For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணப் பிரச்சனை நீங்கணுமா? அப்ப தண்ணீர் மந்திரம் போடுங்க...

நமக்கு தேவையான பணம் தங்கு தடையில்லாமல் நம்மை தேடி வரவேண்டுமானால், குடிக்கும் தண்ணீரை முறையாக பயன்படுத்தினால், வராது என்று நினைத்து கை கழுவிய பணமும் தானாகவே நம் வீட்டுக்கதவை தட்டும்.

|

குடிக்கும் தண்ணீரையும் நாம் முறையாக பயன்படுத்தினால், அதற்கேற்ற பலா பலன்கள் தானாகவே நம்மைத் தேடி வரும் என்பது நம்பிக்கையாகும். கிராமங்களில் யாருக்காவது மந்திரிப்பதாக இருந்தாலோ, அல்லது குழந்தைகள் சரிவர சாப்பிடாமல் இருந்தாலோ, ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு மந்திரித்து தலையை மூன்று முறை சுற்றி காற்றில் துப்புவிட்டு முகத்தில் தண்ணீரால் வேகமாக அறைவார்கள். அப்படி செய்யும்போது, துஷ்ட சக்திகள் ஏதாவது இருந்தாலும் தண்ணீரைக் கண்டு ஓடிவிடும். இதை பாட்டி வைத்தியம் என்றும் சொல்வதுண்டு. இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு எளிமையான பாட்டி வைத்திய முறையாகும்.

Secret Of Drinking Water Power

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. இந்த உலகமே நீரினால் சூழப்பட்டது தான். பூமிப்பந்தானது 70 சதவிகிதம் நீராலும், மீதி 30 சதவிகிதம் மட்டுமே நிலப்பரப்பாலும் உண்டானது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. இருந்தாலும் நாம் பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கும் நன்னீரின் அளவு வெறும் 3 சதவிகிதம் மட்டுமே. அதுவும் தற்போது வெகு வேகமாக குறைந்துகொண்டே செல்கிறது.

MOST READ: மகா சிவராத்திரி 2020: சிவனை நினைத்து விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்...

ஜப்பானில் ஒரு ஆராய்ச்சியாளர் தண்ணீரைப் பற்றி ஆராய்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் ஒரு கண்ணாடிக் குடுவையில் சுத்தமான தண்ணீரை நிரப்பி மூடி வைத்து, அதிக சத்தத்துடன் கூடிய இசையை சிறிது நேரம் ஓட விட்டு, பின்னர் அந்த தண்ணீரை ஆராய்ச்சி செய்து பார்த்தார். அப்போது அந்த தண்ணீரின் மூலக்கூறு கட்டமைப்பானது ஒழுங்கற்ற தன்மையில் இருந்தது. இது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீரின் மூலக்கூறு கட்டமைப்பு

தண்ணீரின் மூலக்கூறு கட்டமைப்பு

அதே போல், மீண்டும் வேறு ஒரு கண்ணாடிக் குடுவையில் சுத்தமான தண்ணீரை நிரப்பி மூடி வைத்து, இனிமையான ஒரு மெல்லிசையை சிறிது நேரம் ஓடவிட்டு, பின்பு அந்த தண்ணீரை ஆராய்ச்சி செய்து பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அந்த தண்ணீரின் மூலக்கூறு கட்டமைப்பானது ஒரே சீராக அமையப்பெற்றிருந்தது. இதில் இருந்து நமக்கு தெரிவது என்னவென்றால், தண்ணீரின் மூலக்கூறுகளுக்கு தம்மைச் சுற்றி நடக்கும் நடப்புகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் பண்பை உடையது என்று.

தண்ணீரைப் பழிக்காதே

தண்ணீரைப் பழிக்காதே

அதனால் தான், நம் முன்னோர்கள் தண்ணீரை பயன்படுத்தும் முறையையும், தண்ணீரைக் குடிக்கும் முறையையும் அந்தக் காலத்திலிருந்தே முறைப்படுத்தி வைத்துள்ளனர். அதனால் தான் நம் முன்னோர்கள் தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காதே என்று தண்ணீரை முறையாக பயன்படுத்தச் சொல்லியிருக்கின்றனர். தண்ணீரை நாம் பயன்படுத்தும் முறையைப் பொருத்து அதற்கேற்ற பலா பலன்கள் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம்.

தண்ணீர் சிக்கனம்

தண்ணீர் சிக்கனம்

பொதுவாக தண்ணீரில் குளிக்கும் தண்ணீரில் எச்சில் துப்பவோ அசிங்கப்படுத்தவோ கூடாது என பெரியவர்கள் சொல்வதுண்டு. அதே போல் குடிக்கும் தண்ணீரையும் நாம் முறையாக பயன்படுத்தினால், அதற்கேற்ற பலா பலன்கள் தானாகவே நம்மைத் தேடி வரும் என்பது நம்பிக்கையாகும். நம்முடைய அன்றாட வாழ்க்கைச் சக்கரம் தங்கு தடையில்லாமல் ஒடவேண்டுமானால் அதற்கு அடிப்படைத் தேவை பணம் தான். அதனால் தான் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்து என்று சொல்லியிருக்கிறார்கள்.

