசாவும் பிற அமைப்புகளும் நேரலையில் காட்டும் சந்திர கிரகணத்தை ஆன்லைனில் பார்க்கலாம்.