Latest Updates
-
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21?
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கோபத்தை குறைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது...
இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 31ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று மீன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். ஆகஸ்டு 31ம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
இன்று உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்களுக்கென பணம் செலவிட முடியும். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தால், இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்று வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து அழகான ஆச்சரியத்தைப் பெறலாம். இன்று நீங்கள் உங்கள் துணையின் வித்தியாசமான ரூபத்தைக் காணலாம். வேலை, வியாபாரம் பற்றி பேசினால் கலவையான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:25
அதிர்ஷ்ட நேரம்: காலை 7:20 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

ரிஷபம்
இன்றைய நாள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் நேர்மறையாக உணருவீர்கள். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தமாக பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் முன்னோர் தொழிலில் நீங்கள் இணைந்திருந்தால், இன்று உங்கள் தந்தையின் ஆலோசனையால் நல்ல பலன்களைப் பெறலாம். நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பணி ஒதுக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், அதிக கவனக்குறைவு செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இன்றைய தினம் உங்கள் கடின உழைப்புக்கான பலனாக முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உடன்பிறந்தவர்களுடன் உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்:11
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:05 மணி முதல் இரவு 8:15 மணி வரை

மிதுனம்
இன்றைய நாள் உங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கும். உங்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். நீங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணையைப் பெறலாம். நீங்கள் ஏற்கனவே திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் தவறான அணுகுமுறை உங்கள் துணையின் மனதைப் புண்படுத்தும். மேலும், உங்கள் உறவில் மனகசப்பு அதிகரிக்கக்கூடும். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், இன்று சில நல்ல மற்றும் நேர்மறையான மாற்றங்களைக் காணலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 12
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்
இன்று உங்கள் பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது. நகைச்சுவையாக கூட பிறரை விமர்சனம் செய்யாதீர்கள். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைவருடனும் இணைந்து கண்ணியமாக பணியாற்ற முயற்சி செய்யுங்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாளாக இருக்கும். வேலை தொடர்பான எந்தவொரு பெரிய பிரச்சனையும் தீர்க்கப்படும். நீங்கள் நல்ல நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் இன்று உங்களுக்கு விலை உயர்ந்த நாளாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் இன்று சில பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்:10
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6:30 மணி வரை

சிம்மம்
உத்தியோகஸ்தர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலனைத் தரும். நீங்கள் நீண்ட நாட்களாக பதவி உயர்வுக்காக கடினமாக உழைத்துக்கொண்டிருந்தால், இன்று உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அதே நேரத்தில், வணிகர்களின் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தடைபட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் முடிந்து, எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிலைமை சாதாரணமாக இருக்கும். குடும்ப உறுப்பினருடன் உங்களுக்கு தகராறு இருக்கலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்ய வேண்டும். உங்கள் உடல்நிலை பலவீனமாக இருக்கும். இன்று நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி
இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் சில சாதகமான மாற்றங்கள் இருக்கலாம். முதலில் உங்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசினால், பெற்றோரின் ஆசிர்வாதமும், அவர்களின் வழிகாட்டுதலும் கிடைக்கும். நீங்கள் நீண்ட காலமாக பழைய சொத்தை விற்க திட்டமிட்டிருந்தால், இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். உங்கள் துணையைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் பெரிய பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியும். நீங்கள் அரசு வேலைக்கு முயற்சி செய்தால் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். விரைவில் நீங்கள் விரும்பும் வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் தொழில் வேகமாக முன்னேறும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், உங்களுக்கு சருமத்தில் ஒவ்வாமை ஏதாவது இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்:15
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை

துலாம்
குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்களால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்களின் ஆசியைப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை நல்ல மனநிலையில் இருப்பார். அவர்களிடமிருந்து நீங்கள் ஒரு அற்புதமான பரிசையும் பெறலாம். வேலையைப் பற்றி பேசுகையில், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலை செய்பவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். தங்கம், வெள்ளி, சொத்து, உணவு, பானம் போன்றவை தொடர்பான வியாபாரம் செய்தால் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 17
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:30 மணி முதல் மாலை 6 மணி வரை

விருச்சிகம்
இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் வேலை சம்பந்தமாக நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும், வேலையுடன், உங்கள் ஆரோக்கியத்தையும் முழுமையாக கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இன்றைய நாள் நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். புதிய வருமான ஆதாரத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் கவனக்குறைவு உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்க செய்யலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 20
அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

தனுசு
இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை மிகவும் நல்ல நாளாக இருக்கும். நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் உணர்வீர்கள். முடிந்தால், உங்கள் தினசரி வழக்கத்தில் சில புதிய உடற்பயிற்சிகளைச் சேர்க்கவும். காதல் விஷயத்தில் இன்று நல்ல பலன் கிடைக்கும். உங்கள் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். விரைவில் உங்கள் திருமணம் நிச்சயமாகலாம். இன்று பணத்தின் அடிப்படையில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவு செய்யலாம். வேலையைப் பற்றிப் பேசும்போது, அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். இது போன்ற விஷயங்கள் உங்கள் வேலையைப் பாதிக்கும். அதே நேரத்தில், வணிகர்கள் எந்த பெரிய நிதி பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 28
அதிர்ஷ்ட நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை

மகரம்
வேலையைப் பற்றி பேசுகையில், பதவி உயர்வு வடிவத்தில் இன்று உங்களின் கடின உழைப்பின் நல்ல பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக கூட்டு வியாபாரம் தொடங்க நினைத்தால் விரைவில் வெற்றி கிடைக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்பைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வீட்டின் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். உங்கள் பக்கத்தை புத்திசாலித்தனமாகவும் அமைதியாகவும் முன்வைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மோதல்கள் உங்கள் வீட்டின் அமைதியைக் கெடுக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் உங்கள் கை மற்றும் கால்களில் வலியால் அவதியுறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 34
அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மாலை 5:15 மணி வரை

கும்பம்
இன்றைய தினம் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்திலிருந்து நேர்காணலுக்கான அழைப்பைப் பெறலாம். உங்கள் தயாரிப்புகளில் எந்தத் தவறையும் விடாதீர்கள். நீங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இன்று வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். உங்களுக்கிடையில் ஏதோ ஒரு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கோபத்தில் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், வெளி உணவைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்:4
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:05 மணி முதல் இரவு 8:55 மணி வரை

மீனம்
இன்று உங்களுக்கு அன்பின் அடிப்படையில் மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பு அமையும். திருமணமானவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். நிதிக் கண்ணோட்டத்தில் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள். மற்றவர்களைக் கவர அதிக செலவு செய்வதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சம்பந்தமாக திடீர் தடைகள் வரலாம். தடைப்பட்ட லாபத்தைப் பெற வணிகர்கள் மிகவும் கடினமாகப் போராட வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு சராசரி நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட நேரம்: காலை 9:05 மணி முதல் மதியம் 12 மணி வரை



Click it and Unblock the Notifications