எதிர்பாராத பணவரவு வேண்டுமா

எதிர்பாராத பணவரவு வேண்டுமா

நமக்கு தேவையான பணம் தங்கு தடையில்லாமல் நம்மை தேடி வரவேண்டுமானால், குடிக்கும் தண்ணீரை முறையாக பயன்படுத்தினால், வராது என்று நினைத்து கை கழுவிய பணமும் தானாகவே நம் வீட்டுக்கதவை தட்டும். அதே போல் எதிர்பாராத பணவரவிற்கும் ஒரு எளிமையான வழிமுறையை முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். அதை முறையாக செய்து வந்தால், வராத பணமும் எதிர்பாராத பணமும் நம் கையை வந்தடையும்.

மந்திரத்தை ஈர்க்கும் சக்தி

மந்திரத்தை ஈர்க்கும் சக்தி

தண்ணீருக்கு மந்திரத்தை வெகு எளிதாக ஈர்க்கும் சக்தி உண்டு. இந்துக்கள் தண்ணீரை கங்கையாக பாவித்து வணங்கி வருவது அனைவருக்கும் தெரியும். இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களிலும், யாகம் உள்ளிட்ட அனைத்து தெய்வ காரியங்களுக்கும் தீர்த்தமாக பயன்படுத்துகிறார்கள். கோவில் மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யும் போது கடைசியில் நீரை நைவேத்தியம் செய்கிறார்கள். தண்ணீருக்கு சுற்றிலும் நடப்பதை கிரகித்துக்கொள்ளும் தன்மை உண்டு என்று நாம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கின்றோம்.

துஷ்ட சக்திகள் அண்டாது

துஷ்ட சக்திகள் அண்டாது

இன்றைக்கும் கிராமங்களில் யாருக்காவது மந்திரிப்பதாக இருந்தாலோ, அல்லது குழந்தைகள் சரிவர சாப்பிடாமல் இருந்தாலோ, ஒரு டம்ளர் தண்ணீரைக் கொண்டு மந்திரித்து தலையை மூன்று முறை சுற்றி காற்றில் துப்புவிட்டு முகத்தில் தண்ணீரால் வேகமாக அறைவார்கள். அப்படி செய்யும்போது, துஷ்ட சக்திகள் ஏதாவது இருந்தாலும் தண்ணீரைக் கண்டு ஓடிவிடும். இதை பாட்டி வைத்தியம் என்றும் சொல்வதுண்டு. இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு எளிமையான பாட்டி வைத்திய முறையாகும்.

ஒரு டம்ளர் தண்ணீர்

ஒரு டம்ளர் தண்ணீர்

இவ்வளவு பெருமை வாய்ந்த தண்ணீரை நாம் முறையாக குடித்தால், நமக்கு கிடைக்கும் பலன் அளப்பரியதாகும். பெரும்பாலானவர்கள், காலையில் எழுந்தவுடனே பெட் காஃபி குடித்துவிட்டு தான் முகத்தையே கழுவுவார்கள். ஆனால், கிராமத்தில் காலையில் எழுந்த உடனே முதலில் பல் துலக்கிவிட்டு, உடனடியாக ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீரையே குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தண்ணீர் மந்திரம்

தண்ணீர் மந்திரம்

அப்படி வெறும் வயிற்றில் தண்ணீரை குடிக்கும் போது, வெறுமனே தண்ணீர் குடிக்காமல், முதலில் ஒரு டம்ளர் தண்ணீரை கையில் வைத்துக்கொண்டு, நாம் வடக்கு திசையைப் பார்த்து நின்று கொள்ளவேண்டும். அப்போது கண்களை மூடிக்கொண்டு மனதிற்குள் 'ஏராளம்...தனம் தானியம் தாராளம்' என்ற மந்திரம் போல் 11 முறை உச்சரிக்க வேண்டும். பின்பு வாய் திறந்து தண்ணீரில் 3 முறை காற்றை ஊதிக்கொண்டு, கண்ணை மூடிக்கொண்டே டம்ளரில் உள்ள தண்ணீர் முழுவதையும் குடிக்க வேண்டும்.

வராத பணம் கைக்கு வரும்

வராத பணம் கைக்கு வரும்

நாம் இவ்வாறு தினமும் குடித்து வந்தால், நாம் யாருக்காவது கொடுத்த கடன் வராமல் நிலுவையில் இருந்தாலும், வரவே வராது என்று கைகழுவிவிட்ட பணமும் கூட நம் வீட்டுக் கதவைத் தட்டும். யாரிடமாவது கடன் தொகையை வசூலிக்க செல்வதாக இருந்தால் கூட, அன்றைக்கு காலையில், அந்த மந்திரத்தை சொல்லிவிட்டு தண்ணீரில் காற்றை 3 முறை ஊதி பின்பு அந்த தண்ணீரை குடித்தால், நிச்சயம் அந்தப் பணம் நம் கைக்கு வந்து சேரும் என்பது ஐதீகம். எனவே நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை உச்சரித்து தண்ணீரை பருகினால் நிச்சயம் அதற்கேற்ற பலன் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Of Drinking Water Power

It is the belief that if we use our drinking water properly, the fruits of that will automatically come to us. When someone in the villages is enchanted, or when the children are not eating properly, a tumbler spells the water three times in the air and slaps the face with water. In doing so, the evil forces, whatever the case, will run away from the water. It is also called grandmother's remedy.
Story first published: Wednesday, February 12, 2020, 11:55 [IST]
Desktop Bottom Promotion