Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
சனி வக்ர நிவர்த்தியால் ஜனவரி வரை இந்த 4 ராசிகளுக்கு வெற்றியும், செல்வமும் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா?
அக்டோபர் 23 ஆம் தேதி மகரத்தில் வக்ரமாக இருக்கும் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்க தொடங்குகிறார். மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவானால் 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள்.
ஜோதிடத்தில் சனி மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. ஏனெனில் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி மற்றும் இது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகும். அதுமட்டுமின்றி, சனி மனித வாழ்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மெதுவாக நகர்வதால், இதன் தாக்கம் ஒருவரது வாழ்வில் நீண்ட காலமாக இருக்கும். இந்த சனி கிரகம் சனி பகவானைக் குறிக்கிறது. சனி பகவான் பொறுமைசாலி மற்றும் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். இவர் ஒவ்வொருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கக்கூடியவர்.

ஜோதிடத்தில் சனியின் பார்வை மற்றும் சனி இருக்கும் நிலையைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும். சனியின் தீய பார்வை யார் மீது விழுகிறதோ, அவருடைய வாழ்க்கை நரகமாகிவிடும். ஏனெனில் அந்த அளவில் சோதனைகளையும், கஷ்டங்களையும் சனி பகவான் கொடுப்பார். அதுவே சுப நிலையில் இருந்தால் அவரது வாழ்க்கை சிறப்பாக செழிப்பாக இருக்கும்.

2022-இல் சனி பெயர்ச்சி
2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 29 ஆம் தேதி சனி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். அதன் பின் 2022 ஜூன் 05 ஆம் தேதி சனி கும்ப ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கத் தொங்கினார். அதைத் தொடர்ந்து 2022 ஜூலை 12 ஆம் தேதி வக்ர சனி மகர ராசியை அடைந்து பயணிக்கத்தார். இந்நிலையில் அக்டோபர் 23 ஆம் தேதி மகரத்தில் வக்ரமாக இருக்கும் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்க தொடங்குகிறார். அதன் பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்ப ராசியை அடைந்து பயணிப்பார்.
மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவானால் 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
சனி வக்ர நிவர்த்தி அடைந்த பின் மேஷ ராசிக்காரர்களிடம் அன்பாக நடந்து கொள்வார். மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த 10 ஆவது வீடு வணிகம் மற்றும் வேலை தொடர்பானது. எனவே வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இக்காலத்தில் மரியாதை மற்றும் செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த 2 ஆவது வீடு பண வீடு. இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பல பொன்னான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும. தடைபட்ட வேலைகள் சரியான நேரத்தில் முடிக்கப்படும். சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் உங்களின் வேலையை உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள் மற்றும் இது உங்கள் பதவி உயர்வுக்கும், சம்பள உயர்வுக்கும் வழிவகுக்கும்.

மீனம்
மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த 11 ஆவது வீடு வருமானம் மற்றும் லாப வீடாகும். இதனால் இக்காலத்தில் மீன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளின் பல திட்டங்கள் வெற்றியடையும். அதனால் நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வளர்ச்சியை காண்பார்கள். பணம் நிறைய சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில் இந்த காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை தரும் காலமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
