For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வரவிற்கு மேல் அதிகமாக செலவு செய்ய நேரிடும்..

இன்று ரிஷபம் மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

Today Rasi Palan - 20 May 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று ரிஷபம் மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மே 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். முதலாளியின் அறிவுரைகளை நீங்கள் கேட்டு நடந்து கொள்ள வேண்டும். வேலையில் தொடர்ந்து கவனக்குறைவாக இருந்தால், நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். இன்று வணிகர்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் உங்களின் புதிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யத் தொடங்கலாம். இது தவிர, நீங்கள் சில புதிய உத்திகளை கையாளலாம். நீங்கள் கூட்டு வணிகம் செய்தால், உங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுங்கள். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். பெரியவர்களுடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல தொடக்கமாக இருக்கும். காலையில் சில நல்ல செய்திகள் கிடைத்து மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று நீங்கள் மனதளவில் மிகவும் வலுவாக இருப்பீர்கள். தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கலாம். இதனால், நீங்கள் அதிக அழுத்தத்தை உணர்வீர்கள். அதே போல் பல எதிர்மறை எண்ணங்களும் உங்கள் மனதில் வரலாம். வேலையை விட்டுவிடுவதற்கும் நீங்கள் முடிவு செய்யலாம். இருப்பினும், அவசரப்பட்டு இதுபோன்ற முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். இன்று வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். பண விஷயத்தில் நல்ல பலன்களைப் பெறலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். இன்று சற்று நிம்மதியாக உணருவீர்ர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 31

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:55 மணி முதல் இரவு 10 மணி வரை

மிதுனம்

மிதுனம்

நீங்கள் சமீபத்தில் புதிய வேலையில் சேர்ந்திருந்தால், இன்று உங்களுக்கு நல்ல அறிகுறியாக இருக்கும். அலுவலகத்தில், உங்கள் கடின உழைப்பை மேலதிகாரி பாராட்டுவார். மேலும் புதிய பொறுப்புகளும் உங்களுக்கு வழங்கப்படலாம். நீங்கள் சிறந்ததைக் கொடுக்க முயற்சியுங்கள். விரைவில் நீங்கள் வெற்றியின் உச்சத்தை அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான எந்த ஒரு வேலையும் திடீரென நடுவில் தடைபடலாம். கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவின் விளைவுகளை நீங்கள் அனுபவிக்க நேரிடலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். பெற்றோரின் ஆசியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்குப் பிரிவினை இருந்தால், இன்று உங்களுக்கிடையேயான இடைவெளி சற்று குறையும். ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு போதுமான ஓய்வு தேவை. உங்கள் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டததீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கடகம்

கடகம்

இன்று வீட்டின் சூழல் சற்று மோசமடைவது போல் தெரிகிறது. உங்கள் கூர்மையான வார்த்தைகள் அன்புக்குரியவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும். கோபத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இன்று பணத்தின் அடிப்படையில் விலை உயர்ந்ததாக இருக்கும். இன்று தேவைக்கு அதிகமாக செலவுகள் அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்களின் வேலைகள் அனைத்தும் இன்று சுமூகமாக முடிவடையும். உங்களுடன் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். அதே நேரத்தில், வர்த்தகர்களுக்கு புதிய வழிகள் திறக்கப்படலாம். உங்கள் திட்டங்களிலும் சில மாற்றங்களைச் செய்யலாம். நாளின் இரண்டாம் பகுதியில் பணி தொடர்பான பயணங்களையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், இதய நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:40 மணி முதல் மாலை 6 மணி வரை

சிம்மம்

சிம்மம்

வேலை விஷயமாக இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள், அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். உங்களின் இந்த பயணம் மிக முக்கியமானதாக இருக்கும். வணிகர்கள் பெரிய வாடிக்கையாளர்களுடன் பழகும்போது அவர்களின் பேச்சில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில் உங்கள் கட்டுப்பாடற்ற பேச்சே உங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். இன்றைய நாள் நிதி ரீதியாக உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தினால், கடனில் இருந்து விரைவில் விடுபடலாம். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், வெளி உணவுகளைத் தவிர்க்கவும். குறிப்பாக எண்ணெயில் வறுத்த, பொரித்த உணவைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

கன்னி

கன்னி

இன்று பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல அறிகுறிகள் தென்படும். உங்கள் நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படலாம். நீண்ட நாட்களாக நிலம், வீடு அல்லது புதிய வாகனம் போன்றவற்றை வாங்க திட்டமிட்டு இருந்தால் இன்று அதற்கு ஏற்ற நாள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தந்தையின் உடல்நிலை மேம்படும். தாயாரின் ஆதரவும் இருக்கும். வாழ்க்கைத் துணையின் நடத்தையிலும் சில சாதகமான மாற்றங்களைக் காணலாம். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால், உங்கள் வருமானத்தை அதிகரிக்க வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், இன்று பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். இன்று உடல் நலம் சீராகும். உங்கள் பரபரப்பான வழக்கத்திலிருந்து உங்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 38

