Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
மீன ராசியில் இருக்கும் சூரியனால் ஏப்ரல் 14 வரை இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
2023 மார்ச் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்தார். சூரியன் இந்த மீன ராசியில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருந்து, பின் மேஷ ராசிக்கு செல்லவுள்ளார்.
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் மனித வாழ்க்கையில் காணப்படும். நவகிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றும். அதில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. மேலும் ஒவ்வொரு மாதமும் நிகழும் சூரியனின் ராசி மாற்றமானது சில ராசிக்காரர்களுக்கு நற்பலனையும், சிலருக்கு கெடு பலனையும் தரலாம்.

2023 மார்ச் 15 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைந்தார். சூரியன் இந்த மீன ராசியில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருந்து, பின் மேஷ ராசிக்கு செல்லவுள்ளார். சூரியன் மீன ராசியில் இருக்கும் காலத்தில் சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இப்போது மீன ராசியில் இருக்கும் சூரியனால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நிறைய செலவுகளை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. இதன் விளைவாக உங்கள் பட்ஜெட் பாதிக்கப்படலாம். மேலும் மருத்துவ செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதிக மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் 7 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இக்கால கட்டத்தில் நிறைய சண்டைகள், வாக்குவாதங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதங்களை சந்திக்கக்கூடும். இக்காலம் புதிய வேலையை தொடங்க சிறந்த காலம் அல்ல. இக்காலத்தில் பணத்தை எதிலும் முதலீடு செய்யாதீர்கள். உங்கள் தாயாருடனான உறவு மோசமடையும் வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சூரியன் உள்ளார். இதனால் இப்பெயர்ச்சி காலமானது மகர ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். முக்கியமாக உடன்பிறந்தவர்களுடன் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மேலும் நிதி ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் மற்றும் நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இக்காலத்தில் எந்த முதலீடுகளையும் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருங்கள். வியாபாரிகள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெற முடியாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
