Latest Updates
-
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன?
உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு இந்த 5 பொருட்கள தெரியாம கூட பரிசா கொடுக்காதீங்க...ஏன் தெரியுமா?
கறுப்பு நிறம் அனைவரையும் கவர்ந்திழுக்கும். ஆனால் ஒருவருக்கு கருப்பு நிற ஆடைகளை பரிசளிப்பது உறவை மோசமாக்கும் என்று வாஸ்து கூறுகிறது
சிறப்பான நாட்களில் அல்லது பண்டிகையின்போது நம் அன்புக்குரியவர்களை பரிசுகளால் ஆச்சரியப்படுத்த விரும்புகிறோம். அவர்கள் மிகவும் விரும்பும் பொருளை அவர்களுக்குப் பரிசளிப்பதன் மூலம் அந்த பரிசு அவர்களுக்கு மிகவும் சிறப்பானதாக அமைகிறது. சில சமயங்களில், அவர்கள் ஏற்கனவே வாங்கவிருந்த பொருட்களை நாம் தெரிந்துகொண்டு பரிசளிக்கிறோம். இந்த பரிசுகள் மற்றும் இதுபோன்ற சிறப்பு தருணங்கள் இரண்டு நபர்களுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்த உதவுகின்றன. ஆனால் வாஸ்து படி பரிசுகளை தேர்ந்தெடுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

நாம் ஒருவருக்குக் கொடுக்கக் கூடாத சில பொருட்கள் உள்ளன. அவற்றில் சில மிகவும் பொதுவானவை மற்றும் அடிக்கடி பரிசளிக்கப்படுகின்றன. நீங்கள் ஒருவருக்கு ஒருபோதும் பரிசளிக்கக் கூடாத பொருட்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

வாட்ச்
வாட்ச் என்பது மிகவும் பொதுவான பரிசுப் பொருளாகும். பெரும்பலான மக்கள் இந்த பொருளை பிடித்தவர்களுக்கு வழங்குகிறார்கள். எல்லோரும் விரும்பும் ஒரு பொருளாக இருப்பதால், அதிகமாக பரிசளிக்கப்படுகிறது. ஆனால் அதை ஒருபோதும் நீங்கள் பரிசாக வழங்க கூடாதாம். ஆம், நாம் ஒரு கடிகாரத்தை பரிசாக கொடுக்கவே கூடாது. அத்தகைய கருத்துக்கு பின்னால் வாஸ்து வைத்திருக்கும் இரண்டு நம்பிக்கைகள் உள்ளன. ஒன்று, அது அந்த நபரின் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துகிறது. இரண்டாவதாக, கடிகாரத்துடன், நல்ல அதிர்ஷ்டமும் நேரமும் கொடுக்கப்படுகின்றன; எனவே, பரிசு கொடுப்பவருக்கு அது நல்லதல்ல என்று கூறுகிறது.

கருப்பு ஆடைகள்
பெரும்பாலும் வழங்கப்படும் பரிசுப் பொருட்களின் பட்டியலில் ஆடைகள் மீண்டும் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றன. நேர்த்தியான ஆடைகளை பரிசளிப்பதன் மூலம் அந்த நபரின் இதயத்தில் நாம் இடம் பெறுகிறோம். கருப்பு நிறம் சந்தேகத்திற்கு இடமின்றி ஆடைக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை சேர்க்கிறது. கறுப்பு நிறம் அனைவரையும் கவர்ந்திழுக்கும். ஆனால் ஒருவருக்கு கருப்பு நிற ஆடைகளை பரிசளிப்பது உறவை மோசமாக்கும் என்று வாஸ்து கூறுகிறது. கருப்பு நிறம் பெரும்பாலும் எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் மரணத்தின் குறியீடாக நம்பப்படுகிறது. அதனால், கருப்பு ஆடைகளை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு வழங்க கூடாது.

காலணிகள்
நீங்கள் விரும்பியவருக்கு பரிசு கொடுக்கும் பொருட்கள் பட்டியலில் காலணிகளும் உள்ளன. ஒரு ஜோடி காலணிகளைப் பார்த்ததும், உங்கள் காதலிக்கு அல்லது காதலனுக்கு பரிசளிக்க நீங்கள் விரும்பலாம். சரி, யோசனை நன்றாக இருந்தாலும், உண்மையில் அது நல்லதல்ல என்கிறது வாஸ்து. வாஸ்துபடி , ஒரு நம்பிக்கை உள்ளது. அதன்படி ஒருவருக்கு காலணிகளை பரிசளிப்பது உறவை முறித்துவிடும். காலணிகள் பிரிக்கப்பட்ட பாதைகளை அடையாளப்படுத்துகின்றன. எனவே, இரு நபர்களின் வாழ்க்கைப் பாதையில் பிரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

கைக்குட்டைகள்
ஒருவருக்கு உடல்நல பாதிப்பு, வலி அல்லது துக்கம் ஏற்பட்டால் மட்டுமே கைக்குட்டை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், நீங்கள் பார்த்த கைக்குட்டைகளின் தொகுப்பு அழகாக இருக்கலாம். அதை உங்களுக்கு பிடித்தவருக்கு பரிசளிக்க நீங்கள் விரும்பலாம். ஆனால், நீங்கள் அப்படி ஒருபோதும் முடிவு செய்யக்கூடாது. ஏனெனில், இது உங்களுக்கு பிடித்தவரின் வாழ்க்கையில் ஏதேனும் கெட்டதை ஏற்படுத்தலாம் என வாஸ்து கூறுகிறது.

சில காட்சிப் பொருட்கள்
ஷோபீஸ்கள் பரிசுகளாக வழங்கப்படுகின்றன. அந்த நபர் அதை எப்போதும் தங்களுடன் வைத்திருக்க முடியும், எனவே நம்மை நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் நாம் அதை பரிசாக கொடுப்போம். ஷோபீஸ்களைப் பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், அவை பழசாகிவிடாது. நீங்கள் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் வரை அவற்றைப் பாதுகாக்க முடியும். இருப்பினும், வன்முறை விலங்கின் உருவம் அல்லது சிலை, நீரில் மூழ்கும் படகு அல்லது கப்பல் அல்லது கத்திகள் போன்ற கூர்மையான பொருட்கள் போன்ற சில காட்சிப் பொருட்களை பரிசாக வழங்கப்படக்கூடாது.



Click it and Unblock the Notifications