Just In
- 5 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- 6 hrs ago
நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?
- 8 hrs ago
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
- 9 hrs ago
நீங்க உங்க குழந்தைங்கள சரியாத்தான் வளர்க்குறீங்களா? இத படிச்சு தெரிஞ்சிக்கோங்க...
Don't Miss
- News
திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவிலில் மாசித் தேரோட்டம் - சனிக்கிழமை தெப்பத்திருவிழா
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மரணத்தைப் பற்றி சிவபெருமான் கூறும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?
இந்த உலகத்தில் மறுக்க முடியாத மாற்ற முடியாத ஒரு உண்மை இருக்குமெனில் அது மரணம்தான். மரணம் பற்றிய செய்தி அனைவரின் உள்ளத்திலும் பயத்தை ஏற்படுத்தக்கூடும். பூமியில் பிறந்த அனைவரும் மரணத்தை தழுவிதான் ஆக வேண்டும், இதனை எவராலும் மாற்றமுடியாது. கடவுள் மனிதராக அவதரித்தாலும் மரணத்தை அடைந்துதான் ஆக வேண்டும்.
கருட புராணத்தின் படி மரணம் அடையாத எந்தவொரு உயிரும் மேல் உலகத்தை சென்று அடையமுடியாது. சொர்க்கமோ, நரகமோ எதுவாக இருந்தாலும் உங்கள் பூத உடலுடன் அங்கு செல்ல இயலாது. அதனால்தான் அனைத்து உயிர்களும் மரணத்தை அடையும்படி இயற்கை நிர்ணயித்துள்ளது. மரணத்தை தவிர்க்க முடியாது என்றாலும் அதுகுறித்த பயம் மட்டும் மக்களிடம் இருந்து விலகுவதே இல்லை. இந்த பதிவில் சிவபெருமான் மரணத்தைப் பற்றிக் கூறும் ரகசியங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளாம்.

சிவபுராணம்
சிவபுராணத்தில் கூறியுள்ளபடி, பார்வதி தேவி சிவபெருமானிடம் மரணத்திற்கான அறிகுறிகள் என்ன, மரணம் நிகழப்போவதை எது முதலில் உணர்த்தும், மரணத்தை அடையும் முன் ஒருவர் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாவர் என்று வினவினார். பார்வதி தேவியின் அனைத்து கேள்விகளுக்கும் சிவபெருமான் பதில் கூறியுள்ளதாக சிவபுராணம் கூறுகிறது.

உடல் கூறும் எச்சரிக்கைகள்
சிவபெருமானின் கூற்றுப்படி, ஒரு நபரின் உடல் வெளிறிய மஞ்சள் அல்லது வெள்ளை மற்றும் சிறிது சிவப்பு நிறமாக மாறும் போது அவர் ஆறு மாதங்களில் இறந்து விடுவார் என்று கூறப்படுகிறது. ஒருவர் தன்னுடைய பிம்பத்தை தண்ணீர், எண்ணெய், கண்ணாடி போன்றவற்றில் பார்க்க முடியவில்லை என்றால் அவர்கள் அடுத்த ஆறு மாதத்தில் இறந்து விடுவார்.

அதிக ஆயுளின் அறிகுறி
அரிதிலும் அரிதாக சிலர் அவர்களின் ஆயுளை விட சில காலம் அதிகமாக வாழ வாய்ப்புள்ளது. இறக்கும் நேரத்தை விட ஒரு மாதம் அதிகமாக வாழ்பவர்கள், அவர்களுடைய சொந்த நிழல்களைப் பார்க்க முடியாது, மேலும் அதனை மீறி பார்த்தாலும் அவர்களின் நிழலில் தலை இருக்காது. கனவில் ஆந்தையை பார்த்தாலோ அல்லது அழிக்கப்பட்ட கிராமத்தை பார்த்தாலோ அவர்கள் விரைவில் இறந்து விடுவார்கள்.
MOST READ: இந்த ராசி பெண்களுக்கு இயற்கையாகாவே தைரியம் ரொம்ப அதிகமா இருக்குமாம் தெரியுமா?

