Latest Updates
-
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம்
சூரிய பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது..!
2023 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் அசுப பலன்களையும் பெறலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். அப்படி சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். மேலும் சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அதில் சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்லும் போது தான் தமிழ் மாதமான மாசி மாதம் பிறக்கிறது.

அந்த வகையில் 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கத்தால் சில ராசிக்காரர்கள் நற்பலனையும், சில ராசிக்காரர்கள் அசுப பலன்களையும் பெறலாம். இப்போது 2023 பிப்ரவரி 13 ஆம் தேதி கும்பம் செல்லும் சூரியனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறலாம். வேலை செய்பவர்கள் தங்கள் பணியிடத்தில் பாராட்டைப் பெறுவார்கள். ஏன், பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. சிலர் நண்பர்களால் சில நல்ல பலன்களைப் பெறலாம். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். இக்காலத்தில் உங்கள் தந்தையின் உதவினால் பல வெற்றிகளை காண்பீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்கள் நற்பலனைப் பெறுவார்கள். வணிகர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல லாபத்தைக் காண வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீடு வாங்கும் ஆசை இருந்தால், இக்காலத்தில் புதிய வீடு வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பயணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் அமையும். இதுவரை மன ரீதியாக பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அப்பிரச்சனைகள் நீங்கி மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு இக்காலத்தில் பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம். ஆன்மீக பயணம் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அவ்வளவு சிறப்பாக இருக்காது. இந்த காலகட்டத்தில் உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த காலத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளால் மனக்கசப்புகள் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் உங்கள் திருமண வாழ்க்கையில் பதட்டங்கள் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புரிந்து கொண்டால், அதைத் தவிர்க்கலாம். இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்காதீர்கள். கூட்டு வேலை செய்து வந்தால், சரியான கணக்குவழக்கை பராமரிக்க வேண்டும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக காத்திருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். உங்கள் எதிரிகளுக்கு இக்காலத்தில் நல்ல பாடத்தைப் புகட்டுவீர்கள்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எந்த புதிய வேலையை தொடங்கினாலும் நல்ல வெற்றி கிடைக்கும். ஆனால் காதல் விஷயங்களில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் எவ்வித சண்டையும் போடாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால், அது உறவில் விரிசலை ஏற்படுத்திவிடும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் குடும்பத்தில் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் தாயாரின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் மன கவலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தில் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தந்தையின் உதவியால் பல புதிய வேலைகளைத் தொடங்கி, அதில் வெற்றிகளையும் காண்பீர்கள். ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டவர்களுக்கு இக்காலத்தில் ஒரு நல்ல செய்தி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் எந்த ஒரு முதலீடு செய்வதாக இருந்தாலும், சிந்தித்து செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள நினைப்பவர்கள் இக்காலத்தில் கற்றுக் கொள்ளலாம்.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் உங்கள் துணையை பிரிந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். கூட்டு தொழில் செய்து வந்தால், நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து புதிய வேலையை தொடங்க வாய்ப்புள்ளது.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையில்லாத பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் அவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்ய வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications