Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செல்வந்தர்களாக்கும் சோடசக்கலை நேரம்: நினைத்தது நிறைவேறும்
பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் நேரம் சோடசக்கலை நேரம். சோடசக்கலை தியானம் இருக்க நல்ல நேரம் நாளைய தினம் செப்டம்பர் 14ஆம் தேதி காலை 9.18 முதல் 11.18 மணிவரையாகும். சோடசக்கலை தியானம் இருக்க நினைத்தது
இன்றைய தினம் பவுர்ணமி. ஆவணி மாதம் பவுர்ணமி நாளை காலை முடிந்து பிரதமை தொடங்குகிறது. பவுர்ணமி முடிந்து பிரதமை திதி தொடங்கி சில மணிநேரங்கள் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த நேரத்தில் நாம் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி திதி முடிந்து சோடசக்கலை தியானம் மாறிமாறி ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு ஒரே முறையில் கேட்டது கிடைத்து விடும். இது அவரவர் கர்மவினையைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார். நாளைய தினம் செப்டம்பர் 14ஆம் தேதி காலை 9.18 முதல் காலை 11.18 வரை தியானம் செய்ய நல்ல நேரமாகும்.

அம்பானியும், அதானியும் சேட்டுக்களும், மார்வாடிகளும் அனைத்து துறைகளிலும் செல்வந்தர்களாக இருக்கின்றனர். பணக்காரர்கள் எப்படி பணக்காரர்களாக இருக்கின்றனர். ஏழைகள் ஏன் ஏழைகளாக இருக்கின்றனர் என்று பார்க்க வேண்டும்.
சேட்டுகளும் மார்வாடிகளும் மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர். இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் நறுமணமாக இருக்குமாறு பார்த்துக்கொள்கின்றனர். எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்

சோடசக்கலை தியானம்
அன்னதானம், சுத்தம் தவிர மூன்றாவதாக ஒன்று உள்ளது அதுதான் சோடசக்கலை தியான நேரம். அதைப்பற்றி ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது. பவுர்ணமி பெண்களை அதிகம் பாதிக்கிறது. அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன. சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது. வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது. அதுதான் சோடச கலை!

சித்தர்கள் வழி
இந்த சோடசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது. தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

திருமூர்த்தியின் அருள்
பிரம்மா, விஷ்ணு, சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார். சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும்.
திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் டிரினிட்டி எனச் சொல்வார்கள்.இந்த 16 வது கலையை சித்தர்களும், முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.

தியான நேரம்
அமாவாசை அல்லது பவுர்ணமி எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அமாவாசை திதி அல்லது பவுர்ணமி திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

இறைவனிடம் வேண்டலாம்
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் சகல உயிரினங்களும் ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும். அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல கோரிக்கை வைக்கக் கூடாது. ஒன்று நிறைவேறிய பின் மற்றதைப்பற்றி நினைக்கலாம். இதேமாதிரி தான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும் போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு ஒரே முறையில் கேட்டது கிடைத்து விடும். இது அவரவர் கர்மவினையைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

தியானம் செய்யும் நேரம்
தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம். உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.

எதற்காக தியானம்
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை நினைக்க வேண்டும். பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர, எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறு தீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும் தியான நேரம் எதுவும் சாப்பிடாமல் பட்டினி இருந்தால் கிரகக் கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம். நாளை முதல் தியானத்தை ஆரம்பியுங்கள். உங்கள் எண்ணம் நல்லதாக இருந்தால் உடனே நிறைவேறும்.



Click it and Unblock the Notifications