பிரபஞ்சம் உணர்த்தும் அறிகுறிகள்
ஒரு நபர் எல்லாவற்றையும் கறுப்பாகக் காணத் தொடங்கினால், அந்த நபரின் மரண நேரம் நெருங்கிவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரின் இடது கை ஒரு வாரத்திற்கு மேலாக இழுத்துக்கொண்டே இருந்தால் அவர்கள் ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே வாழப்போகிறார்கள் என்று அர்த்தம். ஒரு நபரின் வாய், நாக்கு, காதுகள், கண்கள், மூக்கு கல் போல மாறும்போது, அந்த நபரின் மரணம் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கண்டிப்பாக நடக்கும். ஒரு நபர் சந்திரன், சூரியன் அல்லது நெருப்பின் ஒளியைக் காண முடியாதபோது, அந்த நபர் 6 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருக்கப் போகிறார் என்பதைக் குறிக்கிறது.

துருவ நட்சத்திரம்
ஒரு நபரின் நாக்கு திடீரென வீங்கி, பற்களில் சீழ் சுரக்க ஆரம்பித்தால், அந்த நபர் 6 மாதங்களுக்கு மேல் வாழமாட்டார்கள் என்பதை இது குறிக்கிறது. ஒரு நபர் வானத்தில் இருக்கும் துருவ நட்சத்திரத்தை பார்க்க முடியாமல் போனால் அவர்களின் ஆயுள் 3 மாதம்தான் மீதமிருக்கிறது என்று அர்த்தம். ஒரு நபர் சூரியன், சந்திரன் மற்றும் வானத்தை சிவப்பு நிறமாகக் காணத் தொடங்கும் போது, அது 6 மாத காலத்தில் மரணம் காத்திருக்கிறது என்பதைக் குறிக்கிறது.

கைரேகைகள் கூறும் ரகசியம்
மரணத்துடன் தொடர்புடைய வேதங்களில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. வேத காலங்களிலிருந்து, மனிதர்களும் பேய்களும் கடவுளை மகிழ்விப்பதன் மூலம் மரணத்தை வெல்ல முயன்றனர், ஆனால் அவர்கள் மரணமில்லா வாழ்வை பெறத் தவறிவிட்டனர். நாம் எவ்வளவு காலம் வாழப் போகிறோம் என்பதை நம் கையில் உள்ள ரேகைகள் கூறிவிடும். ஒருவர் கையில் இருக்கும் ஆயுள்ரேகை அவர்கள் எவ்வளவு காலம் வாழ்வார்கள் என்பதைக் குறிக்கும். ஆயுள்ரேகையில் வெட்டு இருந்தால் அவர்களுக்கு ஆயுள் குறைவு என்று அர்த்தம்.

மரணத்தை உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஒருவர் மரணம் நெருங்குவதை அறிந்துவிட்டால் என்ன செய்ய வேண்டுமென்று மக்களுக்கு தெரிவதில்லை. தர்ம சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி மரணம் நெருங்கிவிட்டால் மக்கள் அனைத்தையும் உதறிவிட்டு கடவுளிடம் சரணடைய வேண்டும். பாவ காரியங்களை தவிர்த்து புண்ணிய காரியங்களில் ஈடுபட தொடங்க வேண்டும். இந்து மக்களை பொறுத்தவரையில் பகவத் கீதையை படிக்க வேண்டும்.

மரணத்திற்கு பிறகான வாழ்க்கை
சிவபுராணத்தில் கூறியுள்ளபடி மரணத்திற்கு பிறகு சில ஆன்மாக்களுக்கு மட்டுமே உடல் கிடைக்கும். மரணத்தின் ரகசியம் என்பது யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகும். தர்ம சாஸ்திரத்தின் படி ஒருவர் இறந்த பிறகு அவர்களின் ஆன்மா சொர்க்கம் அல்லது நரகத்திற்கு அவர்களின் பாவபுண்ணியத்தை பொறுத்து மாறுபடும். இந்து புராணங்களின் படி இறந்த 84 லட்சம் ஆன்மாக்களில் ஒரு ஆன்மாவிற்கு மட்டுமே மறுபிறப்பிற்கு உடல் கிடைக்கும். ஒரு நபர் இறந்த உடலை தூக்குவதை ஒரு நபர் கனவு கண்டால், அந்த நபர் எதிர்காலத்தில் நிறைய பணம் பெறப்போகிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு நபர் தனது கனவில் ஒருவரைக் கொல்வதைக் கண்டால், அவன் / அவள் நெருங்கிய நண்பரிடமிருந்து நிறைய பணத்தை பெறுவார்கள்.