For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வரலாற்றில் இவருக்கு இணையான வீரம் கொண்ட மன்னர் யாருமே இல்லையாம்... அவர் யார் தெரியுமா?

|

இந்தியாவின் வரலாற்றில் பல மன்னர்களின் வீரம் கலந்திருக்கிறது. நம் நாட்டின் பெருமைகளுக்கு நம்முடைய பண்டைய மன்னர்களின் வீரமும், கொடையும் முக்கியமான காரணமாகும். இந்தியாவை பல வம்சத்தை சேர்ந்த மன்னர்கள் ஆண்டனர். ஒவ்வொரு வம்சத்தை சேர்ந்த மன்னரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவத்துடன் விளங்கினர். இந்திய வரலாற்றின் மிகவும் முக்கியமான மன்னர்களில் ஒருவர் பிருத்விராஜ் சவுகான் ஆவார்.

The history of Prithviraj Chauhan

டெல்லி சிம்மாசனத்தை அலங்கரித்த சவுகான் வம்சத்தின் கடைசி ஆட்சியாளராக இருந்த இந்திய வரலாற்றின் வீரம் மிக்க வீரர்களில் ஒருவர் பிருத்விராஜ் சவுகான். இந்திய வரலாற்றில் இவரது காலக்கட்டத்தில்தான் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வெளிநாட்டு படையெடுப்புகளுக்குள் நுழைந்தது. அவரது வீரம் நிறைந்த போர் எதிரிகளுக்கு சவால் விடுத்து, தேசத்தையும் அதன் கௌரவத்தையும் நிலைநிறுத்தியது. இந்த பதிவில் பிருத்விராஜ் சவுகான் பற்றிய சில அற்புத தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிறப்பும் ஆரம்பகால வாழ்க்கையும்

பிறப்பும் ஆரம்பகால வாழ்க்கையும்

பிருத்விராஜ் சவுகான் 1168 இல் அஜ்மீர் இளவரசராகப் பிறந்தார். இவரது தந்தை சோமேஷ்வர் சவுகான் ஆவார். மிக இளம் வயதிலேயே பிருத்விராஜ் சவுகான் தனது வீரத்தையும், புத்திக்கூர்மையையும் போர்களில் நிரூபித்தார். பல கடினமான போர்க்கலைகளை சிறிய வயதிலேயே கற்றுத்தேர்ந்தார். ஒலியின் உதவியுடன் குறி வைத்து வைத்து இலக்கைத் துல்லியமாக தாக்கும் மிக அரிதான கலையை அவர் கற்றுத் தேர்ந்தார். இவரை கலியுக அர்ஜுனன் என்றே கூறலாம்.

தைரியமான ஆட்சியாளர்

தைரியமான ஆட்சியாளர்

1179 ஆம் ஆண்டு, அவரது தந்தை ஒரு போரில் இறந்தார். பிருத்விராஜ் சவுகானின் தாத்தா அங்கம் அந்த இளம் வீரனின் திறன்களை நன்கு அறிந்திருந்தார், எனவே அவரை டெல்லி ராஜ்யத்தின் சிம்மாசனத்தின் வாரிசாக அறிவித்தார். இவ்வாறு, அவர் பதின்மூன்று வயதிலேயே சிம்மாசனத்தில் ஏறினார். பிருத்விராஜ் சவுகான் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தாமல் தனியாக ஒரு சிங்கத்தை கொன்றதாக கூறப்படுகிறது.

நாயகனின் எழுச்சி

நாயகனின் எழுச்சி

டெல்லி சிம்மாசனத்தில் ஏறிய பிறகு, பிருத்விராஜ் சவுகான் அங்கே கிலா ராய் பித்தோராவைக் கட்டினார். பிருத்விராஜ் சவுகானின் முழு வாழ்க்கையும் வீரம், துணிச்சல் மற்றும் தைரியம் நிறைந்ததாக இருந்தது. அவரது இராணுவ நடவடிக்கைகளில் மிகவும் முக்கியமான ஒன்று குஜராத்தின் ஆட்சியாளரான வலிமைமிக்க மன்னர் பீம்தேவ் உடன் இருந்தது. அவரை போரில் வீழ்த்திய போது பிருத்விராஜ் சவுகானின் வயது வெறும் 13 தான்.

MOST READ: பிறந்த குழந்தையை 50 அடி உயரத்தில் இருந்து தூக்கிப்போடும் வினோதசடங்கு... நம்ம இந்தியாவுலதாங்க...!

சுயம்வரம்

சுயம்வரம்

பிருத்விராஜ் சவுகான் தனது எதிரி இராஜ்ஜியத்தை மன்னரான ஜெய்சந்தின் மகளான சம்யுக்தாவை காதலித்தார். ஜெய்சந்த் தனது மகளுக்கு மணமகனை தேர்ந்தெடுக்கும் சுயம்வர விழாவிற்கு ஏற்பாடு செய்தார். சுயம்வர மண்டபத்திற்குள் காட்டுத்தீ போல நுழைந்த பிருத்விராஜ் சவுகான் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த இளவரசர்களுக்கு முன்னிலையில் இளவரசியை கடத்திச் சென்றார்.

பயமறியா கொள்கைகளின் நாயகன்

பயமறியா கொள்கைகளின் நாயகன்

அவரது ஆட்சியின் போது, மஹ்மூத் கோரி 1191 இல் இந்தியா மீது படையெடுத்தார். தாரைனின் முதல் போரில், பிருத்விராஜ் மஹ்மூத் கோரியின் இராணுவத்தை தோற்கடித்தார். இராணுவம் பின்வாங்கியது, கோரியின் முழு இராணுவத்தையும் அழிக்க இது சரியான நேரம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பிருத்விராஜ் சவுகான் இது போரை நிர்வகிக்கும் முறையின் ஒரு பகுதி அல்ல என்றும் உண்மையான வீரனுக்கு இது பொருத்தமான செயல் அல்ல என்றும் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, இரண்டாவது முறையாக மஹ்மூத் கோரி அவரைத் தாக்கி சிறையில் அடைத்தார்.

கட்டுப்பாடில்லாத வீரம்

கட்டுப்பாடில்லாத வீரம்

சிறையில், பிருத்விராஜ் சவுகான் அவமானத்திற்கும் சித்திரவதைக்கும் ஆளானார். அவரின் கண்கள் இரும்பு கம்பிகளால் நோண்டப்பட்டது. தனது வில்வித்தை திறன்களை நிரூபிக்க தனக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மஹ்மூத் கோரி அவரது வாழ்க்கையின் வேடிக்கையை விரும்பினார், எனவே இந்த கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டார். கண் தெரியாத நிலையிலும் பிருத்விராஜ் சவுகானின் துணிச்சலான வீரம் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக இருந்தது, இதனால் கோரி அவரை சத்தமாக பாராட்டினார். கோரியின் குரலைக் கேட்டதும் அந்த திசையை நோக்கி அம்பை எய்தார், அவரின் குறி தவறாமல் கோரியின் உயிரை பறித்தது. அவர் தேர்ச்சி பெற்ற அரிய கலை சமஸ்கிருதத்தில் ‘சப்தேபி பான்' என்று அழைக்கப்படுகிறது.

MOST READ: இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் காதலியாக கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...அப்படி என்ன ஸ்பெஷல் இவங்ககிட்ட

வீர மரணம்

வீர மரணம்

மஹ்மூத் கோரி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, எதிரிகளின் கைகளில் மரணத்தைத் தடுக்க, பிருத்விராஜும் அவரது நண்பர் சந்த் பர்தாயும் மஹ்மூத் கோரியின் நீதிமன்றத்தில் ஒருவருக்கொருவர் குத்திக் கொண்டு 1192 இல் இறந்தனர். அவரது மரணத்திற்கு முன், அவரது நண்பர் சந்த் பர்தாயும் ஒரு காவியத்தை இயற்றியிருந்தார். பிருத்விராஜ் ராசோ என்ற தலைப்பில் பிருத்விராஜ் சவுகானின் நினைவாக ஒரு கவிதையை எழுதியிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The History Of Prithviraj Chauhan

Here is the unknown history of the Indian king Prithviraj Chauhan
Story first published: Tuesday, December 17, 2019, 12:01 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more