Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா?
Today Rasi Palan 07 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை குறையும்...
இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 7ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம். மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வேலை, தொழில், சந்தோஷம், கஷ்டம் என அனைத்தை பற்றியும் இதன் மூலம் அறியலாம். இன்றைய நாள் மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 7ம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு வேலையில் மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். நிலுவை பணிகள் அதிகரிக்கலாம். இதனால், நீங்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் விலையுயர்ந்த பொருளை வாங்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் சிறந்த ஒருங்கிணைப்பு இருக்கும். வீட்டுப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் கண்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 10
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். பண விஷயத்தில் இன்று உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். உங்கள் நிதி முயற்சிகள் விரைவில் வெற்றியடையும். விரைவில் பணம் தொடர்பான அனைத்து கவலைகளும் தீரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வணிகர்கள் இன்று ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கலவையான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 31
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:55 மணி முதல் இரவு 10:00 மணி வரை

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே, உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. அலுவலகத்தின் சூழல் இன்று மிகவும் பதற்றமாக இருக்கும். முதலாளியின் மனநிலை மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு சிறிய கவனக்குறைவும் உங்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். தொழிலதிபர்கள் இன்று நல்ல நிதி ஆதாயங்களைப் பெறலாம். இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். உங்கள் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 30
அதிர்ஷ்ட நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கடகம்
கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் கடின உழைப்பை மேலதிகாரி கவனிப்பார். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். இன்று உங்களுக்கு நிதி பலன்கள் கிடைக்கும். உங்கள் வீட்டின் சூழலை நன்றாக வைத்திருக்க, சிறிய விஷயங்களுக்கு கோபப்படுவதைத் தவிர்க்கவும். உங்கள் உடல்நிலை குறித்து தேவையில்லாமல் கவலைப்பட வேண்டாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற பழகி கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 21
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 12:40 மணி முதல் மாலை 6:00 மணி வரை

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் மனகசப்பு ஏற்படலாம். இதனால், மிகவும் மன அழுத்தத்தில் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை இன்று சில பெரிய சாதனைகளைப் புரியலாம். உங்கள் துணையால் மிகவும் பெருமைப்படுவீர்கள். சில நாட்களாக உங்களுக்கு அதிக பணிச்சுமை இருந்திருந்தால், இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்கள் பணிச்சுமை குறையும். தொழிலதிபர்களுக்கு பெரிய பொருளாதார பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நாளின் இரண்டாம் பகுதியில் திடீரென பயணம் செய்ய நேரிடலாம். இன்று உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 2
அதிர்ஷ்ட நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

கன்னி
கன்னி ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்களா ஏதேனும் பிரச்சனை இருந்தால், பெரியவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும். இந்த பிரச்சனைக்கு நீங்கள் விரைவில் தீர்வு காண்பீர்கள். அலுவலகத்தில் கடினமாக உழைக்க அறிவுறுத்தப்படுவீர்கள். இன்று உங்கள் சிறிய வேலையைக் கூட கவனமாகச் செய்யுங்கள். ஒரு சிறிய தவறும் உங்களை சிக்கலில் ஆழ்த்தும். உங்களின் புதிய வேலை விரைவில் தொடங்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வயலட்
அதிர்ஷ்ட எண்: 38
அதிர்ஷ்ட நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

துலாம்
துலாம் ராசிக்காரர்களே, இன்று வேலையில் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். நீங்கள் எவ்வளவு அதிகமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த பலனை பெறுவீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கவும். நிதி ரீதியாக இன்று உங்களுக்கு நல்ல அறிகுறி தென்படும். இருப்பினும், உங்கள் செலவுகளை குறைக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும். நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட எண்: 29
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:35 மணி முதல் மதியம் 1:00 மணி வரை

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இன்று உங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். இன்று சிறு முடிவையும் மிகவும் கவனமாக எடுக்கவும். வணிகர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறலாம். நீங்கள் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். பொருளாதார நிலையில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி இழப்பும் ஏற்படலாம். அவசர அவசரமாக எந்த நிதி தொடர்பான வேலையையும் செய்ய வேண்டாம். இன்று உங்கள் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 15
அதிர்ஷ்ட நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

தனுசு
தனுசு ராசிக்காரர்களே, அலுவலகத்தில் எந்த தவறையும் செய்யாமல் பார்த்து கொள்ளுங்கள். தவறு செய்ய நேர்ந்தால் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் பெரிய லாபம் சம்பாதிக்க விரும்பினால், கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் கோபம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
அதிர்ஷ்ட நேரம்: மாலை 6:15 மணி முதல் இரவு 9:00 மணி வரை

மகரம்
மகர ராசிக்காரர்களே, அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் சில முக்கிய ஆலோசனைகளைப் பெறலாம். அவருடைய ஆலோசனையைப் பின்பற்றினால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இன்று வியாபாரிகளுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும். பழைய சட்ட விஷயங்களில் இருந்து விடுபடலாம். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். இன்று நீங்கள் வீட்டின் அலங்காரத்தை மாற்றுவதற்கு தேவையான சில பொருட்களை வாங்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்த, நீங்கள் போதுமான ஓய்வெடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நேரம்: காலை 6:55 மணி முதல் மாலை 4:00 மணி வரை

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, பண விஷயத்தில் இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு சிறந்த வாய்ப்பு உங்கள் கையை விட்டு நழுவக்கூடும். தொழிலதிபர்களுக்கு இன்று முதலீடு செய்ய சிறந்த வாய்ப்பு கிடைக்கும். தடைப்பட்ட வேலையும் முடிவடையும். அரசு ஊழியர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பலவீனமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிட முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் உடற்சோர்வு அதிகரிக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்
அதிர்ஷ்ட எண்: 16
அதிர்ஷ்ட நேரம்: காலை 4:05 மணி முதல் மாலை 3:00 மணி வரை

மீனம்
மீன ராசிக்காரர்களே, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் நிறைய பண வரவைப் பெறலாம். வேலையில், இன்று கலவையான நாளாக இருக்கும். நீங்கள் நேரத்தைக் கவனித்தில் கொண்டு செயல்படவும். வணிகர்கள் தங்கள் பங்குகளை அதிகரிப்பதற்கு முன் கவனமாக சிந்திக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நல்ல நாளாக இருக்கும். இரவில் தாமதமாக தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நேரம்: மதியம் 2:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை



Click it and Unblock the Notifications











