Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க..
சனி வக்ர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு... உங்க ராசி இதுல இருக்கா?
2022 சனி வக்ர பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்கள் அற்புத பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, 9 கிரகங்களில் சனி பகவான் ஒவ்வொருவரின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தரக்கூடியவர். அதாவது ஒருவர் நல்ல செயல்களை செய்தால் அவர்களுக்கு நற்பலன்களையும், தீய செயல்களை செய்பவர்களுக்கு கெடுபலன்களையும் தருபவர். இத்தகைய சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற இவர் எடுத்துக் கொள்ளும் காலம் 2 1/2 ஆண்டுகள் ஆகும். சமீபத்தில் சனி பகவான் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறினார்.

தற்போது சனி பகவான் ஜூன் 05 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ரமாகிறார். அதாவது பின்னோக்கி நகர தொடங்குவார். இது 12 ராசிகளிலும் ஒருசில தாக்கத்தை ஏற்படுத்தும். சனியின் இந்த வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சிலருக்கு மோசமானதாகவும் இருக்க வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் 2022 சனி வக்ர பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்கள் அற்புத பலன்களைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். வருமான வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் நிறைவேறாத ஆசை இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும். ஆனால் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பல சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள். முக்கியமாக கடின உழைப்பிற்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும்.

கும்பம்
சனி பகவான் கும்ப ராசியின் முதல் வீட்டில் வக்ரமாகிறார். சொந்த ராசியின் முதல் வீட்டில் சனி வக்ரமாவதால், தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு இக்காலத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வசதிகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். செல்லும் இடங்களில் எல்லாம் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறுவார்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.



Click it and Unblock the Notifications
