சூரியன் கும்ப ராசிக்கு செல்வதால் இந்த ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அதிகாலை 3.12 மணிக்கு சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான மாசி பிறக்கிறது.

வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் ராஜாவாக அழைக்கப்படுபவர் சூரியன். இத்தகைய சூரியன் மற்ற கிரகங்களைப் போலவே, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவார். அதுவும் ஒவ்வொரு மாதமும் சூரியன் இடம் பெயர்வார். அப்படி சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அதிகாலை 3.12 மணிக்கு சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான மாசி பிறக்கிறது.

Surya Rashi Parivartan 2022: Sun Transit in Aquarius on 13 February Effects on 12 Zodiac Signs in Tamil

இப்படி சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்வதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என மாசி மாத ராசிபலனை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 11 ஆம் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் பெரும் வெற்றியைத் தருவார். தைரியம் அதிகரிப்பது மட்டுமின்றி வருமானம் பெருகும். கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் பொறுப்பு நிறைவேறும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பிறக்கும் யோகம் உண்டு. இக்கால கட்டத்தில் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சூரியனின் முழு ஆதரவும் கிடைக்கும். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலைக்கு முயற்சித்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரியல் எஸ்டேட் தொடர்பான பிரச்னைகள் தீரும். வாகனத்தை விற்க முயற்சித்தால் அது வெற்றிகரமாக நடக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சூரியனின் தாக்கம் அதிர்ஷ்டத்தைத் தரும். அதே வேளையில் சிறு மன உளைச்சலையும் கொடுக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் முடிவுகளும் செயல்களும் பாராட்டப்படும். உங்கள் ஆற்றலின் உதவியால், கடினமான சூழ்நிலைகளை எளிதாக சமாளிப்பீர்கள். வெளிநாடு அல்லது வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். தேர்தலில் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதிக்க விரும்பினால், அதற்கு இந்த கிரகப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சூரியனின் தாக்கத்தால் எதிர்பாராத பல ஏற்ற தாழ்வுகளைத் தரும். செல்வாக்கும் மரியாதையும் கூடும். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் பிரிவினை ஏற்படும் சூழலை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். நிலச் சொத்து, மூதாதையர் சொத்து தகராறு நீங்கும். திடீர்ப் பணம் பெறுவது மட்டுமின்றி, கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வணிகர்களுக்கு நல்ல காலம். ஆனால் பொதுவான தொழில் செய்வதைத் தவிர்க்கவும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் தாமதம் ஏற்படலாம். திருமண வாழ்க்கையிலும், மாமியார் உறவுகளிலும் கசப்பு ஏற்பட அனுமதிக்காதீர்கள். இக்காலத்தில் அரசு அதிகாரத்தின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இந்த கிரகப் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். உங்களின் உத்திகள் மற்றும் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டு செயல்பட்டால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் சூரியனின் தாக்கம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ரகசிய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். பயணங்களால் பலன் கிடைக்கும். வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்தக் காலக்கட்டத்தில் ஏதேனும் பெரிய வேலைகளைத் தொடங்க வேண்டும் என்றாலோ அல்லது ஒப்பந்தம் போட வேண்டியிருந்தாலோ நல்லது.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மாணவர்களுக்கு சிறப்பாக இருக்கும். காதல் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் இருக்கும். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் குறையும். புது தம்பதியருக்கு குழந்தை பிறக்கும் யோகமும் கூடும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். எடுத்த முடிவும் செய்த பணியும் பாராட்டப்படும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் நிறுத்தப்பட்ட பணிகள் முடிவடையும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் அவ்வளவு நன்றாக இருக்காது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், மனநலம் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து விரும்பத்தகாத செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெற்றோரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். சொத்து சம்பந்தமான விஷயங்கள் தீரும் ஆனால் சொந்தக்காரர்கள் உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பார்கள். ஜாக்கிரதையாக இருங்கள்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிலும் வெற்றி கிடைக்கும். இருப்பினும் உங்களின் ஆக்கிரமிப்பு இயல்பின் காரணமாக, நீங்கள் உங்களுக்கே தீங்கு விளைக்கக்கூடும். எனவே உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வேலை செய்தால், நீங்கள் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் பிரிவினை நிலையை உருவாக்கி விடாதீர்கள். இளைய சகோதரர்களுடனான உங்கள் உறவை மோசமடையவிடாதீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கலாம். உங்களின் பேச்சைக் கட்டுப்படுத்தவும். குடும்பத்தில் பிரிவினை நிலையை உருவாக்கி விடாதீர்கள். இக்காலத்தில் நீங்கள் காதால் கேட்பதை நம்பாதீர்கள். திடீர் பண வரவிற்கு வாய்ப்பு உண்டு. பலநாட்கள் கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்கும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் உங்களின் செல்வாக்கு மற்றும் மரியாதை இக்காலத்தில் அதிகரிக்கும். உங்கள் திறமை மற்றும் ஆற்றல் பலத்தால், கடினமான சூழ்நிலைகளை எளிதாக சமாளிப்பீர்கள். அவமானப்படுத்த நினைத்தவர்கள் உதவ முன்வருவார்கள். அரசுத் துறைகளில் உங்கள் பணிகள் முடிவடையும். இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், எதிலும் வெற்றி கிடைக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் நன்றாக இருக்கும் என்று கூற முடியாது. ஏனென்றால் பல ஏற்ற இறக்கங்கள் மற்றும் எதிர்பாராத பலன்கள் இருக்கலாம், நிறைய அலைச்சல்கள் இருக்கும். ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். நீதிமன்ற விவகாரங்களை தங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, February 10, 2022, 10:39 [IST]
Desktop Bottom Promotion