Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
சூரிய கிரகணத்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
2021 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இந்த ஆண்டு முடிவதற்குள் ஒரு முக்கியமான வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அதுவும் டிசம்பர் 04 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் நிகழவுள்ளது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இந்த ஆண்டு முடிவதற்குள் ஒரு முக்கியமான வானியல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அதுவும் டிசம்பர் 04 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் ஒரு ஓரளவிற்கே தெரியும். பொதுவாக கிரகண நிகழ்வுகள் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஒவ்வொரு ராசிக்காரர்களையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
டிசம்பர் மாதத்தில் நிகழும் சூரிய கிரகணமானது மேஷ ராசிக்காரர்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது. இந்த ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ரிஷபம்
2021 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் பெரிய நன்மைகளைப் பெறுவார்கள். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் நல்ல செய்தியைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நீங்கள் ஏதேனும் பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்தால், அது இக்காலத்தில் நீங்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் பேச்சில் கவனம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் உங்கள் நண்பர்களுடன் சண்டை ஏற்படலாம். இக்காலத்தில் உங்கள் குழந்தையைப் பற்றிய ஏதேனும் ஒரு பிரச்சனையால் கவலைப்பட வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் மிகவும் சாதகமான காலமாக இருக்கும். நீங்கள் சில நல்ல செய்தியைப் பெற வாய்ப்புள்ளது. அதோடு, இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளுக்கு இக்காலத்தில் தீர்வைக் காண்பீர்கள்.

கன்னி
இந்த சூரிய கிரகணம் கன்னி ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். உங்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதை உணர்வீர்கள். சமூகத்தில் உங்களின் நிலை அதிகரிக்கும்.

துலாம்
இந்த சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களும் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. இக்காலத்தில் உங்களின் பேச்சைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. மேலும் நீங்கள் இக்காலத்தில் மன அழுத்தத்துடனும், டென்சனாகவும் இருப்பீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்கள் சூரிய கிரகணத்தால் ஏற்றத் தாழ்வுகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் நீங்கள் திட்டமிட்டபடி விஷயங்கள் நடக்காது. இதனால் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். மேலும் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தால் எந்த ஒரு சிறப்பான பலன்களையும் பெறமாட்டார்கள். தேவையில்லாத விஷயங்களால் பிரச்சனைகளை சந்தித்து சிரமப்படுவீர்கள். அதோடு, உங்களின் செலவு அதிகரித்து பட்ஜெட்டை மோசமாக பாதிக்கும்.

மகரம்
மகர ராசியைச் சேர்ந்தவர்களுக்கு இந்த கடைசி சூரிய கிரகணம் அற்புதமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதேப் போல் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் காண்பார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அதிர்ஷ்டமானதாக இருப்பதால், நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாயங்களைப் பெறுவதால், நிதி நிலையில் நல்ல பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தினால் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படகிறது. வீடு அல்லது அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் நீங்கள் மன அழுத்தத்தடன் இருப்பீர்கள். முக்கியமாக வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications
