For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மனம் விட்டு பேசி பிரச்சனை தீர்க்க முயற்சிக்கவும்...

இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அக்டோபர் 12 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

|

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். அக்டோபர் 12 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

Today Rasi Palan -12 October 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

உத்தியோகஸ்தர்களுக்கு இன்று அலுவலகத்தில் நல்ல நாளாக இருக்காது. வியாபாரிகள் பெரிய வாடிக்கையாளர்களைக் கையாளும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். சிறு கவனக்குறைவால், லாபத்தை இழக்க நேரிடலாம். முதலாளி உங்களுக்கு சில முக்கியமான வேலைகளை ஒப்படைத்திருந்தால், அது தொடர்பான வேலைகளை ஒதுக்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். பணத்தைப் பொறுத்தவரை இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். இன்று எதிர்பார்த்த பணத்தைப் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். நீங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில், உடல்நலத்தில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 19

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:20 மணி முதல் இரவு 8 மணி வரை

ரிஷபம்

ரிஷபம்

உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் வேலையில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். குறிப்பாக சக ஊழியர்களுடன் கிசுகிசுப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் இன்று நீங்கள் சிக்கலில் சிக்கலாம். அது உங்கள் வேலையைப் பாதிக்கும். உயர் அதிகாரிகள் முன்னால் உங்கள் பிம்பமும் மோசமடையக்கூடும். வணிகர்கள் இன்று திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். உங்களுடைய இந்தப் பயணம் மிகவும் சோர்வாக இருந்தாலும், எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. நிதி அடிப்படையில், இன்று உங்களுக்கு கலவையான முடிவுகளைத் தரும். வீட்டை அலங்கரிக்க அல்லது பழுதுபார்க்க நிறைய பணம் செலவழிக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் சிறு சச்சரவுகள் ஏற்படலாம். உடல்நலம் பற்றி பேசுகையில், நீரிழிவு நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

அதிர்ஷ்ட எண்: 13

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

மிதுனம்

மிதுனம்

உத்தியோகஸ்தர்களுக்கு இன்று ஒரு கலவையான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நேரம் வரும்போது தங்கள் கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். வணிகர்கள் பெரிய தொகையை கடனாக வாங்குவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் வணிக முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். உங்கள் தந்தையின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தால் உங்கள் பெரிய கவலைகளை நீங்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவில் நல்லிணக்கம் இருக்கும். இன்று நீங்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிட முடியும். நிதி நிலை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை விட அதிகமாக செலவிட வேண்டாம். இந்த நேரத்தில் நீங்கள் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று நீங்கள் மிகவும் சோர்வாகவும் சுமையாகவும் உணரலாம். உங்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க, உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் போதுமான ஓய்வும் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை

கடகம்

கடகம்

தனிப்பட்ட வாழ்க்கையில் சில சச்சரவுகள் இருக்கும். குழந்தைகளின் பிடிவாத குணம் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். அவர்களின் தவறான வார்த்தைகளை ஆதரிப்பதைத் தவிர்த்து அவற்றை அன்புடன் விளக்க முயற்சிப்பது நல்லது. இன்று வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யலாம். வேலையைப் பற்றி பேசும்போது, வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இன்று உங்களுக்கு மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். வியாபாரிகள், தடைப்பட்ட வேலையை முடிக்க மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் எல்லா வேலைகளையும் அமைதியான மனதுடன் முடிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் வருமானத்திற்கும் செலவுகளுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 15

அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:30 மணி முதல் மாலை 5 மணி வரை

