For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan 24 November 2022: இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்...

|

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மேஷ ராசியின் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். நவம்பர் 24ம் தேதி வியாழக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களின் சில வேலைகள் பாதியில் சிக்கக்கூடும். வியாபாரிகளுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும். இதனால் கவலைகள் அதிகரிக்கலாம். விவேகத்துடன் செயல்பட்டால் உங்கள் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். உத்தியோகஸ்தர்கள் இன்று நிறைய அலைய வேண்டியிருக்கும். இன்று முதலாளியின் நடத்தை உங்களிடம் அவ்வளவு சரியாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பண விஷயத்தில் இன்று கலவையான பலன்களைப் பெற்றிடலாம். வீட்டின் சூழல் அமைதியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உடல்நலம் இன்று பலவீனமாக இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: காலை 8:20 மணி முதல் மாலை 3 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெற வாய்ப்புள்ளது. இன்று உங்களது நீண்ட கால நிதி பிரச்சனைகள் நீங்கும். வேலையைப் பற்றி பேசினால், வேலை அல்லது வணிகம் எதுவாக இருந்தாலும், இன்று உங்கள் கடின உழைப்பு வெற்றியடையும். தொழிலதிபர்கள் லாபம் ஈட்ட பெரிய வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வியாபாரம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மிகுந்த மரியாதையைப் பெறலாம். குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு சருமம் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி அன்பர்கள் இன்று கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் பதற்றம் நிறைந்ததாக இருக்கலாம். குடும்பத்தில் உள்ள சிலருடன் உங்களுக்கு கருத்து வேறுபாடும் சாத்தியமாகும். இன்று உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையெனில் உங்கள் வீட்டின் அமைதி உங்களாலேயே குலைந்து போகலாம். வேலையைப் பற்றி பேசுகையில், இன்று உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. வணிகர்கள் பழைய சட்ட விவகாரத்தில் இருந்து விடுபடலாம். உங்கள் தடைப்பட்ட வேலை விரைவில் முடிவடையும். உங்கள் நிதி நிலை இயல்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் வருமானத்தை மனதில் வைத்து செலவு செய்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: வயலட்

அதிர்ஷ்ட எண்: 26

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை

கடகம்

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். காதல் விஷயத்தில் இன்று உங்கள் துணையுடன் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். இன்று நீங்கள் உங்களுக்கு பிடித்த இடத்திற்கு வெளியே செல்லலாம். உங்கள் துணையிடமிருந்து அழகான பரிசையும் பெறலாம். இன்று அலுவலகத்தில் மேலதிகாரியுடன் முக்கியமான சந்திப்பு இருக்கலாம். உங்கள் ஆலோசனைகளுக்கு மேலதிகாரி அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். இது உங்கள் நம்பிக்கையையும் அதிகரிக்க செய்யலாம். வணிகர்கள் இன்று பெரிய அளவில் பேரம் பேசும் வாய்ப்பைப் பெறலாம். நீங்கள் எந்த விதமான மாற்றத்தையும் திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த நேரம் அதற்கு பொருத்தமானது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். சிறு பிரச்சனையாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 45

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கலாம். வணிகர்களுக்கு தொழிலில் சிரமங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கியிருந்தால், இன்று அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தம் கணிசமாக அதிகரிக்கும். நிதி சிக்கல்களால், மனம் மிகவும் அலைக்கழிக்கப்படும். மேலும் உங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிறைய சிரமங்களைச் சந்திக்க நேரிடும். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் அதிகமாக கேலி பேசுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று முதலாளியின் பார்வை உங்கள் மீது இருக்கும். இதுபோன்ற விஷயங்கள் உங்கள் பெயரைம் கெடுத்துவிடும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களிடையே அன்பும் ஒற்றுமையும் நிலவும். வாழ்க்கைத்துணையின் அன்பான நடத்தை உங்களை சிறப்புற உணர வைக்கும். பொருளாதார ரீதியாக, இன்று மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். அதிகப்படியான செலவுகள் ஏற்படலாம். உடல்நிலையில் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:25 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பாக அமைய போகிறது. நண்பர்களுடன் உற்சாகதமாக சுற்றித் திரியும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அத்தகைய நேரத்தைச் செலவழித்த பிறகு நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் உணருவீர்கள். அலுவலகத்தில் ஏதேனும் வேலை நிலுவையில் இருந்தால், இன்றே அதை முடிக்க முயற்சி செய்யுங்கள். முதலாளி உங்கள் படைப்புகளை மதிப்பாய்வு செய்யலாம். வணிகர்கள் முக்கியமான ஒப்பந்தங்களைச் செய்யும்போது அவசரப்பட வேண்டாம். இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் உடன்பிறந்தோர் திருமணத்திற்கு தகுதியானவர்களாக இருந்தால், அவர்களுக்கு இன்று நல்ல வரன் தேடி வரலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம். எனவே, உணவில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

