For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துலாம் சென்ற சூரியனால் எந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனையை சந்திப்பார்கள் தெரியுமா?

சூரிய பகவான் அக்டோபர் 17, 2020 அன்று காலையில் துலாம் ராசிக்கு சென்று, அங்கு 16 நவம்பர் 2020 வரை இருப்பார்.சூரியன் மிகவும் பலவீனமான நிலையில் நகர்வதால், வாழ்க்கையில் மாற்றங்களும் ஏற்படும்.

|

ஜோதிடத்தின் படி, அனைத்து வீடுகளிலும் சூரியன் மிகவும் வலிமையானது மற்றும் சக்தி வாய்ந்தது. சூரிய குடும்பத்தில் அதன் மகத்தான மற்றும் சிறப்பான நிலையைத் தவிர, ஒருவரது தலைவிதியைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. உண்மையில், சூரியனின் நிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது ஒருவரது வாழ்க்கையில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது, எதிர்காலத்தில் நம் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய மாற்றங்களை இது சித்தரிக்கிறது.

The Impact Of Sun Transit In Libra On Your Health, As Per Your Zodiac Sign

சூரிய பகவான் அக்டோபர் 17, 2020 அன்று காலையில் துலாம் ராசிக்கு சென்று, அங்கு 16 நவம்பர் 2020 வரை இருப்பார். இந்த காலக்கட்டத்தில், சூரியன் மிகவும் பலவீனமான நிலையில் நகர்வதால், வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றங்களில் இருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும் போது, ஒருவரது உடல் ஆரோக்கியம் மிகவும் கவனத்திற்குரிய ஒன்றாக உள்ளது. எனவே சூரியனின் இந்த பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்காரரின் ஆரோக்கியத்திலும் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது என்பதை இப்போது காண்போம்.

MOST READ: துலாம் செல்லும் சூரியனால் எந்த ராசிக்காரருக்கு படுமோசமாக இருக்கப் போகுதுன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். இருப்பினும், உங்கள் அன்புக்குரியவர்கள் ஆரோக்கியப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அவர்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். அதோடு இது உங்களுக்கு மிகுந்த கவலை மற்றும் மன அழுத்தத்தையும் உண்டாக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியனின் இந்த பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் இதுநாள் வரை உங்களுக்கு மிகுந்த தொந்தரவை அளித்துக் கொண்டிருந்த நாள்பட்ட நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பற்றிக் கூற வேண்டுமானால், இவர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். முடிந்த வரை யோகா, தியானம் போன்றவற்றை செய்ய முயற்சி செய்யுங்கள்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்கள், இந்த பெயர்ச்சியால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விபத்துக்கள் அல்லது ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். மேலும் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்றவற்றால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கக்கூடும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, உடல் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நல்ல ஓய்வை எடுத்து, சந்தோஷமாக இருங்கள். இருப்பினும், சுகாதாரமாக இருங்கள் மற்றும் வெளியே சென்றால் தேவையற்ற பொருட்களைத் தொடாதீர்கள்.

கன்னி

கன்னி

இந்த சூரிய பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்கள் அடிவயிறு மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். நிலைமை மோசமாவதற்கு முன் மருத்துவரை அணுகி தீர்வு காண முயல்வது நல்லது.

துலாம்

துலாம்

என்ன தான் சூரியன் துலாம் ராசிக்கு வந்திருந்தாலும், பலவீனமான நிலையில் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் சில ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் மற்றும் சருமம் தொடர்பான பிரச்சனைகளை அனுபவிக்கக்கூடும். ஆனால் எல்லா நேரங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிகம்

துலாம் ராசிக்கு சென்றிருக்கும் சூரியனால் விருச்சிக ராசிக்காரர்கள் தூக்கமின்மை பிரச்சனைகளை அனுபவிப்பார்கள். அதோடு இந்த தூக்கமின்மையால், இவர்கள் தலைவலி மற்றும் பலவீனமான கண் பார்வை பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும்.

தனுசு

தனுசு

துலாம் ராசியில் உள்ள சூரியனால் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் நீண்ட காலமாக தவித்து வந்த நோய்களும் முடிவுக்கு வரும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டிய நேரம் இது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பற்றி கூற வேண்டுமானால், இவர்கள் தங்களின் வயிற்று பகுதியின் மீது கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த ராசிக்காரர்கள் திடீரென்று வயிற்றுப் பகுதியில் பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள், நோயெதிர்ப்பு சக்தியின் மீது கவனத்தை செலுத்த வேண்டும். அதற்கு அதிகளவு நீரைக் குடிப்பது மட்டுமின்றி, வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதோடு உடற்பயிற்சி மற்றும் யோகா போன்ற நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும் செயல்களிலும் ஈடுபட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Impact Of Sun Transit In Libra On Your Health, As Per Your Zodiac Sign

According to astrology, the sun is the mightiest and the most powerful of all the houses. Besides its grandiose and its great position in the solar system, it also plays a significant role in determining the fate of all the astrological signs.
Desktop Bottom Promotion