Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
2023-ல் கும்ப ராசிக்கு செல்லும் சனியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகுது...
2023 ஆம் ஆண்டில் கும்பம் செல்லும் சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிஷ்டமானதாக இருக்கும்.
நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வார். மேலும் கிரகங்களின் சனியின் தாக்கம் மனித வாழ்க்கையில் அதிகமாக இருக்கும். ஏனெனில் இவர் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கிறார். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு சென்ற சனி பகவான், வக்ரமாகி மீண்டும் மகர ராசியை அடைந்து, தற்போது மகர ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி 17 ஆம் தேதி மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். கும்பம் செல்லும் சனி பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், இந்த சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிஷ்டமானதாக இருக்கும். இப்போது கும்ப ராசிக்கு செல்லும் சனியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாடுகளின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த சனி பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். இந்த ஆண்டில் பணத்தை நன்கு சேமிக்க முடியும். குடும்ப விஷயம் மற்றும் வேலை விஷயமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். இப்பயணத்தால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இது திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மை வீடாக கருதப்படுகிறது. ஆகவே இக்காலத்தில் கூட்டு தொழிலில் நல்ல வெற்றியையும், லாபத்தையும் காண்பீர்கள். இந்த காலகட்டத்தில் நிதி நிலை வலுபெறும். பணியிடத்தில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையின் உதவியுடன் நல்ல பணத்தைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் திருமணம் நடைபெறும்.

மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சனி பகவான் செல்கிறார். இது இழப்பு மற்றும் செலவின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த சனிப் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்கள் நோயால் செவுகளை செய்ய வேண்டியிருக்கும். ஆயினும் இக்காலத்தில் உங்களால் நன்கு சேமிக்க முடியும். குடும்பத்துடனான உறவுகள் வலுவாக இருக்கும். இக்காலத்தில் அவர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். மேலும் இக்கால கட்டத்தில் புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்கும் எண்ணம் அதிகரித்து, அதை வாங்க முயற்சித்து வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
