Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலர் பொடிகள் எப்படி வந்தது மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன தெரியுமா?
நம்மில் பெரும்பாலோருக்கு ஹோலி என்பது நிறங்கள், நல்ல உணவு, வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று தெரியும், ஆனால் இந்த பண்டிகையின் கொண்டாடத்திற்கு பின்னால் பல்வேறு சுவாரஸ்ய காரணங்கள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும
வட இந்தியாவின் மிக முக்கியமான கோலகலமான பண்டிகை என்றால் அது ஹோலி பண்டிகைதான். கண்கவர் வண்ணங்கள், குஜியா, ஆடம்பரமான விருந்து மற்றும் சகோதரத்துவம் போன்ற வடிவங்களில் மகிழ்ச்சியின் அலை காணக்கூடிய ஆண்டின் அற்புதமான நேரம் இது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்றான ஹோலி, இந்த ஆண்டு மார்ச் 7-8 தேதிகளில் கொண்டாடப்பட இருக்கிறது.

நம்மில் பெரும்பாலோருக்கு ஹோலி என்பது நிறங்கள், நல்ல உணவு, வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியான தருணம் என்று தெரியும், ஆனால் இந்த பண்டிகையின் கொண்டாடத்திற்கு பின்னால் பல்வேறு சுவாரஸ்ய காரணங்கள் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஹோலி பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பௌர்ணமி விழா
இந்து நாட்காட்டியின்படி ஹோலி பங்குனி மாதத்தில் வருகிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் சந்திர சுழற்சியின்படி முழு நிலவில் ஹோலி கொண்டாடப்படுகிறது.

வசந்த கால விழா
தொடக்கம் முதலே வசந்த காலத்தின் தொடக்கத்தில் ஹோலி கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக, இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் பலாஷ் மலர்களைக் கொண்டு கொண்டாடப்பட்டது.

புராணத் தொடர்பு
இந்து புராணங்களின்படி, ஹோலியின் கதை ஹோலிகா தகனம் மற்றும் அசுரன் இரண்யகசிபுவை விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தால் கொல்வதைச் சுற்றி வருகிறது, இது தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. அதனால்தான் ஹோலி தீபாவளி போல கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

ஹோலிகா தகனம்
ஹோலிகா தகனம் படிப்படியாக இந்த திருவிழாவின் முக்கிய அங்கமாக மாறியது. ஹோலிகா தகனம் தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. மக்கள் தங்கள் அறுவடைக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் ஆசீர்வாதத்தைத் தேடுவதற்கான காரணம் இதுதான்.

கலர் பொடிகள் எப்படி இருந்தது?
ஹோலிக்கு பயன்படுத்தப்படும் வண்ணங்கள் இயற்கையின் வண்ணங்கள், மசாலாப் பொருட்கள், பூக்கள், காய்கறிகள் ஆகியவற்றிலிருந்து தழுவி, இறுதியில் அவை கலர் பொடிகளாக திருவிழாவின் முக்கிய அங்கமாக மாறியது. இப்போது ஹோலி பண்டிகையை கலர் பொடிகள் இல்லாமல் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

தண்டாய் மற்றும் குஜியா
மகிழ்ச்சி என்று வரும்போது அதில் உணவுகள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்க்கும், அதற்கும் ஹோலியும் விதிவிலக்கல்ல. இந்த திருவிழாவில் உணவு மற்றும் பானங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பருவகாலம் மாறும் போது ஹோலி பண்டிகை வருகிறது, இதனால் தண்டாய் மற்றும் குஜியாவில் பயன்படுத்தப்படும் பொருட்கள் பொதுவாக மசாலா மற்றும் மூலிகைகள் கொண்டிருக்கின்றன, அவை பருவகால மாற்றங்களில் உங்களை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.



Click it and Unblock the Notifications