Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
முருகனுக்கு சேவல் கொடி, மயில் வாகனம் எப்படி வந்தது-ன்னு தெரியுமா?
சூரம்சம்ஹாரம் அல்லது கந்த சஷ்டி 2020 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியானது தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் ஆறாம் நாள் அனுசரிக்கப்படுகிறது.
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான கடவுள் முருகப் பெருமான். முருகனின் மிகவும் முக்கியமான திருவிழா தான் சூரசம்ஹாரம். இந்துக்களால் கொண்டாடப்படும் இந்த திருவிழா ஸ்கந்த சஷ்டி அல்லது கந்த சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.

முருகப் பெருமான் சூரபத்மன் என்னும் அரக்கனை அழித்தார். இந்த சூரபத்மனை அழித்த நிகழ்வு தான் சூரசம்ஹாரம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழா சூரசம்ஹாரம். இப்போது கந்த சஷ்டி அல்லது சூரசம்ஹாரத்தின் பின்னணியில் உள்ள கதை, முக்கியத்துவம் மற்றும் எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பது குறித்து விரிவாக காண்போம்.

2020 சூரசம்ஹாரம் எப்போது?
சூரம்சம்ஹாரம் அல்லது கந்த சஷ்டி 2020 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியானது தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தின் ஆறாம் நாள் அனுசரிக்கப்படுகிறது.

சூரசம்ஹாரம் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?
கந்த சஷ்டி திருவிழாவானது 6 நாட்கள் கொண்டாடப்படும். அதில் ஆறாம் நாளில் பக்தர்கள் கடுமையான விரதம் இருப்பார்கள். கார்த்திகை மாதத்தின் 6 ஆம் நாளில் வருவது தான் சஷ்டி. இந்த நாளில் மேற்கொள்ளும் விரதத்தை கந்த சஷ்டி விரதம் என்றும் அழைப்பார்கள்.
தென்னிந்தியாவில் பல்வேறு முருகன் கோவில்கள் உள்ளன. கந்த சஷ்டி தினத்தன்று முருகன் கோவில்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதிலும் தென்னிந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான திருசெந்தூர் கோவிலில் சூரசம்ஹார கொண்டாட்டம் மிகவும் விமரிசையாக நடக்கும். சூரசம்ஹார தினத்தன்று இக்கோவியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இந்த சூரசம்ஹார நிகழ்வை கண்டுகளிப்பார்கள்.

சூரசம்ஹாரம் குறித்த புராண கதை
சூரசம்ஹாரம், சூரபத்மன் என்னும் அரக்கனை தனது வேல் கொண்டு வதம் செய்த முருகனின் வெற்றியைப் போற்றும் விதமாக கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரம் பற்றிய புராணக் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். புராணங்களின் படி, சூரபத்மன் என்னும் அசுரன் தேவர்களை சித்திரவதை செய்து வந்தான். இதிலிருந்து விடுபட தேவர்கள் பிரம்மரிடம் சென்று உதவி கேட்டனர். சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும் என்று பிரம்மர் கூற, தேவர்கள் கயிலாயம் சென்று சிவனிடம் உதவி கேட்டனர். இதனால் சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் முருகனை உருவாக்கினார். பின் திருச்செந்தூரில் முருகன் சூரபத்மனை போரிட்டு வென்று தேவர்களைக் காத்தார். மொத்தத்தில் இந்த அசுரனை அழிக்கவே முருகன் அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மயில், சேவல் கதை
சூரபத்மனுக்கு எதிரான போரின் போது அன்னை பார்வதி முருகனுக்கு சக்தி மிகுந்த வேலாயுதத்தைக் கொடுத்தார். போரின் போது, முருகன் முதலில் சூரபத்மனின் மகன் பானுகோபன், சிங்கமுகா சூரன், பின் தலைமை அமைச்சர் தருமகோபன் மற்றும் அவனது 3000 மக்களும் முருகனின் வேலால் வீழ்த்தப்பட்டனர். இறுதியில் நின்றது சூரபத்மன் தான். இவர் முருகனுடன் மாய போர் புரிந்தான். முருகனின் வேலில் இருந்து தப்பிப்பதற்கு பல மாயங்களைப் புரிந்து தப்பி வந்தான். அப்போது திருச்செந்தூரின் அருகில் உள்ள மரப்பாடு என்னும் மாந்தோப்பில் மாமரமாக இருந்த சூரபத்மனை முருகனின் வேல் இரண்டாக பிளந்து அழித்தது. பின் அந்த இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறி முருகனின் கொடியாகவும், வாகனமாகவும் மாறின.

நாழிக்கிணறு
போர் முடிந்த பின், முருகனின் வேல் கங்கையில் சென்று நீராடி தோஷம் நீக்கி, மீண்டும் முருகனிடம் வந்தது. அப்போது முருகன் அந்த வேல் கொண்டு கடற்கரையின் ஓரத்தில் குத்தும் போது, நீர் பீறிட்டு வந்தது. அது தான் நாழிக்கிணறு. அந்த கிணற்றின் நீரையும், மணலையும் கொண்டு முருகன் சிவலிங்கத்தை செய்து பூஜை செய்தார்.



Click it and Unblock the Notifications