For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவி NASA செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்... இதோ அவரின் வெற்றிக்கதை!

நாசாவிற்கு செல்வது என்பது உலகம் முழுவதும் இருக்கும் பல மாணவர்களின் கனவாகும். ஏனெனில் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே நாசாவிற்குள் அனுமதி கிடைக்கும்.

|

தமிழர்களின் மூளைக்கும், திறமைக்கும் சர்வதேச நாடுகளில் எப்பொழுதும் தனிமரியாதை உள்ளது. அதனால்தான் உலகின் பல பெரிய கம்பெனிகளில் தமிழர்களுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்படுகிறது. இதற்கு மிகசிறந்த உதாரணம் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள். இதுமட்டுமின்றி விண்வெளி துறையில் நாம் படைத்துள்ள சாதனைகள் அவ்வளவு எளிதானதல்ல.

amil nadu government school girl wins trip to NASA

உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் பணிபுரிபவர்களில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்களே. நாசாவிற்கு செல்வது என்பது உலகம் முழுவதும் இருக்கும் பல மாணவர்களின் கனவாகும். ஏனெனில் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே நாசாவிற்குள் அனுமதி கிடைக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர் கே.ஜெயலட்சுமி ஆன்லைன் போட்டியில் வெற்றி பெற்று நாசாவை பார்க்கப் போகிறார். 16 வயதில் இந்த பெண் சந்தித்துள்ளது அவ்வளவு சிறிய காரியமல்ல. இவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்ப சூழல்

குடும்ப சூழல்

ஜெயலட்சுமி ஒரு சாதாரண பெண் அல்ல, ஏனெனில் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட தாயையும் அவளுடைய தம்பியையும் கவனிக்க கடினமாக உழைக்கிறார். அவரது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆள் இவர்தான். முந்திரி பருப்புகளை விற்பனை செய்வதுடன் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ட்யூசன் எடுத்து தனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார். தனது படிப்புக்கான செலவையும் இதில் இருந்து வரும் சொற்ப வருமானத்தில்தான் அவர் கவனித்துக் கொள்கிறார்.

போட்டித்தேர்வு

போட்டித்தேர்வு

கோ 4 குரு ஏற்பாடு செய்த போட்டியைப் பற்றி பேசும்போது, அந்தப் பெண் தற்செயலாக போட்டியைப் பற்றி அறிந்து கொண்டதாகவும், இப்போது அதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் இந்த சாதனை சிறுமி கூறுகிறார். மேலும் இதைப்பற்றி அவர் கூறுகையில் " நான் ஒரு கேரம் போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டபோது, பலகை அருகே கிடந்த ஒரு செய்தித்தாளைக் கண்டேன். அதில் கடந்த ஆண்டு நாசாவுக்குச் செல்லும் வாய்ப்பை வென்ற தன்யா தஸ்னெம் பற்றிய கதை இருந்தது. உடனடியாக நான் அதில் பங்கு பெற வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக பதிவு செய்தேன் " என்று கூறியுள்ளார். இது TNIE ஆல் மேற்கோள் காட்டப்பட்டது.

MOST READ: இந்திய வரலாற்றில் இவருக்கு இணையான வீரம் கொண்ட மன்னர் யாருமே இல்லையாம்... அவர் யார் தெரியுமா?

ஜெயலட்சுமியின் புத்திசாலித்தனம்

ஜெயலட்சுமியின் புத்திசாலித்தனம்

ஜெயலட்சுமி புத்திசாலித்தனமும், சுட்டித்தனமும் நிறைந்த பெண் ஆவார். எனவே, அவர் நேஷனல் மீன்ஸ் கம்-மெரிட் ஸ்காலர்ஷிப் போன்ற பல்வேறு உதவித்தொகைகளை வென்றுள்ளார். அவரது சாதனை குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். " நான் அப்துல் கலாம் ஐயாவைப் போல ராக்கெட் தயாரிக்க விரும்புகிறேன். இந்த பயணத்தை அரசுப் பள்ளியில் படிக்கும் எவரும் இதுவரை வென்றதில்லை. நான் அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். என்னால் முடியும் என்றால் அவர்களாலும் முடியும் " என்று ஜெயலட்சுமி கூறியுள்ளார்.

பயணச்செலவு

பயணச்செலவு

ஜெயலட்சுமியின் பயணத்திற்கு கிட்டதட்ட இரண்டு லட்ச ருபாய் செலவாகும். அவரின் தந்தை தனியாக வசித்து வருகிறார், எப்போதாவது இவருக்கு பணம் அனுப்புவார். இவரது நண்பர்களும், ஆசிரியர்களும் பாஸ்போர்ட் பெற இவருக்கு உதவியுள்ளனர். பாஸ்போர்ட் அதிகாரி ஜெயலட்சுமிக்கு 500 கொடுத்தார், மேலும் ஜெயலட்சுமி தனக்கு உதவுமாறு கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஜெயலட்சுமியின் பயணம் மற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் என்றும் அதனால் கண்டிப்பாக உதவுவதாகவும் கூறியுள்ளார்.

MOST READ: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கனுமாம் இல்லனா ஆபத்துதான்....!

நாசா சுற்றுப்பயணம்

நாசா சுற்றுப்பயணம்

பள்ளி முதல்வர் கூறுகையில், " ஜெயலட்சுமி மிகவும் திறமையான பெண் மற்றும் பல போட்டிகளில் வென்று வருகிறார். வானமே அவளுக்கு எல்லை" என்று கூறினார். நாசா நடத்திய போட்டியில் வென்ற ஒருசில மாணவர்களில் இவரும் ஒருவர். வெற்றியாளர்களுக்கு நாசாவின் முழு சுற்றுப்பயணமும் வழங்கப்படும், மேலும் அவர்கள் விண்வெளி வீரர்களுடன் உரையாடுவார்கள். மேலும், அவர்கள் டிஸ்னி வேர்ல்டுக்கு கொண்டு செல்லப்படுவார்கள். நாங்களும் இந்த சாதனை சிறுமிக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இது மற்ற மாணவர்களுக்கும் ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tamil Nadu Government School Girl Wins Trip To NASA

Jayalakshmi, Class 11 student from tamil nadu and family's sole breadwinner wins a trip to NASA
Desktop Bottom Promotion