For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரணம் பற்றிய கனவுகளால் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

மரணம் பற்றிய கனவுகள் ஆனது எப்பொழுதும் துரதிர்ஷ்டவசமானதாகும், ஆனால் மரணம் பற்றிய கனவுகள் எப்பொழுதும் உங்களுக்கு நெருக்கமானவர்களின் மரணத்தைப் பற்றி மட்டும் குறிப்பதில்லை.

|

பொதுவாக ஒவ்வொரு கனவுகளும் நமக்கு ஒவ்வொரு விதமான அனுபவத்தை வழங்குவதாக இருக்கும். சில கனவுகள் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும், ஆனால் சில கனவுகள் நமக்கு மனக்கசப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். கனவுகள் நம்முடைய மூளையில் தோன்றுவதாக இருந்தாலும் என்ன கனவு வரவேண்டும் என்பதை நாம் முடிவு செய்யமுடியாது. கனவுகள் எப்பொழுதும் நாம் கட்டுப்படுத்த முடியாத ஒரு விஷயமாகவே இருக்கிறது.

The Meaning Of Death In Dreams

மரணம் பற்றிய கனவுகள் ஆனது எப்பொழுதும் துரதிர்ஷ்டவசமானதாகும், ஆனால் மரணம் பற்றிய கனவுகள் எப்பொழுதும் உங்களுக்கு நெருக்கமானவர்களின் மரணத்தைப் பற்றி மட்டும் குறிப்பதில்லை. மரணம் பற்றிய கனவுகள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடையவை ஆகும். இந்த பதிவில் மரணம் பற்றிய கனவுகள் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 மரணக் கனவுகள்

மரணக் கனவுகள்

மரணம் பற்றிய கனவுகள் ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்கமாக இருக்கலாம், நம் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டத்தின் முடிவாக இருக்கலாம், ஒரு கெட்ட பழக்கத்தை விடபோவதன் அறிகுறியாக இருக்கலாம். உங்களின் பிரச்சினைகள் முடியப்போவதன் அறிகுறியாக கூட இருக்கலாம்.

 கனவில் இறப்பவர்

கனவில் இறப்பவர்

உங்கள் மரண கனவுகள் என்பது கனவில் யார் இறக்கிறார்கள், அவர்களின் மரணம் எப்படி நிகழ்கிறது என்பதைப் பொறுத்து அதன் பலன்கள் மாறுபடும். நாம் கனவு காணும்போதெல்லாம், நம் கனவில் உள்ளவர்கள் நம் ஆளுமை அல்லது வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்க முனைகிறார்கள். எனவே, இந்த நபர் உங்களுக்கு எதைக் குறிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். உங்கள் கனவில் ஒரு வயதான நபர் இறந்துவிடுவார் என்று வைத்துக்கொள்வோம், இது உங்களிடம் இருக்கும் ஒரு பழைய பழக்கம் உங்களை அழிக்க முனைகிறது என்று அர்த்தம்.

 குழந்தைகளின் இறப்பு

குழந்தைகளின் இறப்பு

குழந்தையின் மரணம் இது பெற்றோருக்கு ஏற்படக்கூடிய ஒரு பொதுவான கனவாகும். குழந்தைகள் சிக்கலில் இருக்கும்போதோ அல்லது வீட்டை விட்டு வெளியே இருக்கும்போதோ இந்த கனவுகள் அவர்களுக்கு வரும். இந்த கனவு பெற்றோர்கள் உண்மையில் தங்கள் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை நினைத்து துக்கப்படுகிறார்கள் என்பதையும், அது இப்போது முடிந்துவிட்டது, ஒருபோதும் திரும்பி வராது என்பதையும் குறிக்கிறது.

MOST READ:உங்களின் இந்த சிறிய வாஸ்து தவறுகள் உங்கள் குடும்பத்தின் ஒற்றுமையை கெடுக்குமாம் தெரியுமா?

பெற்றோர்களின் மரணம்

பெற்றோர்களின் மரணம்

உங்கள் பெற்றோர் உயிருடன் இருந்தால், அவர்கள் இறந்துவிட்டதாக நீங்கள் கனவு கண்டால், எதிர்காலத்தில் அவர்களை இழப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் வயதானவர்களாக இருந்தால் இது குறிப்பாக உண்மை. ஒருவேளை உங்கள் பெற்றோர்கள் ஏற்கனவே இறந்திருந்தால் இந்த கனவு நீங்கள் அவர்களை வழியனுப்பி வைப்பதன் அர்த்தம் ஆகும்.

கணவர் அல்லது மனைவியின் மரணம்

கணவர் அல்லது மனைவியின் மரணம்

நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவர் கனவில் இறந்து விட்டால் அவர்களின் துணையிடம் இருக்கும் குறையுடன் அவர்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் மனதளவில் தயாராகிவிட்டீர்கள் என்பதன் அர்த்தமாகும்.

குடும்ப உறுப்பினரின் மரணம்

குடும்ப உறுப்பினரின் மரணம்

உங்களின் குடும்ப உறுப்பினர் இறப்பது போல நீங்கள் கனவு கண்டால் அவர்கள் விரைவில் இறக்கப்போகிறார்கள் என்று அர்த்தமல்ல. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவ்வாறு நடப்பதில்லை. குடும்ப உறுப்பினர் இறப்பது உங்களின் ஒரு பகுதியை பிரதிபலிக்கக்கூடும். எனவே அவ்வாறு உங்கள் குடும்ப உறுப்பினர் மரணிப்பது போல கனவு வருவது நீங்கள் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்போவதன் அறிகுறி ஆகும். இந்த மாற்றங்கள் உங்கள் வேலை அல்லது உறவுகள் போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

அம்மாவின் மரணம்

அம்மாவின் மரணம்

உங்கள் அம்மா இறப்பது போல கனவு கண்டால் அது அவர்களுடனான உறவில் ஏற்பட்ட மாற்றங்களை அல்லது அவர்கள் மீதான உங்கள் கண்ணோட்டம் மாறிவிட்டதற்கான அர்த்தம் ஆகும். இது அவர்கள் மீது உங்களுக்கு வெறுப்பு ஏற்பட போவதன் அறிகுறி ஆகும்.

MOST READ:ஆண்கள் அவங்க ராசிப்படி தன்னோட காதலிக்கிட்ட உண்மையா எதிர்பார்க்கறது என்னனு தெரியுமா?

நண்பரின் மரணம்

நண்பரின் மரணம்

உங்கள் கனவுகளில் உங்கள் நண்பர்கள் இறப்பதை நீங்கள் காணும்போது, நீங்கள் அவர்களைச் சந்திக்க விரும்புகிறீர்கள் என்பதையும், உங்கள் உறவு இறந்து கொண்டிருப்பதாகத் தோன்றுவதால் நீங்கள் வருத்தப்படுவதையும் இது குறிக்கிறது. உங்கள் நண்பர் மீண்டும் உங்களிடம் திரும்பி வர வேண்டும் என்றும் இன்னும் உங்கள் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் இது அறிவுறுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: mother அம்மா friends
English summary

The Meaning Of Death In Dreams

Death dreams can be related to many different aspects of our lives. Read to know the meaning of death in dreams.
Desktop Bottom Promotion