Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்..
ஜோஷ் ஆப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சோனு சூட், மௌனி ராய் பங்கேற்கும் #EkNumber சேலஞ்ச்...
2021 ஆகஸ்ட் 17 ஆம் தேதியுடன் ஜோஷ் ஆப் தனது ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. ஆகவே இந்த சாதனையைக் கொண்டாடுவதற்காக ஜோஷ் 'Ek Number' என்ற சேலஞ்ச்சை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஷாட் வீடியோ ஆப் என்றால் அது ஜோஷ் ஆப் என்றே கூற வேண்டும். குறுகிய காலத்தில் பல டாப் ஷாட் வீடியோக்கள் மற்றும் வித்தியாசமான ட்ரெண்டுகளால் மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. இத்தகைய ஜோஷ் ஆப் வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஜோஷ் ஆப் தனது முதலாம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தற்போது மார்கெட்டில் நம்பர் ஒன் ஷாட் வீடியோ ஆப்பாக இருக்கும் ஜோஷ் பல சுவாரஸ்யமான ஷாட் வீடியோக்கள், எண்ணிடலங்கா எண்டர்டெயின்மெண்ட் கண்டெண்ட்டுகள் என்று இந்த ஜோஷ் ஆப்பை திறந்தாலே நேரம் போவது தெரியாத அளவில் பல சுவாரஸ்யமான விஷயங்களைக் கொண்டுள்ளது.

ஷாட் வீடியோ உலகில் யாராலும் தோற்கடிக்க முடியாதவாறு வலம் வந்து கொண்டிருக்கும் ஜோஷ் ஆப்பில் தினமும் சுமார் 2 பில்லியன் வீடியோக்கள் பார்க்கப்படுகின்றன. அதோடு 20,000-த்திற்கும் அதிகமாக கண்டென்ட் கிரியேட்டர்களைக் கொண்டு ஜோஷ் ஆப் டீம்மானது இதை சிறப்பாக மேனேஜ் செய்து வருகிறது. சிறப்பான வீடியோக்கள், வித்தியாசமான ஸ்டைல் காரணமாக சமூக வலைத்தளத்தை தற்போது ஆட்சி செய்து வருகிறது. இதுமட்டுமின்றி, கொரோனாவால் நாட்டு மக்கள் பாதிப்படைந்த நிலையில், மக்களுக்கு உதவும் வண்ணம் #Blurwarrior பிரச்சாரம் போன்ற ஆக்கப்பூர்வமான முயற்சிகளாகட்டும் அல்லது பிரபலங்கள் மற்றும் பிராண்டுகளுடன் கைக்கோர்த்ததாகட்டும், ஜோஷ் ஆப் இப்போது வரை சமூக வலைத்தளத்தில் வேற லெவலில் கெத்தாக வலம் வந்து கொண்டுள்ளது.
#EkNumber சேலஞ்ச்
2021 ஆகஸ்ட் 17 ஆம் தேதியுடன் ஜோஷ் ஆப் தனது ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. ஆகவே இந்த சாதனையைக் கொண்டாடுவதற்காக ஜோஷ் 'Ek Number' என்ற சேலஞ்ச்சை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதில் இந்தியாவின் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களான நடிகர் சோனு சூட் மற்றும் நாகினி மௌனி ராய் ஆகியோரும் பங்கேற்கிறார்கள் என்பது தெரியுமா? சொல்லப்போனால் இந்த #EkNumber சேலஞ்ச் இந்த இரண்டு நட்சத்திரங்கள் மூலம் தான் நடத்தப்படவுள்ளது. வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த சேலஞ்ச் நடனம், சமையல், ஃபேஷன், காமெடி, ஃபிட்னஸ் என பல பிரிவுகளில் மொத்தம் 8 மொழிகளில் நடக்கவுள்ளது.
இந்த சேலஞ்சில் ஜோஷ் ஆப்பில் பிரபலமாக இருக்கும் மற்றும் பல சமூக வலைத்தள நட்சத்திரங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதில் குக் வித் கோமாளி புகழ், KPY பாலா மற்றும் ஜோஷ் ஆப்பில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஃபைசு, சமீக்ஷா, இஷான், மதுரா மற்றும் ஷடன் போன்றோர்களும் கலந்து கொண்டு, இந்த சேலஞ்சில் கலந்து கொள்பவர்களுள் பத்து நாட்கள் வரிசையாக சிறப்பான மற்றும் தனித்துவமான வீடியோக்களை வெளியிடும் 120 பேரை தேர்ந்தெடுப்பார்கள்.
ஜோஷ் பயனர்கள் #EkNumber வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போது பின்வரும் 6 ஹேஷ்டேக்குகளை பயன்படுத்த வேண்டும். அவை:
#EkNumber
#EkNumberDanceStar
#EkNumberFashionStar
#EkNumberFoodStar
#EkNumberComedyStar
#EkNumberFitnessStar
உங்களுடைய #EkNumber சேலஞ்ச் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிச் செய்யுங்கள்.
சரி, இதற்கு என்ன பரிசு? என்று நீங்கள் கேட்கலாம். இந்த சேலஞ்சில் வெற்றி பெறும் வெற்றியாளர்கள் ஜோஷ் ஆப்பில் அடுத்த Ek Number கண்டண்ட் கிரியேட்டர் ஆக முடியும். இது தவிர, வெற்றியாளர்களுக்கு ரூ.50,000 ரொக்க பரிசு வழங்கப்படும். அது மட்டுமல்லாமல், பிரபலங்கள் மற்றும் மாடல்களுடன் சேர்ந்து போட்டோ எடுக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் ஜோஷ் ஆப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடுவதற்கு 'Ek Number' மியூசிக் ராப் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கிளிண்டன் செரிஜோ மற்றும் பியான்கா கோம்ஸ் இசையமைத்த 'Josh Mein Aaja' என்னும் பாடலின் டாப் தற்போது வைரலாகி வருகிறது. இந்த Ek Number பாடலைக் கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
முக்கியமாக ஜோஷ் உங்களின் பக்கத்தை மேலும் அழகுப்படுத்துவதற்கு Josh IG Filter-ஐ ரிலீஸ் செய்துள்ளது. ஜோஷ் ஆப் நடத்தும் சேலஞ்ச் குறித்து மேலும் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள்.



Click it and Unblock the Notifications
