Latest Updates
-
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி!
நெற்றில இந்த மாதிரி அடையாளம் இருந்தா, எதிர்காலத்துல பணக்காரர் ஆவாங்களாம்... உங்களுக்கு இருக்கா?
ஒருவரின் நெற்றி, புருவங்கள், தாடை, கண்கள் போன்றவற்றின் அமைப்பைக் கொண்டு, அவரின் இயல்பு மற்றும் குணாதிசயங்களை எளிதில் அறியலாம். இப்படி கனித்துக் கூறுவதைத் தான் ஃபேஸ் ரீடிங்/முக வாசிப்பு என்று அழைப்பர்.
ஒருவரது முகம் அவரின் எண்ணங்கள் மற்றும் குணாதிசயங்களை வெளிக்காட்டும் கண்ணாடி என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதிலும் ஒருவரின் நெற்றி, புருவங்கள், தாடை, கண்கள் போன்றவற்றின் அமைப்பைக் கொண்டு, அவரின் இயல்பு மற்றும் குணாதிசயங்களை எளிதில் அறியலாம். இப்படி கனித்துக் கூறுவதைத் தான் ஃபேஸ் ரீடிங்/முக வாசிப்பு என்று அழைப்பர்.

அதில் இப்போது நெற்றியின் அமைப்பைப் பற்றி தான் காணப் போகிறோம். அதுவும் நெற்றியின் அமைப்பு மற்றும் அதில் உள்ள அடையாளம் ஒருவரைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக நெற்றியில் உள்ள சில அடையாளங்கள் கோடீஸ்வரர் ஆக வாய்ப்புள்ளதைக் குறிக்கிறது. உங்கள் நெற்றியில் அந்த அடையாளம் உள்ளதா என்பதை கண்ணாடி பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்வஸ்திக் சின்னம்
ஒருவரது நெற்றியில் ஸ்வஸ்திக் சின்னம் இருந்தால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஜோதிடத்தின் இப்படிப்பட்ட அடையாளத்தைக் கொண்ட பெரும்பாலானோர் எதிர்காலத்தில் பணக்காரர்களாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும், இந்த மாதிரியான அடையாளம் அனைவருக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது.

அகலமான நெற்றி
ஒருவரது நெற்றி மிகவும் அகலமாக இருந்தால், அவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாக கருதப்படுகிறார்கள். மேலும் அவர்கள் சமுதாயத்தில் மதிப்பும், கௌரவமும், செல்வமும் பெறுவார்கள். அதோடு சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். எந்த முடிவை எடுத்தாலும், அவர்கள் நிச்சயம் அதில் வெற்றி பெறுவார்கள்.

சிறிய நெற்றி
ஒருவரது நெற்றி சிறியதாக இருந்தால், அத்தகையவர்களின் அறிவுசார் திறன் பலவீனமாக இருப்பதாக கருதப்படுகிறது. இவர்கள் எந்த வேலையிலும் வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் இத்தகையவர்கள் எப்போதும் பண நெருக்கடியால் போராடுவார்கள். அதே வேளையில், நெற்றி சாதாரண அளவில் இருந்தால், அத்தகையவர்கள் வாழ்க்கையில் மிகவும் நல்ல சமநிலையுடன் வாழ்வதாகக் கருதப்படுகிறார்கள்.

வில், பிறை அடையாளம்
ஒருவரது நெற்றியில் வில், பிறை அடையாளம் இருப்பது, மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இத்தகையவர்கள் வாழ்வில் அதிக பணம் சம்பாதிப்பார்கள். நெற்றியில் பிறை அடையாளத்தைக் கொண்டவர்கள், வியாபாரத்தில் முயற்சி செய்வது நல்லது. ஏனெனில் இந்த அடையாளம் கொண்டவர்கள் பெரிய தொழிலதிபர்களாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் வலுவாக உள்ளன.

நெற்றியில் நரம்புகள் தெரிவது
ஒருவரது நெற்றியில் நரம்புகள் தெரிந்தால், அத்தகையவர்கள் இயற்கையாகவே கோபக்காரர்களாகவும், தந்திரமானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். மேலும் இவர்கள் அதிகம் சண்டை போடுவார்கள். இத்தகையவர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பதே சிறந்தது.

சங்கு அடையாளம்
சிலரது நெற்றியில் சங்கு அடையாளம் இருக்கும். இத்தகையவர்கள் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதோடு இவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும் கருதப்படுகிறார்கள். இது தவிர நெற்றியில் சிப்பி அடையாளம் உள்ளவர்கள், மிகவும் சீரான வாழ்க்கையை வாழ்பவர்களாகவும், சிறந்த ஆளுமையை கொண்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
