Latest Updates
-
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்!
சூரியன் மிதுன ராசிக்கு செல்வதால் அதிக சிரமப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
2021 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி அதிகாலை 5:49 மணிக்கு சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான ஆனி பிறக்கிறது.
வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் புகழப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மற்ற கிரகங்களைப் போலவே, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு ஒவ்வொரு மாதமும் இடம் பெயர்வார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி அதிகாலை 5:49 மணிக்கு சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான ஆனி பிறக்கிறது.

இப்படி சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்வதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஆனி மாத ராசிபலனை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மேற்கொள்ளும் சிறு பயணமும் ஊக்கமளிக்கும் முடிவுகளை வழங்கும். இக்காலத்தில் உங்களின் ஆற்றல் மட்டங்கள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கும். குழந்தை தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு, அந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். இக்காலத்தில் தைரியம் அதிகரிப்பதைக் காண்பீர்கள். மொத்தத்தில், இந்த காலம் பணிபுரிபவர்களுக்கும், மாணவர்களுக்கும் சாதகமான காலமாகும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு வங்கி இருப்பு, பேச்சு, குடும்பம் மற்றும் உணவு பழக்கங்களைக் குறிக்கிறது. இக்காலத்தில் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம் என்பதால் கவனமாக இருங்கள். செல்வத்தைப் பொறுத்தவரை, நீங்கள் பேசும் விதத்தை சரிபார்த்துக் கொண்டால், இக்காலம் உங்களுக்கு பயனளிக்கும். பணிகள் எவ்வித தடையுமின்றி நடக்க வேண்டுமானால், ஒன்றிற்கு இரு முறை பார்த்து வார்த்தைப் பயன்படுத்துங்கள். குடும்ப உறுப்பினர்கள் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள் மற்றும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு சுய மற்றும் ஆளுமையைக் குறிக்கிறது. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மற்றும் அவரது வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குறிப்பாக அடிக்கடி காய்ச்சல் அல்லது தலைவலியால் பாதிக்கப்படலாம். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் திருமண வாழ்வில் குழப்பத்திற்கு வழிவகுக்கும். வியாபாரம் செய்பவர்கள், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான சரியான காலம் அல்ல. இக்காலத்தில் கூட்டாண்மை வணிகம் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு செலவுகள், மறைமுகமான எதிரிகள், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் மருத்துவமனை சேர்ப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஆகவே இக்காலத்தில் மருத்துவ செலவுகளுக்கு வாய்ப்புள்ளது என்பதால் உடல்நலம் குறித்து கவனமாக இருங்கள். இந்த காலக்கட்டத்தில் எதிரிகள் உங்களை தொந்தரவு செய்வார்கள். எனவே உங்கள் எதிரிகளுடன் எந்த ஒரு மோதலிலும், வாக்கு வாதங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள். முக்கியமாக எந்த ஒரு புதிய வணிக முயற்சிகளையும் தவிர்த்திடுங்கள் மற்றும் உங்கள் கண்களை கவனித்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு ஆதாயங்கள், வருமானம் மற்றும் ஆசைகளை உணர்வது ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வருமானத்தில் லாபங்கள் கிடைக்கும். மேலும் புதிய வழிகளிலும் சம்பாதிப்பீர்கள். இக்காலம் வருமானத்திற்கு மிகவும் சாதகமானது என்றாலும், ஆரோக்கிய விஷயத்தில் அப்படியே எதிர்மறையானது. இக்காலத்தில் சரும பிரச்சனைகளை சந்திக்கலாம். இதய நோயாளிகள் இக்கால கட்டத்தில் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவதோடு, எதிர்பார்த்த முடிவுகளைப் பெறாததால் மனச்சோர்வு அடைவார்கள். இருப்பினும், பொறுமை மற்றும் கடின உழைப்பு ஆகியவை மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டிய நற்பண்புகளாகும்.

