Latest Updates
-
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும் -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் கட்டாயம் முட்டாளாகத்தான் இருப்பார்களாம் தெரியுமா?
விதுர நீதியில் குறிப்பிட்டுள்ளபடி ஒருவர் முட்டாளா? இல்லையா? என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து விடலாம். முட்டாள்கள் எப்பொழுதும் தன்னுடைய முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
ஒரு மனிதன் புத்திசாலியா? இல்லையா? என்பதை அவர்களின் செயல்பாடுகளும், அவர்கள் எடுக்கும் முடிவுகளும்தான் உணர்த்தும். கடினமான சூழ்நிலையில் தவறான முடிவெடுப்பது உங்கள் வாழ்க்கையையே சிதைக்கக்கூடும். மகாபாரதத்தின் முக்கியநபரான மகாஞானி விதுரர் தனது ஞானத்தைக் கொண்டு விதுர நீதி என்னும் நூலை இந்த உலகிற்கு வழங்கியுள்ளார்.

விதுர நீதியில் குறிப்பிட்டுள்ளபடி ஒருவர் முட்டாளா? இல்லையா? என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடித்து விடலாம். முட்டாள்கள் எப்பொழுதும் தன்னுடைய முட்டாள்தனத்தை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த பதிவில் விதுரர் கூறும் முட்டாள்களின் அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

முதல் அறிகுறி
இவர்கள் வேதங்களை பற்றி அறியாதவர்களாக இருப்பார்கள், அதனை பெருமையாக நினைப்பார்கள். மேலும் காற்றில் கோட்டைக் கட்டுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். தன்னுடைய முயற்சியோ, உழைப்போ இன்றி தனக்கான செல்வத்தை அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக நியாயமற்ற வழிகளைத் தேடுவார்கள்.

இரண்டாம் அறிகுறி
தன்னிடம் இருக்கும் பொருட்களைப் பற்றி நினைக்காமல் மற்றவர்களிடம் இருக்கும் பொருட்களை பார்த்து கவலையும், பொறாமையும் படுபவர்கள், மேலும் தனது நண்பர்களுடன் வஞ்சக உணர்வுடன் பழகுபவர்கள் முட்டாள்கள் என்று அழைக்கப்படுவார்கள்.

மூன்றாம் அறிகுறி
ஆசைப்படக் கூடாத விஷயங்களின் மீது ஆசைப்படுபவர்கள், அதனை நியாயமென கருதுபவர்கள், சக்திவாய்ந்தவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் கண்டிப்பாக முட்டாள்களாக இருப்பார்கள்.

நான்காம் அறிகுறி
தனது எதிரிகளை நண்பர்களை கருதுபவர்களும், தனது நண்பர்களை எதிரியாக கருதுபவர்களும், அவர்களுக்கு தீங்கு செய்பவர்களும் முட்டாள்களாக கருதப்படுகிறார்கள்.

ஐந்தாம் அறிகுறி
தனது எதிர்கால திட்டங்களை பற்றி அனைவரிடமும் கூறிக்கொண்டு, யாரையும் நம்பாமல் அனைவரின் மீதும் சந்தேகம் கொண்டு, குறுகிய நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை நீண்ட நேரம் செய்பவர்கள் நிச்சயமாக முட்டாளாக இருப்பார்கள்.

ஆறாம் அறிகுறி
மற்றொருவரின் வீட்டுக்கு அழையா விருந்தாளியாக செல்பவர்கள், மற்றவர்கள் கேட்காமலேயே அதிகம் பேசுபவர்கள், நம்பக்கூடாதவர்களை நம்புகிறவர்கள், நம்ப வேண்டியவர்களை நம்பாமல் இருக்கிறவர்கள் முட்டாள்களிலேயே மோசமான முட்டாளாக இருப்பார்கள்.

ஏழாம் அறிகுறி
குற்றம் தன் மீது இருந்தாலும் அதனை ஒப்புக்கொள்ளமால் மற்றவர்கள் மீது பழி சுமத்துபவர்கள் மேலும் பலவீனமானவர்கள் மீது கோபத்தை காட்டுபவர்கள் கண்டிப்பாக முட்டாளாக இருப்பார்கள்.

எட்டாம் அறிகுறி
ஒரு மனிதன் தனது சொந்த பலத்தைப் பற்றி அறியாமல் பொருள்களின் மீது ஆசைப்படுபவர்கள், ஒழுக்கம் மற்றும் இலாபம் இரண்டுமே இல்லாமல் போதுமான வழிகளை பின்பற்றாமல் ஆசையை மட்டும் கொண்டிருப்பவர்கள் முட்டாள்கள்தான்.

ஒன்பதாம் அறிகுறி
தகுதி அற்றவர்களுக்கு அறிவுரை கூறுபவர்கள், மோசமான ஆட்களுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்கள், கஞ்ச குணம் கொண்டவர்களிடம் அடைக்கலம் கொள்பவர்கள் புத்தியில்லாதவர்களாக இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications
