Latest Updates
-
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்..
சிம்ம ராசிக்காரர்களைப் பற்றிய ரகசியங்கள்!
சிம்ம ராசியானது சிங்கத்தின் அடையாளத்தால் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக சிங்கமானது எதிர்க்க கடினமாக இருக்கும் ஆற்றலை கொண்டிருப்பதால், இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் வலிமையானவர்களாக காணப்படுகின்றனர்.
ராசிகளில் சிம்ம ராசிக்கு தனிச்சிறப்பு உண்டு. பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் சில நேரங்களில் எளிமையானவர்களாகவும், சில சமயங்களில் கோபக்காரர்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் சிம்ம ராசியின் இயல்பு மற்றும் ஆளுமை பலருக்கும் சரியாக தெரிவதில்லை. சிம்ம ராசியானது சிங்கத்தின் அடையாளத்தால் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக சிங்கமானது எதிர்க்க கடினமாக இருக்கும் ஆற்றலை கொண்டிருப்பதால், இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் வலிமையானவர்களாக காணப்படுகின்றனர்.

மேலும் இவர்கள் மிகவும் பிடிவாத குணத்தைக் கொண்டவர்கள் மற்றும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான ஆற்றலைக் கொண்டவர்கள். இதுப்போன்று சிம்ம ராசிக்காரர்களைப் பற்றிய பல உண்மையான குணங்களை இப்போது காண்போம்.

பரந்த மனதைக் கொண்டவர்கள்
சிம்ம ராசிக்காரர்கள் அன்பானவர்கள். தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் மிகவும் அன்பாகவும் தாராள மனதைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். உதவி என்று வருபவர்களுக்கு எப்போதும் உதவ தயாராக இருப்பார்கள். ஆனால் இவர்களை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள முயன்றால், அவர்களிடம் உண்மையான கோபத்தை வெளிக்காட்டுவார்கள்.

நேர்மையானவர்கள் மற்றும் விசுவாசமானவர்கள்
சிம்ம ராசிக்காரர்களைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மை இவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள் மற்றும் நேர்மையானவர்கள். இவர்கள் எதிலும் நேர்மையாக இருப்பார்கள். இவர்களை ஒருவர் மனதார நம்பிவிட்டால், அவருக்கு வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக இருப்பார். எனவே இந்த ராசிக்காரர்களின் உறவைப் பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

தலைமை பண்புகள்
சிம்ம ராசிக்காரர்கள் பலரை தலைமைப் பதவிகளில் இருப்பதைக் காணலாம். சிலர் உயர் அதிகாரிகளின் நம்பிக்கையான ஒருவராக இருப்பதை காணலாம். ஆனால் இவர்கள் ஒரு குழுவிற்கு தலைவராக இருந்தால், அந்த குழு எப்போதும் வெற்றியைக் காணும் என்பதை மறுக்க முடியாது.

வேடிக்கையாக பேசுவார்கள்
சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள விரும்புவார்கள். இவர்கள் நல்ல நண்பர்களுடன் அழகான உறவுகளை வைத்துக் கொள்வதை தவிர எதையும் அதிகம் விரும்பமாட்டார்கள். இவர்கள் எப்போதும் சுவாரஸ்யமாகவும், வேடிக்கையாகவும் பேசக்கூடியவர்கள்.

சுறுசுறுப்பானவர்கள்
ராசிகளிலேயே மிகவும் சுறுசுறுப்பான ராசி என்றால் அது சிம்ம ராசி. சிம்ம ராசிக்காரர்கள் சோர்வடைந்து இருப்பதைக் காண முடியாது. ஏனெனில் இவர்களுக்கு சோம்பல் பிடிக்காது. இவர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது ஒரு வேலையை செய்தவாறு இருப்பார்கள். இவர்களிடம் ஒரு வேலையைக் கொடுத்தால், அதை வெற்றிகரமாக செய்து முடியாமல் ஓயமாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