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

துலாம்

துலாம்

உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். உங்கள் கடின உழைப்பின் பலத்தால், இன்று நீங்கள் அலுவலகத்தில் உங்கள் நிலையை வலுப்படுத்த முடியும். மேலும் உங்கள் மரியாதையும் கூட அதிகரிக்கும். இன்று வணிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் நாளாக எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஒரு சிறந்த வாய்ப்பு உங்கள் கைகளுக்கு தவறலாம். இருப்பினும் நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. நேர்மறையாக இருந்து தொடர்ந்து கடினமாக உழைக்கவும். விரைவில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். வீட்டின் பெரியோர்களின் பாசமும் ஆதரவும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நடத்தையை வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். முடிந்தால், இன்று உங்கள் துணைக்கு ஒரு அற்புதமான ஆச்சரியத்தைத் திட்டமிடுங்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு கைகள் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 29

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:35 மணி முதல் மதியம் 1 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று வணிகர்களுக்கு கலவையான நாளாக இருக்கும். உங்கள் வணிகத்தை மேலும் முன்னேற்ற வங்கியில் கடன் வாங்க திட்டமிட்டால், பெரிய தொகையை கடனாக வாங்குவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் வரும் நாட்களில் உங்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களுடன் மோதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்தவும். உங்கள் வேலை மற்றும் உங்கள் பெயர் இரண்டுமே இதுபோன்ற விஷயங்களால் பாதிக்கப்படலாம். வாழ்க்கைத்துணையின் நடத்தையில் முரட்டுத்தனம் இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்கள் உங்களைப் புறக்கணிப்பதாக உணர்வீர்கள். அத்தகைய சூழ்நிலையில், பேச்சுவார்த்தை மூலம் அவர்களின் மனதை அறிய முயற்சி செய்யுங்கள். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாள் அல்ல. வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கலாம். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் உணவில் அதிக அலட்சியமாக இருக்காதீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

தனுசு

தனுசு

அலுவலகத்தில் போட்டிகள் கணிசமாக அதிகரிக்கும். இன்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிச்சுமை உங்களை மிகவும் சோர்வடையச் செய்யும். மேலும் நீங்கள் அதிக மன அழுத்தத்திலும் இருப்பீர்கள். நேர்மறையாக இருந்து, கடினமாக உழைத்தால், வரும் நாட்களில் அதன் சரியான பலன்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இன்று வியாபாரம் சாதகமாக இருக்கும். உங்கள் தொழிலில் வளர்ச்சி சாத்தியமாகும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீங்கள் மதிப்புமிக்க ஒன்றை வாங்க விரும்பினால், இந்த நேரத்தில் அதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பெற்றோருடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். துன்பங்களில், உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உடல்நலம் பலவீனமாக இருக்கும். சில பழைய நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9 மணி வரை

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு வேலையில் திடீர் மாற்றம் ஏற்படும். அது வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு சாதகமான பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இருப்பினும், எந்தவொரு முக்கியமான வணிக முடிவையும் எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் உறவு வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்கும். இந்த வழியில், நீங்கள் ஒருவருக்கொருவர் அற்புதமான நேரத்தைச் செலவிடுவீர்கள். முடி உதிர்தல் அல்லது சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 11

அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4 மணி வரை

கும்பம்

கும்பம்

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் விரும்பும் வேலையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. கடின உழைப்பு இருந்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் வியாபாரிகள் இன்று மிகவும் ஏமாற்றம் அடைவார்கள். இன்று வணிக ரீதியாக எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இன்று வீட்டின் சூழ்நிலை நன்றாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை குலைந்து போகலாம். வெளியாட்களின் தலையீட்டால் இன்று வீட்டில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று பண விஷயத்தில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உங்களுக்கு சோர்வு, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் மாலை 3 மணி வரை

மீனம்

மீனம்

அரசு ஊழியர்களுக்கு திடீரென இடமாற்றம் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்கள் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் முன்னேற்றத்திற்கான நேரம் முடிந்துவிட்டது. உணவுப் பொருட்கள், எழுதுபொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், மத சம்பந்தமான விஷயங்கள் போன்றவை தொடர்பான வேலைகளைச் செய்பவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சாதகமான நாளாக இருக்கும். நீங்கள் பெரிய நிதி ஆதாயத்தைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். இன்று வீட்டில் உள்ளவர்களுடன் சிறு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் ஏதாவது திருமண விழாவிலும் பங்கேற்கலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று நீங்கள் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சரியான கவனம் செலுத்த முடியும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி பேசினால், இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan - 20 May 2022 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 20 May 2022 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Thursday, May 19, 2022, 20:00 [IST]
Desktop Bottom Promotion