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு தொழில், பெயர், புகழ் மற்றும் நிலை ஆகியவற்றைக் குறிக்கிறது. இக்காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. இருப்பினும் உங்கள் புகழ் ஓரளவு உயரும். பணியிடத்தில் வாதத்தைத் தவிர்க்கவும். மேலும் அலுவலக அரசியலில் நீங்கள் முற்றிலும் விலகி இருக்க வேண்டும். வேலையை மாற்ற திட்டமிட்டிருந்தால், சிறிது காலம் காத்திருங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு அதிர்ஷ்டம், ஆன்மீகம் மற்றும் வெளிநாட்டு பயணங்களைக் குறிக்கிறது. இந்த காலம் உங்களுக்கு அருமையான காலக்கட்டமாக இருக்கும். உங்கள் பக்கம் அதிர்ஷ்ட காற்று சற்று அதிகமாக வீசும். மேலும் இந்த காலக்கட்டத்தில் பயணத்திற்கான வாய்ப்பு உள்ளது. இந்த கால கட்டம் ஆன்மீக வளர்ச்சிக்கு சாதகமானதாக இருக்கும். இக்காலத்தில் வாழ்க்கையை முழுமையான அனுபவித்து வாழ விரும்புவீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். உங்களின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு இந்த காலத்தை சிறப்பாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழில் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். மாமியாருடனான உறவில் சில மாற்றங்களை சந்திக்க நேரிடலாம். இந்த நேரத்தில் எந்தவொரு தேவையற்ற விஷயத்திலும் கவனத்தை செலுத்தாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. துப்பறியும் நபர்கள் அல்லது இரகசிய நிறுவனங்களில் அல்லது அரசாங்கத்தில் இரகசிய சேவைகளில் இருப்பவர்கள் இந்த காலத்தில் பயனடைவார்கள். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் என்றால், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் பிணைப்பை வலுப்படுத்துவது ஆகும்.

தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு திருமணம், கூட்டாண்மை மற்றும் உறவுகளைக் குறிக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் கோபம் பெரிய பிரச்சனையாக இருக்கலாம். திருமணம் செய்ய விரும்புவோருக்கு சில காரணங்களால் திருமணம் தாமதமாகலாம். திருமணமான தம்பதிகள், ஈகோ பார்க்கக்கூடாது. வணிக கூட்டாண்மை பாதிக்கப்படும் என்பதால் கூட்டாளருடன் நல்ல உறவைப் பேண முயற்சி செய்யவும். முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருங்கள். அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள்.

மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். இக்கால கட்டத்தில் போட்டியை உணர்வீர்கள். ஏதேனும் நோயை எதிர்கொண்டால், இக்காலத்தில் அது தீவிரமாகலாம். எனவே ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சட்ட சிக்கல்களைக் கையாண்டால் அல்லது வழக்கு முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரும். கடன்கள் ஏதேனும் இருந்தால் விடுபட இது ஒரு நல்ல நேரம். எதிரிகளால் நீங்கள் கஷ்டப்பட்டால், இக்காலத்தில் எதிரிகளிடமிருந்து விடுபடுவீர்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு கல்வி, குழந்தைகள் மற்றும் காதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இக்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் போட்டியாளர்களை விட உயர தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவார்கள். இந்த பெயர்ச்சியின் போது எந்தவிதமான சூதாட்டத்தையும் பந்தயத்தையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் மகிழ்ச்சியாகவும் நேர்மறையாகவும் உணருவீர்கள். ஆன்மீக நடைமுறைகளில் சரியாக கவனம் செலுத்த முடியாது. நீங்கள் அசிடிட்டி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்படக்கூடும் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும்.

மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இந்த வீடு சௌகரியம், தாய் மற்றும் ஆடம்பரம் ஆகியவற்றைக் குறிக்கிறது. 4-ஆவது வீட்டில் சூரியன் உங்களுக்கு சில துயரங்களைத் தரக்கூடும். நீங்கள் அதிக உணர்ச்சி வசப்படுவீர்கள். மேலும் இக்காலத்தில் உங்கள் வசதி உங்களிடமிருந்து சிறிது காலம் பறிக்கப்படும். இருப்பினும், நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு, அதற்கு ஏற்றாற் போல் மாறி நடப்பீர்கள். லட்சியத்துடன் வேலையை ஆரம்பிப்பீர்கள். ஆனால் அதற்கான நல்ல பலன் கிடைக்க சிறிது காலம் ஆகலாம். எனவே பொறுமையுடன், சூழ்நிலையை கையாளுங்கள். உங்கள் தாயாரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் எந்தவிதமான போதைப்பொருளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். இல்லையெனில் சிக்கலை சந்திக்க தயாராக இருங்கள்.



Click it and Unblock the Notifications











