Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்த கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
தற்போது 2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4 ஆம் தேதி நிகழவுள்ளது. 2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சூரிய, சந்திர கிரகணங்கள் 4 முறை நிகழும். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் 2021 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நிகழ்ந்தது. தற்போது 2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4 ஆம் தேதி நிகழவுள்ளது. 2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் இருந்து நன்கு தெரியும். மேலும் செயின்ட் ஹெலினா, நமீபியா, லெசோதோ, தென்னாப்பிரிக்கா, தெற்கு ஜார்ஜியா மற்றும் சாண்ட்விச் தீவுகள், குரோசெட் தீவுகள், பால்க்லாந்து தீவுகள், சிலி, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சில இடங்களிலும் இந்த அற்புதமான நிகழ்வைக் காணலாம்.

சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கு முன்பு சந்திரன் செல்லும் போது நிகழ்வதாகும். சூரியன் சந்திரனை விட பல மடங்கு பெரியது மற்றும் பன்மடங்கு தொலைவில் உள்ளது. சூரியனுக்கு முன் சந்திரன் செல்லும் போது, இவை இரண்டும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய தட்டுப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே சூரிய கதிர்கள் முழுமையாகவோ பூமியில் படுவது தடுக்கப்படுகிறது. இந்த கிரகணத்தின் விளைவாக பூமியின் சில பகுதிகள் சந்திரனின் நிழலால் மூடப்பட்டிருக்கும்.

இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியுமா?
தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்/ நாசா பூமியின் மேற்பரப்பில் சூரிய கிரகணத்தின் பாதையைக் காட்டும் வரைபடத்தை வெளியிட்டது. அதன்படி, இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து தெளிவாக பார்க்க முடியாது.

சூரிய கிரகணம் நிகழும் நேரம்
2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 04 ஆம் தேதி UTC காலை 7 மணிக்கு தொடங்குகிறது. அதிகபட்ச கிரகணம் காலை 7.33 மணிக்கு இருக்கும் மற்றும் இந்த கிரகணம் காலை 8.06 மணிக்கு முடிவடையும். இந்திய நேரப்படி பார்த்தால், இந்த சூரிய கிரகணம் மதியம் 12.20 மணிக்கு தொடங்கி, மதியம் 1.30 மணிக்கு உச்சத்தில் இருந்து, மதியம் 01.36 மணிக்கு முடிவடையும்.

2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை எப்படி பார்ப்பது?
இந்த அற்புதமான வானியல் நிகழ்வை மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக நாசா அண்டார்டிகாவில் உள்ள யூனியன் க்லேசியரில் இருந்து நிகழ்வை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது. இந்த வானியல் நிகழ்வு யூடியூப் மற்றும் நாசா நேரலையில் ஒளிபரப்பப்படும்.
இந்த நேரடி ஒளிபரப்பு இந்த நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கும். ஆனால் கிரகணமோ நேரடி ஒளிபரப்பு தொடங்கிய அரை மணிநேரத்திற்கு பின்னரே தொடங்கும். முக்கியமாக கிரகணத்தின் போது சூரியனை நேரடியாக வெறும் கண்ணால் பார்க்க வேண்டாம் என்று நாசா எச்சரித்துள்ளது. வேண்டுமானால், சூரிய கிரகணத்தைப் பார்க்கும் ஸ்பெஷலான கண்ணாடிணை அணிந்து பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications
