Latest Updates
-
ஆண்டின் கடைசி 3 மாதம் இந்த 3 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த நாட்டில் மக்கள் டிவி பாத்தா சிறை தண்டனை முதல் மரண தண்டனை கூட கொடுப்பார்களாம் - எந்த நாடு தெரியுமா -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம்
சனி வக்ர நிவர்த்தியால் அக்டோபரில் இருந்து இந்த ராசிக்காரர்களின் கனவுகள் நனவாகும்... உங்க ராசி இதுல இருக்கா?
சனி பகவான் 2022 அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். மகர ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.
கர்மாவின் கடவுள் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இவர் ஒருவரின் செயல்களுக்கு ஏற்ப பலனை வழங்கக்கூடியவர். கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியது. சனியின் ராசி மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த சனி 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதில் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சென்றார். பின் ஜூன் 05 ஆம் தேதி கும்பத்தில் வக்ரமானார். அதன் பின் ஜூலை 12 ஆம் தேதி வக்ர சனி மகர ராசியை அடைந்து மகரத்தில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சனி பகவான் 2022 அக்டோபர் 23 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். மகர ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருள் கிடைக்கும். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் நீங்கும். அதுவும் சனி வக்ர நிவர்த்தியாவதால் சில ராசிக்காரர்களின் கனவுகள் நனவாகப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
சனி வக்ர நிவர்த்தியாவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். பங்கு சந்தைகளில் முதலீடு செய்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் பணி பாராட்டப்படும். உயர் அதிகாரிகள் உங்களின் வேலையால் மகிழ்ச்சி அடைவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக வெற்றி பெறுவார்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் எதிர்பாரத்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கெட்ட விஷயங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். நற்செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெற்றிக்கான புதிய வழிகள் திறக்கப்படும். பழைய முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை சிக்கிய பணம் இக்காலத்தில் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புண்டு. உங்களைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications
