Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
அஜித் படம் பார்க்க லீவு கேட்ட லீவ் லெட்டர் எழுதிய மாணவன்... நீங்களே பாருங்க...
அஜித்தின் படத்தைப் பார்க்க பள்ளிக்கு விடுமுறைக் கடிதம் எழுதிய சுவாரஸ்யமான கதையைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
வியாழக்கிழமை அன்று அல்டிமேட் ஸ்டார் "தல" அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீஸாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் கல்லூரி மாணவன் ஒருவன் தான் அஜித் படத்திற்குப் போவதற்கு தனக்கு விடுமுறை அளிக்குமாறு ஆசிரியருக்கு விடுமுறைக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்த சுவாரஸ்யமான விஷயம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் அந்த கடிதம் மிகப் பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சுவாரஸ்யக் கடிதத்தையும் அதன் பின்னணியையும் பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

லீவ் லெட்டர்
எனக்கு வயிற்று வலி, காய்ச்சல், பாட்டி செத்துப் போச்சு இப்படி சீரியஸான விஷயத்தையே விளையாட்டுத் தனமாக எடுத்துக் கொண்டு, லீவு லெட்டர் எழுதிய அனுபவம் பெரும்பாலும் நம் எல்லோருக்குமே இருக்கும். ஏன் அப்படி எழுதாத மாணவ சமுதாயம் எந்த தலைமுறையிலும் இல்லாமல் இருக்க முடியாது.

கல்லூரி மாணவன்
வியாழக்கிழமை அன்று அல்டிமேட் ஸ்டார் "தல" அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரிலீஸாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் கல்லூரி மாணவர் படத்துக்குப் போவதற்காக விடுமுறை கேட்டுள்ளார்.

எங்கே நடந்தது?
இந்த சுவாரஸ்யமான சம்பவம் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தான் தன்னுடைய துறைத் தலைவரிடம் விடுமுறை கேட்டு, விடுமுறைக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்த கடிதத்தைப் பார்த்து கடுப்பான துறைத்தலைவர் அந்த கடிதத்தை நிராகரித்ததோடு, அந்த மாணவனின் பெற்றோரைக் கல்லூரிக்கு அழைத்து வரும்படி கட்டளையும் இட்டனர்.

என்ன இருந்தது கடிதத்தில்?
respected sir, ultimate star ajith kumar (NKP) அவர்கள் படற்த்திற்கு (தவறாக எழுதியிருக்கிறார்) போக இருப்பதால் நாளை (08/08/2019) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி என்று குறிப்பிட்டு தேதி மற்றும் நேரத்துடன் குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருக்கிறார்.

அதிர்ச்சி
ஒரு காலத்தில் விடுமுறை எடுப்பதற்கான காரணங்கள் பல இருந்தாலும், இன்றைய தலைமுறை மாணவர்கள் சினிமா பார்ப்பதற்கான விடுமுறை கேட்டு பகிரங்கமாகக் கடிதம் எழுதுவது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



Click it and Unblock the Notifications