துலாம்

துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, சில சாதகமான மாற்றங்களை பெறலாம். அலுவலகத்தில் பெரிய திட்டத்தில் நீங்கள் வேலை செய்தால், இன்று நீங்கள் வெற்றியைப் பெறலாம். தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தை மேலும் மேம்படுத்த நல்ல வாய்ப்பைப் பெறுவார்கள். ஹோட்டல் அல்லது உணவகங்கள், தங்கம் மற்றும் வெள்ளி, போக்குவரத்து, சொத்து போன்றவை தொடர்பான பணிபுரிபவர்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை தேவையற்ற விஷயங்களில் வீணாக்குவதைத் தவிர்க்கவும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமற்றதாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த உங்களிள் அக்கறை கணிசமாக அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று பேச்சில் அதிக கவனம் தேவை. இல்லையெனில் தெரிந்தோ தெரியாமலோ ஒருவரின் மனதைப் புண்படுத்த நேரிடலாம். பேசும்போது உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்துவது நல்லது. இன்று பண விஷயத்தில் நல்ல அறிகுறி இருக்காது. திடீர் நிதி இழப்பு ஏற்படலாம். இதெல்லாம் உங்கள் தவறான முடிவுகளின் விளைவு. வேலை தொடர்பான முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வணிகர்கள் வெளிநாட்டில் உங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டிருந்தால், இன்று உங்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கும். நீங்கள் சமீபத்தில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணலைக் கொடுத்திருந்தால், இன்று நீங்கள் நேர்மறையான பதிலைப் பெறலாம். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

தனுசு

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்காது. இன்று நீங்கள் தேவையில்லாமல் அலைந்து திரிய நேரிடும். இதனால் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணரலாம். உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து உங்களுக்காக போதுமான நேரத்தை ஒதுக்குவது நல்லது. இல்லையெனில் உங்கள் உடல்நலம் மேலும் மோசமடையக்கூடும். வேலை விஷயத்தில் அதிக மனஅழுத்தத்தை எடுத்து கொள்வது சரியல்ல. உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காவிட்டால் பொறுமையுடன் செயல்படுங்கள். சரியான நேரம் வரும்போது உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும். வேலையுடன், உங்கள் குடும்பத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் கவனக்குறைவான அணுகுமுறை உங்கள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். பொருளாதார முன்னணியில், இன்று கலவையாக நாளாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசி அன்பர்கள் இன்று வீண் கோபத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகச் சூழல் மிகவும் பதற்றமாக இருக்கும். மேலதிகாரி உங்களை நம்பி சில முக்கியமான வேலைகளை ஒப்படைத்திருந்தால், அது தொடர்பான விஷயங்கள் கசிந்து, பாதகமான சூழ்நிலையை நீங்கள் சந்திக்க நேரிடலாம். வியாபாரிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களின் சில முக்கியமான வேலைகளை அவர்கள் தடுக்கலாம். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும். வருமானம் உயர வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் வருந்த நேரிடும். கோபத்தில் இதுபோன்ற எந்த வேலையையும் செய்யாமல் இருப்பது நல்லது. நாளின் இரண்டாம் பகுதியில் திடீரென்று சிறிது தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். உங்கள் பயணம் வேலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆரோக்கியத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 8 மணி வரை

கும்பம்

கும்பம்

கும்ப ராசி அன்பர்கள் இன்று ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பழைய நோய் திடீரென வெளிப்படுவதால் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். ஓய்வில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்று நீங்கள் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். இல்லையெனில் உங்கள் சிரமங்கள் அதிகரிக்கும். வணிகர்கள் பெரிய நிதி ஆதாயத்தைப் பெறலாம். உங்கள் பழைய தொடர்புகளால் நல்ல பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. காதல் விஷயத்தில் இன்று மிகவும் காதல் நிறைந்த நாளாக இருக்கும். இன்று உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். இது தவிர, திருமணம் பற்றி அவர்கள் உங்களுக்கு ஒரு பெரிய வாக்குறுதியையும் அளிக்கலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 35

அதிர்ஷ்ட நேரம்: காலை 7:15 மணி முதல் மதியம் 2 மணி வரை

மீனம்

மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று வெற்றி மீது வெற்றி வந்து சேரும். நீங்கள் புதிய வாகனம், வீடு, சொத்து போன்றவற்றை வாங்க நினைத்தால் இன்று வெற்றி பெறலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று உங்களுக்காக போதுமான நேரம் கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பரிசு வழங்க நினைத்தால், இன்றைய நாள் சாதகமான நாளாகும். வேலையில், இன்று மிகவும் நல்ல அறிகுறிகளைக் கொடுக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். இன்று உங்கள் கடின உழைப்பால் முதலாளி மிகவும் மகிழ்ச்சியடைவார். தொழிலதிபர்களுக்கு முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பு கிடைக்கும். விரைவில் உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் , இன்று உங்கள் உடல்நிலையில் திடீர் சரிவு ஏற்படலாம். உங்கள் உணவில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 1 மணி முதல் இரவு 7 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Today Rasi Palan - 24 November 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 24 November 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Thursday, November 24, 2022, 5:01 [IST]
Desktop Bottom Promotion