Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
சனி உதயமாவதால் மார்ச் 9 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
கும்பத்தில் சனி உதயமாகும் போது, அதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றமும் கிடைக்கப் போகிறது. இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
Saturn Rise In Aquarius On March 2023: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவராக கருதப்படுகிறார். மேலும் கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம் என்பதால், அதன் தாக்கம் ஒருவரது வாழ்வில் நீண்ட காலம் இருக்கும். சனியின் இயக்கத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் 2023 ஜனவரி 17 ஆம் தேதி சனி தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு வந்தார். அதன் பின் ஜனவரி 30 ஆம் தேதி கும்ப ராசியில் சனி அஸ்தமனமானார். அதைத் தொடர்ந்து மார்ச் 09 ஆம் தேதி சனி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார்.

பொதுவாக கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருக்கும் போது, அதனால் பெறும் நற்பலன்கள் தாமதமாகும். ஆகவே கும்பத்தில் சனி உதயமாகும் போது, அதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றமும் கிடைக்கப் போகிறது. இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புக்கள் கிடைக்க வாய்ப்புள்ளன. முக்கியமாக தந்தையுடனான உறவில் இனிமை அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் மார்ச் 09 முதல் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடிய காலமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழிலில் நல்ல முன்னேற்றமும் இருக்கும். முக்கியமாக உங்களின் நிதி நிலை மேம்படும். வணிகர்களுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் தொடங்கலாம். மொத்தத்தில் இக்காலம் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பொருள் மகிழ்ச்சி பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசியல் மற்றும் வணிகத்தில் இருப்பவர்கள் இக்காலத்தில் நல்ல பலனைப் பெறலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இனிமையாக இருக்கும். இக்காலகட்டத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் வெற்றி காண்பார்கள். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகத்தை செய்து வருபவர்களுக்கு இக்காலம் அற்புதமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications