For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செப்டம்பர் மாதம் யாருக்கு காதல் மலரும் - மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்

|

சென்னை: செப்டம்பர் மாதம்... செப்டம்பர் மாதம்..., வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் அப்படின்னு பாடப்போறீங்க. நிறைய ராசிக்காரங்களுக்கு கல்யாணம் கூடி வரப்போகுது. சிம்ம ராசியில் ராஜ கிரகம் சூரியன் ஆட்சியில் இருக்க கூடவே தளபதி செவ்வாய், காதல் கிரகம் சுக்கிரன், அறிவு கிரகம் புதன் கூட்டணியில் இருக்காங்க. இந்த கூட்டணி மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் இணைவதால சில ராசிக்காரங்களுக்கு கல்யாணம் கை கூடி வரும்.

நமக்கு எப்ப கல்யாணம் நடக்கும்னு சிங்கிள்ஸ்சும் 90 யூத்ஸ்சும் கவலைப்பட்டுக்கிட்டு இருக்காங்க. கல்யாணமானவங்க பாடு பெரும்பாடா இருக்கு ஏதாவது விஷேசமான்னு கேட்டு கொல்றாங்க. நல்ல காலம் எப்ப பொறக்கும் செப்டம்பர் மாதம் உற்சாகமாக இருக்குமா? கல்யாண கனவு கை கூடுமா? காதல் மணியடிக்குமா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளசுகளே உங்களுக்காகவே இந்த ராசிபலன் படிச்சு என்ஜாய் பண்ணுங்க.

September Month Rasi Palangal 2019 - Aries to Virgo

மேஷம் முதல் கன்னி வரை ஆறு ராசிக்காரங்க படிங்க. அந்த ஆறு ராசிக்கு மட்டும்தானா? எங்களுக்கு எல்லாம் இல்லையா என்று மீதி ஆறு ராசிக்காரங்க கேட்கறீங்க. துலாம் முதல் மீனம் வரை ஆறு ராசிக்காரங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. உங்களுக்கும் வரிசையாக அனுப்பறோம். என்ன சிங்கிள்ஸ் இனி நீங்க கமிட்டட்னு ஸ்டேட்டஸ் போடுற நேரம் வந்தாச்சுங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷம் ராசிக்காரங்க ரொம்ப சுறுசுறுப்பானவங்க நீங்க. வேகமானவங்க காரணம் செவ்வாய் உங்க ராசி அதிபதி. கிரகங்கள் சஞ்சாரம் அற்புதமாக இருக்கு. எதையும் தைரியமாக செய்வீங்க. பூர்வ புண்ணியாதிபதி ஆட்சி பெற்று நான்கு கிரகங்கள் கூட்டணியில் இருப்பதால் வியாபாரம் சிறப்பா இருக்கும். கடன் வாங்க வேண்டாம். மனதில் விரும்பியவரை திருமணம் முடிப்பீர்கள் சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். மாத பிற்பகுதியில் கணவன் மனைவி உறவில் விட்டுக்கொடுத்து போங்க. தேவையில்லாத வாக்கு வாதம் செய்ய வேண்டாம். காதலிப்பவர்கள் கவனம், இல்லாவிட்டால் பிரிவு வரும்.

MOST READ: அட நம்ம ஜெனீலியாவா இது?... அந்த அழகோட ரகசியம் இதுதானாமே!

ரிஷபம்

ரிஷபம்

அழகானவர்கள் நீங்க காரணம் உங்க ராசி அதிபதி சுக்கிரன் அற்புதமாக இருக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் பேச்சில கவனமாக பேசுங்க. வேலை செய்யிற இடத்தில தேவையில்லாம பேசாதீங்க. சனி உங்க வாக்கு ஸ்தானத்தை பார்ப்பதால் பிரச்சினை வரும். சிம்மத்தில் இருக்கிற சுக்கிரன் மாத பிற்பகுதியில் கன்னிராசிக்கு நகர்ந்து கூட்டணி சேருகிறார். அங்கிருக்கும் புதனோடு இணைந்து நீச பங்க ராஜயோகம் அடைகிறார் எனவே பிரச்சினையில் இருந்து தப்புவீர்கள். 25 ஆம் தேதிக்கு மேல் உணர்ச்சி வசப்பட்டு எதையும் முடிவு செய்ய வேண்டாம். பெண்களே அறிமுகம் இல்லாத ஆண்களிடம் எச்சரிக்கையாகவும் ஜாக்கிரதையாக இருங்க.