சிம்மம்

சிம்மம்

வேலை விஷயத்தில் இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம் அல்லது உயர் பதவியைப் பெறலாம். வியாபாரிகள் ஒரு பெரிய ஒப்பந்தம் செய்வதற்கான வாய்ப்பைப் பெறலாம். குறிப்பாக நீங்கள் கூட்டு வியாபாரம் செய்தால், இன்று உங்களுக்கு மிகவும் லாபகரமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், திறந்த மனதுடன் செலவழிப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். குடும்ப வாழ்க்கையில் சில பதற்றங்கள் சாத்தியமாகும். வீட்டின் சில உறுப்பினர்களுடனான உறவில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் கோபமான இயல்பு உங்கள் உறவில் விரிசலை அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்கள் வழக்கத்தை ஒழுங்கமைக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை

கன்னி

கன்னி

தேவைப்படும் ஒருவருக்கு உதவ இன்று உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், உங்கள் நிலை அறிந்து உதவ வேண்டும். பணத்தின் அடிப்படையில் இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். உங்கள் சேமிப்பு கணிசமாக அதிகரிக்கலாம். இன்று நீங்கள் சில முக்கியமான நிதி முடிவுகளையும் எடுக்கலாம். வேலையைப் பற்றி பேசும்போது, அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலையில் அதிகமாக தலையிடுவதைத் தவிர்க்கவும். இல்லையெனில் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். நீங்கள் இப்போது வேலையை மாற்ற நினைத்தால், இது சரியான நேரம் அல்ல. வணிகர்கள் நல்ல நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக உணவு மற்றும் பானம் வியாபாரம் செய்வோருக்கு, இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு கண்கள் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், கவனக்குறைவாக இருக்காதீர்கள். உடனடியாக மருத்துவரை அணுகவும்.

அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 16

அதிர்ஷ்ட நேரம்: காலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை

துலாம்

துலாம்

இன்று உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் நீண்ட காலமாக எதையாவது பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால், இன்று உங்களுக்கு பிரச்சனையிலிருந்து விடுபட வலுவான வாய்ப்பு உள்ளது. வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் மீது அதிக பணிச்சுமை காரணமாக, இன்று சில பிரச்சனைகள் இருக்கலாம். இருப்பினும், உங்களது அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். வணிகர்கள் நிதி பரிவர்த்தனைகள் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வீட்டுச் சூழல் நன்றாக இருக்கும். மேலும், குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணை மிகவும் காதல் நிறைந்த மனநிலையில் இருப்பார். இன்று நீங்கள் அன்புக்குரியவரிடமிருந்து ஒரு அற்புதமான பரிசைப் பெறலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசும்போது, உணவில் கவனக்குறைவை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 22

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை

விருச்சிகம்

விருச்சிகம்

அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சேர்ந்து வேலை செய்தால் நன்றாக இருக்கும். வீண் விவாதத்ததால் உங்களுக்கு இழப்பு மட்டுமே ஏற்படும். இன்று நீங்கள் உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். குறிப்பாக நீங்கள் சமீபத்தில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கியிருந்தால், இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதாரணமாக இருக்கும். வேலையுடன், உங்கள் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் மனநிலை நன்றாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், எந்தவொரு சர்ச்சைக்குரிய பிரச்சனையையும் விவாதிப்பதைத் தவிர்க்கவும். இல்லையெனில் உங்களுக்கு இடையே ஒரு சர்ச்சை ஏற்படலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். நீங்கள் இன்று பணம் தொடர்பான பெரிய வேலை எதுவும் செய்யாமல் இருந்தால் நல்லது. ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், இன்று காதுகள் தொடர்பான பிரச்சனை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நேரம்: மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை

தனுசு

தனுசு

உத்தியோகஸ்தர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும். இவை அனைத்தும் உங்கள் கடின உழைப்பின் விளைவாகும். தொடர்ந்து கடினமாக உழைத்துக்கொண்டிருந்தால், விரைவில் வெற்றி உங்கள் காலில் முத்தமிடும். இரும்பு வியாபாரிகள் இன்று நல்ல லாபம் பெறலாம். உங்கள் தொழிலை முன்னேற்றுவதற்கான நல்ல வாய்ப்பையும் நீங்கள் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். அன்பும் ஒற்றுமையும் வீட்டின் உறுப்பினர்களிடையே இருக்கும். குறிப்பாக நீங்கள் உடன்பிறப்பின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இன்று பணத்தைப் பொறுத்தவரை சற்று விலை உயர்ந்த நாளாக இருக்கும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். உடல்நலத்தைப் பற்றி பேசுகையில், உங்களுக்கு ஏற்கனவே நோய் இருந்தால், கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மகரம்

மகரம்

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலை செய்வோருக்கு இன்று மிக முக்கியமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். வணிகர்கள் இன்று சில புதிய வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கான வாய்ப்பைப் பெறலாம். விரைவில் உங்கள் வியாபாரம் பெருகும். இன்றைய நிதி நிலைமையில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த முயற்சியில் நல்ல லாபம் பெறலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பெற்றோரின் ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தகராறு இருந்தால், இன்று உங்களுக்கிடையே எல்லாம் சாதாரணமாக இருக்கும். உங்கள் நடத்தையில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் இருந்தால், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரீம்

அதிர்ஷ்ட எண்: 14

அதிர்ஷ்ட நேரம்: மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை

கும்பம்

கும்பம்

வணிகர்கள் அவசர முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். நீங்கள் ஒரு பெரிய முதலீட்டைச் செய்யப் போகிறீர்கள் என்றால், ஒரு அனுபவமிக்க நபரிடமிருந்து சரியான ஆலோசனையைப் பெற்ற பின்னரே உங்கள் இறுதி முடிவை எடுங்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் உங்களின் நடத்தையில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். உயர் அதிகாரிகளின் வார்த்தைகளைப் புறக்கணிக்கும் தவறை செய்யாதீர்கள். இன்று பணத்தின் அடிப்படையில் சாதாரண நாளாக இருக்கும். நீங்கள் ஒரு பெரிய செலவைச் செய்ய விரும்பினால், அதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசும்போது, உங்கள் வாழ்க்கைத் துணையின் முரட்டுத்தனமான நடத்தை உங்களை மகிழ்ச்சியடையச் செய்யலாம். மனம் விட்டு பேசுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைத் துணையின் மனநிலையை அறிய முயற்சி செய்யுங்கள். கோபம் பிரச்சனைகளை மோசமாக்கும். ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், நீங்கள் போதுமான ஓய்வு பெற வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: 23

அதிர்ஷ்ட நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் இரவு 9:15 மணி வரை

மீனம்

மீனம்

சில்லறை வியாபாரிகளுக்கு இன்று மிகவும் உகந்த நாளாக இருக்கும். நீங்கள் பெரிய நிதி ஆதாயங்களைப் பெறலாம். உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்தால், இந்த நேரம் அதற்கு சாதகமானது. நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பெற விரும்பினால், இன்று உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கப் போகிறது. இன்று பணத்தின் அடிப்படையில் சிறந்த நாளாக இருக்கும், இன்று திடீரென்று நீங்கள் பண வரவைப் பெறலாம். இது தவிர, பணப் பற்றாக்குறையால் தடைப்பட்டிருக்கும் உங்கள் எந்தப் பணிகளையும் முடிக்க முடியும். குடும்ப வாழ்க்கையில் நிலைமைகள் சாதகமாக இருக்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நாளின் இரண்டாம் பகுதியில், குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கலாம். உங்கள் உடல்நலம் இன்று நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 18

அதிர்ஷ்ட நேரம்: மாலை 3 மணி முதல் மாலை 6:30 மணி வரை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Today Rasi Palan -12 October 2021 Daily Horoscope in Tamil, Today Horoscope in Tamil

Today Rasi Palan : Get Daily Horoscope for 12 October 2021 In Tamil, Read daily horoscope prediction of aries, taurus, cancer, leo, virgo, scorpio, libra, pisces, gemini, aquarius zodiac signs in tamil.
Story first published: Monday, October 11, 2021, 18:36 [IST]
Desktop Bottom Promotion