For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க வீட்டுல பணம் மழை பொழிய நீங்க ஆரோக்கியமா வாழ வாஸ்துப்படி கிச்சன்ல என்னென்ன மாத்தணும் தெரியுமா?

வாஷ் பேஷன், சிங்க், குழாய்கள் மற்றும் வடிகால்களை எப்போதும் சமையலறையின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். இது சமையலறையில் வாஸ்துவின் ஆரோக்கியமான சமநிலை குறிக்கும்.

|

இந்திய கலாசாரத்தின்படி சமையலறையானது குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் எரிபொருளாகக் கொடுக்கும் ஆற்றல் என நம்பப்படுகிறது. அன்னபூர்ணா தேவி மற்றும் லட்சுமி தேவியை சமையலறையில் வைத்து பல இந்திய வீடுகளில் வழிபடுவதற்கு இதுவும் ஒரு காரணம். வாஸ்து சாஸ்திரத்தின் படி கூட, சமையலறை என்பது குடும்பத்தில் ஊட்டச்சத்து, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தின் ஓட்டத்தை உறுதி செய்யும் புனிதமான இடமாக பார்க்கப்படுகிறது. எனவே, சமையலறையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது மிக அவசியம்.

simple-ways-to-remove-vastu-dosha-from-the-kitchen-in-tamil

ஆனால் சமையலறையிலும் வீட்டிலும் வாஸ்து தோஷத்திற்கு அமைதியாக வழிவகுக்கும் கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் தவறுகள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குடும்பத்தில் அமைதி, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்த சமையலறையில் உள்ள வாஸ்து தோஷத்தை சரிசெய்ய உதவும் சில எளிய குறிப்புகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எளிய சமையலறை ஏற்பாடு குறிப்புகள் வாஸ்து தோஷத்தை நீக்கும்

எளிய சமையலறை ஏற்பாடு குறிப்புகள் வாஸ்து தோஷத்தை நீக்கும்

வாஸ்து சாஸ்திரம் என்பது உயிர்களின் முன்னேற்றத்திற்காக ஆற்றல்களை சீரான முறையில் பயன்படுத்துவதாகும். இருப்பினும், பெரும்பாலான நகர்ப்புற சமூகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில், கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டுவருவது சாத்தியமில்லை. இருப்பினும், உங்கள் சமையலறையிலும் வீட்டிலும் சில விஷயங்களை மாற்றுவதன் மூலம் உங்கள் குடும்பத்தின் முன்னேற்றத்தை நோக்கி நேர்மறையான ஆற்றலைப் பெறலாம். இந்த எளிய குறிப்புகள் உங்கள் சமையலறையை வாஸ்து தோஷங்களிலிருந்து விடுவிக்கும்.

வாஷ் பேஷன்

வாஷ் பேஷன்

வாஷ் பேஷன், சிங்க், குழாய்கள் மற்றும் வடிகால்களை எப்போதும் சமையலறையின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும். இது சமையலறையில் வாஸ்துவின் ஆரோக்கியமான சமநிலை குறிக்கும். மேலும், இது குடும்பத்தில் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியின் ஓட்டத்தை உறுதி செய்கிறது.

உபகரணங்கள் மற்றும் அடுப்புகளை எங்கே வைக்க வேண்டும்

உபகரணங்கள் மற்றும் அடுப்புகளை எங்கே வைக்க வேண்டும்

சமையலறை அடுப்பு மற்றும் உபகரணங்கள் சமையலறையின் சாராம்சம். ஏனெனில் அவை உணவை சமைக்கப் பயன்படுகின்றன. எனவே, அவைகளின் இடம் கூட வீட்டின் வாஸ்து கலாச்சாரத்தை உருவாக்கலாம் அல்லது உடைக்கலாம். சமையலறை அடுப்பு மற்றும் உபகரணங்கள் எப்போதும் சமையலறையின் தென்கிழக்கு மூலையில் வைக்கப்படுவதை உறுதி செய்யவும்.

உணவை கவனமாக சேமிக்கவும்

உணவை கவனமாக சேமிக்கவும்

சமையலறையின் வடகிழக்கு மூலையில் தானியங்கள் கொண்ட பெரிய கொள்கலன்கள் அல்லது ஆட்டா, கோதுமை, அரிசி போன்ற மூலப்பொருட்களின் கனமான பாத்திரங்களை சேமிப்பதைத் தவிர்க்கவும். சமையலறை பகுதியின் தெற்கு மற்றும் மேற்கு திசைகளில் உலர் பொருட்களின் கனமான கொள்கலன்களை சேமித்து வைப்பது குடும்பத்தில் செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவர உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

வண்ணங்களை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்

வண்ணங்களை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, குடும்பத்தின் தலைவிதியை தீர்மானிப்பதில் நிறங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமையலறை ஒரு சூடான இடம் என்று நம்பப்படுகிறது. சமையலறையைச் சுற்றி நேர்மறை ஆற்றலை அதிகரிக்க சிறந்த வழி மஞ்சள், பழுப்பு, ஆரஞ்சு வண்ணங்களில் வண்ணம் தீட்டுவது. தீவிர வாஸ்து குறைபாடுகள் ஏற்பட்டால், பச்சை நிறத்தை சுவர்களில் பயன்படுத்தலாம். ஆனால் தீ எதிர்ப்பு கூறுகளைக் குறிக்கும் நீலம் போன்ற வண்ணங்களின் பயன்பாடு வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple ways to remove Vastu dosha from the kitchen in tamil

Here we are talking about the Simple ways to remove Vastu dosha from the kitchen in tamil.
Desktop Bottom Promotion