மிதுனம்

மிதுனம்

உங்க தைரிய ஸ்தானம் நல்லா இருக்கு எடுத்த காரியங்கள் நல்லா நடக்கும். ஆசிரியர்கள், மீடியாவில வேலை செய்யிறவங்களுக்கு ரொம்ப நல்ல மாதம். மிகச்சிறந்த யோகங்கள் நடைபெறும். உங்க ராசி அதிபதி புதன் ஆட்சி உச்சம் அடையப்போகிறார். கூடவே சுக்கிரன் இணைவதால் பிசினஸ்ல லாபம் வரும். தொழில்ல லாபம் வரும். ரொம்ப அற்புதமான மாதம். உடல் நலத்தில அக்கறையோட இருங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசிச்சு முடிவெடுங்க. கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்க இல்லாட்டி கொஞ்சும் கஷ்டம்தான்.

MOST READ: கணவன் மனைவி ஒற்றுமை ஏற்பட... செல்வம் பெருக இதை முக்கியமா செய்யுங்க

கடகம்

கடகம்

தன வாக்கு ஸ்தானம் ரொம்ப வலிமையாக இருக்கு. உங்க பேச்சுக்கு ரொம்ப மதிப்பு இருக்கும் பணவரவு அற்புதமாக இருக்கும். சாமர்த்தியமாக பேசுவீர்கள். சூரியன், புதன் இணைவதால் வருமானம் கூடும். மகிழ்ச்சியான கால கட்டம் குடும்ப வாழ்க்கையில் உற்சாகம் கூடும் முகத்தில் அழகும் பொலிவும் கூடும். வேலையில கவனமாக இருங்க. முதுகு நோய் வரும் எச்சரிக்கை காரணம் வேலைப்பளு அதிகரிக்கும். உடல் நலத்தில முக்கியத்துவம் கொடுத்து எச்சரிக்கை பண்ணுங்க. பணம் விரையமாகும். பணம் முதலீடு செய்யும் போது கடக ராசிக்காரங்க கவனம். மாத பிற்பகுதியில் கிரகங்கள் இடமாற்றம் சில மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் தரும். வாட்ஸ்அப் சேட்டிங்கில் கவனம் பிற ஆண்களுடன் பழகும் போது கவனமாக இருங்க.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களே மாத தொடக்கத்திலேயே உங்க ராசியில நான்கு சிரகங்கள் இருப்பதால் யோகம்தான் உங்களுக்கு. நல்ல வேலை கிடைக்கும், பணவருமானம் அபரிமிதமாக இருக்கு. சிலர் விலை கூடிய செல்போன் வாங்குவீங்க. கார், பைக் வாங்குவீங்க. மாத பிற்பகுதியில உங்க ராசியில் இருந்து கிரகங்கள் இரண்டாம் வீடான கன்னிக்கு போறதால கல்யாண யோகம் கூடி வருது. கல்யாண கனவுகள் கை கூடி வரும். காதல் மலரும் நன்மைகள் நிறைந்த மாதம். பெண்கள் உற்சாகமாக இருப்பீங்க. இல்லத்தரசிகள் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். சிம்ம ராசிக்காரர்கள் இந்த மாதம் உற்சாகமாக இருப்பீர்கள் உடல் நலத்தில கொஞ்சம் கவனம் வையுங்க.

MOST READ: விநாயகர் சதுர்த்திக்கு 7 வகை கொழுக்கட்டை சூப்பரா சிம்பிளாக செய்வது எப்படி?

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரங்களே இந்த மாதம் நீங்க விரைய செலவுகள் வரும், காரணம் உங்க ராசிக்கு விரைய ராசியில் நான்கு கிரகங்கள் இருக்கு. மாத பிற்பகுதியில நல்ல நிலைமை ஏற்படும் காரணம் உங்க ராசிநாதன் ஆட்சி உச்சம் பெற்று உங்க ராசியில அமர்கிறார். மாத பிற்பகுதியில் நல்ல வாய்ப்புகள் வரும். பேச்சிற்கு நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும். தொழிலதிபரிகள், எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கு அற்புதமான மாதம். மாணவர்களுக்கு வெற்றிகரமான மாதம். படிக்க நல்ல ஸ்கோப் இருக்கு வெற்றிகள் தேடி வரும். வெளிநாடு வாய்ப்பு கை கூடி வரப்போகிறது உற்சாகமான மாதம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

September Month Rasi Palangal 2019 - Aries to Virgo

Marriage and love is important, so the relationship with our life partner is very important. Now, as the September 2019 is approaching, so we have come up with zodiac sign wise predicions of your love life in the upcoming month and know the future of your relationships.
Story first published: Thursday, August 29, 2019, 11:25 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more